Wednesday, May 24, 2023

சந்திர சுக்ரன் இணைவு

🍁 சந்திரன் சுக்ரன் இணைவு 🍁 

🎯ஜாதகரது மனம் எண்ணம் அதிகபடியாக கலை , ஆடல் , பாடல் , நாடகம் மீது ஆர்வம் தரும். 

🎯ஜாதகர் ஏதோ ஓர் சினிமா நடிகரோ நடிகயோ எழுத்தாளரோ இசையமைப்பாளருக்கோ பயங்கரமான விசிறியாக இருப்பாங்க , உண்மையான fans இவங்கதான். 

🎯இவர்களது மனம் எளிதாக காதல் வயபடும் அல்லது பிரியம் கொண்டவர்கள் மீதான எண்ணம் சிந்தனை அதிகபடியாக மனதில் இருக்கும். 

🎯சந்திரன் சுக்ரன் இணைவு காதல் வழி சில மன கஷ்டங்களை அல்லது புரிந்து கொள்ள முடியாத சில ஈகோ பாதிப்பை தரும் , ஆனாலும் மீண்டும் அதே நபர் மீது காதலோ பிரியமோ கூடவே செய்யும். #padmahazan 

🎯மனம் அதிகபடியாக சினிமா கேளிக்கை ஆடம்பரம் மீது செலவு நேரம் விரையத்தையும் தரும். 

🎯சந்திர சுக்ரன் இணைவில் சுக்ரனோ சந்திரனோ ஆட்சி உச்சம் பெறும் போது முகம் பொழிவாக, அல்லது வசீகரிக்கும் முக தோற்றத்தை , முக பாவனை தந்துவிடும். 

🎯 பெண்கள் அதிகபடியாக உள்ள குடும்பம் அல்லது சொந்தம், வேலை தொழில் இடங்களில் அதிகபடியாக பெண்கள் இருப்பது போன்ற பெரும்பாலான பெண்கள் சார்ந்த சூழலில் வாழ வைக்கும். 

🎯சுக்ரன் சந்திர இணைவில் புதன் இணையும் போது கலைத்துறையில் சினிமா, நாடகம், எழுத்து துறை , பத்திரிக்கை துறைகளில் அதீத கற்பனை திறன் படைப்பாற்றலில் சிறப்பாக இருப்பார்கள். #padmahazan 

🎯சந்திர சுக்ரன் இணைவில் சந்திர வளர்பிறை ஆக இருப்பது நன்மை , தேய்பிறை சந்திரன் ஜாதகரை பெருமளவு பாதிக்க செய்வார் , 

🎯சந்திர சுக்ரன் இணைவை சனி பார்வை செய்யவோ ராகு கேது இணைவோ இருக்க கூடாது , தெளிவில்லாத சிந்தனை, சந்தேக குணம் , மணவாழ்வில் பாதிப்பை தரும். 

🎯சூரியனுக்கு 2 மற்றும் 3 ராசிகளில் உண்டாகும் சந்திர சுக்ரன் இணைவு மேலே சொன்ன வழிகளில் நன்மை தரும். 

PADMAHAZAN SRI VISHNU VISHNU WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...