Tuesday, May 2, 2023

கருத்து வேறுபாடு பல தந்தாலும் பிரிவை தராத கிரக அமைப்பு

🍁 பலதரப்பட்ட கருத்து வேறுபாடு இருந்தாலும் பிரிவு தராத கிரக அமைப்பு 🍁 #hazan 

மணவாழ்வில் பல தரப்பட்ட கருத்து வேறுபாடு, பிரச்சனை , இருந்தாலும் பிரிவு இல்லாமல், குடும்ப வாழ்வை கொண்டு செல்லும் கிரக அமைப்பு எப்படி இருக்கும்..? வாங்க பார்க்கலாம்



 

ரிஷப லக்னம், துலா ராசி. 

வாழ்க்கை துணையை குறிக்கும் ஏழாம் வீட்டில் லக்னத்திற்கு ஏழில் ஆகாத 8 அதிபதி குரு , அஷ்டமாதிபதி ஏழாம் வீட்டில் இருப்பது நிச்சயமாக மன கஷ்டத்தை தரும். குணத்தாலும் செயலாகும் மாறுபாடு கொண்ட துணையை தரும். 

ராசிக்கு ஏழின் செவ்வாய் சுக்ர இணைவில் சுப தொடர்பில் உச்சமாகி அவர் தனது பார்வையில் ராசிக்கு ஏழாம் வீட்டை பார்வை செய்கிறார். ராசிக்கு ஏழாம் வீட்டை வலுபடுத்துகிறார்.

இருப்பினும் ராசியில் உச்சமாகும் சனி ராசிக்கு ஏழாம் வீட்டை பலவீனபடுத்துகிறார். 

ராசிக்கு ஏழாம் வீட்டை செவ்வாய் பார்த்து வலுப்படுத்த மறுபக்கம் சனி பலவீனபடுத்துகிறார். 

இங்கே சுக்ரன் சனி பாதகாதிபதியும் ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனையாக உள்ளார்கள்.

லக்ன ராசிக்கு ஏழாம் வீட்டை குருவும் , உச்ச சனியும் பாதிக்கும் நிலையில் , லக்ன ராசிக்கு ஏழாம் அதிபதியான செவ்வாய் உச்சமாகி இரண்டு நிலைகளையும் சரிகட்ட பார்க்கிறார். மணவாழ்வை நீட்டிக்கும் நிலையை செவ்வாய் தருகிறார். #padmahazan 

வாழ்க்கை துணை உண்டு ஆனால் அவரால் பல கஷ்டங்களை தரும் , கருத்து மோதலை தரும் , ஆனால் அத்தனை அமைப்புகளையும் சகித்து கொண்டு அனுசரித்து போகும் சூழலையும் இதே கிரக அமைப்புகள் உருவாக்கும். 

சனி மற்றும் செவ்வாய் இருவரது இணைவு பரிவர்த்தனையாக சுக்ரன் தொடர்பு கொள்வதால்  

மஹாலெக்ஷ்மி , காலபைரவர் , ஆஞ்சநேயர் , மற்றும் முருக பெருமான் வழிபாடு பாதிப்பை குறைக்கும். 

பின்குறிப்பு : 

இது தனி ஜாதகத்தின் முழு கிரக அமைப்பு தசா புத்தி ஏற்ப எடுக்கும் பலன்கள், நட்சத்திர பலனும் இதில் அடங்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...