பொதுவாக ஏழாம் அதிபதி நீசம் பெறுவது வாழ்க்கை துணை சார்ந்த பாதிப்பை காட்டும்.
1). வாழ்க்கை துணை உடல்நல பாதிப்பை கொண்டவர்,
அல்லது
2). ஜாதகர் உடனான ஒற்றுமை இல்லாத வேறுபட்ட குணம் கொண்ட வாழ்க்கைல துணை
அல்லது
1969 , 1970 களில் பிறந்த இரு கடக லக்ன ஜாதகங்கள் கிடைத்தன , இரு ஆண் ஜாதகர்களுக்குமே கடக லக்னம் ஆகி ஏழாம் அதிபதியான சனி 10ல் நீசம் வக்ரமும் கூட ,
ஏற்கெனவே என் பதிவுகளில் எழுதி உள்ளேன் , தன் வீட்டை பார்க்கும் பாவ கிரகம் அந்த வீட்டை வலுபடுத்தும் ஆனால் அங்கே பாதிப்பையும் கொடுக்கும். #padmahazan
இங்கே ஏழாம் அதிபதியான சனி நீசம் பின் வக்ரமும் பெற்று தன் வீட்டை தானே பார்வை செய்து உள்ளார்,
ஓர் ஆணின் மனைவிக்கு வயிற்றில் tumor கட்டி அறுவை சிகிச்சை செய்து மனைவியை காப்பாற்றி உள்ளார் , எப்போது..? ஜாதகரது சனி தசா சுய புத்தியில் ,
மற்றொரு ஆணின் மனைவிக்கு தலையில் tumor கட்டி அறுவை சிகிச்சை செய்து மனைவி நன்றாகி வருகிறார், எப்போது..? ஜாதகரது சனி தசா குரு புத்தியில் ,
ஏழாம் அதிபதி நீசம் பெற்றால் மனைவிக்கு பாதிப்பு , இருப்பினும் தன் வீட்டை பார்வை செய்வதால் மனைவி கூடவே இருக்கனும் ஆனால் பாதித்து பின் நன்றாக இருக்கனும் என்கிற அமைப்பை சனி தருகிறார்.
இதில் மற்றொரு ஒற்றுமை என்ன என்றால் , இரு கடக லக்ன பத்தில் சனி வக்ரமாகி அரசு இயந்திரம் சார்ந்த இரும்பு மெக்கானிக்கல் துறையில் அரசு பணியில் உள்ளார்கள். அதை மற்றொரு பதிவில் நேரம் இருக்கும் போது விளக்குகிறேன்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment