🍂 இளம் வயதில் வரும் சுக்ர தசாவும் ராகு தசாவும் ஒருவரை பெரிய அளவில் எதிர்கால வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் , பிறர் கூறும் அறிவுரை , சுய கௌரவம் விட்டு நினைத்ததை முடிக்கும் குணத்தை சுக்ர அல்லது ராகு தசா தரும்.
🍂ராகு மற்றும் சுக்ரன் இந்த இரண்டு கிரகமும் மற்றவர்கள் சொல்வதை பொருட்படுத்தாத குணத்தை அதிகபடியாகவே வெளிப்படுத்தும்.
ராகு தசா அல்லது சுக்ர தசா நடப்பவர்களிடம் இதை நாம் வெளிப்படையாக பார்க்கலாம்.
🍂ஒரு படிக்கும் வயதுடைய சிறு வயதில் வரும் ராகு, படிப்பில் நாட்டம் குறைவு, டெக்னாலஜி ஈர்ப்பு , computer editing போன்ற படிப்பில் திசை திருப்பும். படிப்பு வாழ்க்கை மீதான பிறர் சொல்லும் அறிவுரை ஆலோசனை கேட்கமாட்டார்கள். #padmahazan
🍂ஆசைபட்ட செயலை அல்லது விருப்பமான படிப்பை சேர்ந்தெடுப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். நடைபெறும் ராகு கொஞ்சம் கெடுபலனை தரும் நிலையில் இருந்தால் பின்னாளில் சுய ஆசையே அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும் விதமாக அமைந்து விடும்,
🍂பல 90 kids civil engineering போன்ற படிப்பை அவர்களது அவயோக ராகு 6 8 அதிபதியான செவ்வாய் தொடர்பில் பெறும் போது ஆசைபட்டு படித்து பின்னாளில் வேலை வாய்ப்பை இழந்து அதே ராகு தசா கஷ்டபடுத்துவதை பார்க்க முடிகிறது.
🍂அதே படிக்கும் வயதில் வரும் சுக்ர தசா சினிமா , காதல் , காமம் , நண்பர்களோடு அதிகபடியான நேரம் செலவிடுவது போன்ற வழிகளில் படிப்பில் திசை திருப்பும்.
🍂இதே தசாக்கள் மத்திம வயதில் 30 முதல் 50 வயதில் வரும் போது , சுக்ரன் அல்லது ராகு நல்ல நிலையில் இருக்கும் போது அதிகபடியான பணம் சேர்ப்பது , ஆடம்பர செலவுகளில் பணத்தை விரையம் செய்வது , வீடு கட்ட வேண்டும் , கார் வாங்க வேண்டும் என்கிற ஓடி ஓடி பணம் சேர்ப்பதில் கவனத்தை தரும். குடும்பத்தை கவனிக்க வேண்டும் சுற்றி உள்ளவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை சுக்ரன் அல்லது ராகு தசா தராது. #padmahazan
🍂இதே சுக்ரன் அல்லது ராகு அவயோக அமைப்பில் உள்ள போது பெண்கள் வழிகளில் அவபெயர் , வீண் விரையங்களில் உண்டாகும் கடன் , தீய பழக்க வழக்கங்களில் உண்டாகும் உடல் பாதிப்பு , புகை பழக்கம் , மாதிரியான வகையில் மற்றவர்கள் சொல்வதை பொருட்படுத்தவே மாட்டார்கள். தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.
🍂சுக்ரனோ ராகுவோ தசா நடத்தும் போது தரும் பணம் , பொருள், காமம், அனைத்துமே பிறர் என்ன சொல்வார்கள் , பிறர் என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணத்தை ஜாதகருக்கு தராது.
🍂நமக்கு என்ன வேணும் என்கிற ஆசையை மட்டுமே சுக்ரன் அல்லது ராகு தசா தூண்டும். அதை நோக்கிய பயணத்தை தரும். காரணம் சுக்ரனும் ராகுவும் ஆசை கிரகங்கள் , பொருள் காமம் மீதான ஈர்ப்பை பெற்ற கிரகங்கள்.
🍂பலன் சொல்லும் போது ஜாதகரது பெற்றோரோ அல்லது வாழ்க்கை துணையோ ஜாதகர் எதை சொன்னாலும் கேட்பதே இல்லை என்கிற விஷயத்தை சொல்லும் போது, #padmahazan
தசா புத்தியை கவனித்தால் ,
💥சுக்ர தசா நடக்கும்,
💥ராகு தசா நடக்கும் , அல்லது
💥ராகு அல்லது சுக்ர புத்தி நடக்கும்,
அல்லது
💥சுக்ர தசா வில் ராகு புத்தி நடக்கும்,
💥ராகு தசா வில் சுக்ர புத்தி நடக்கும்.
சுக்ரன் அல்லது ராகு தசா புத்தி நடத்தும் நிலையில் , இந்த கிரகங்கள்,
1) குருவின் வீடுகளான தனுசு மீனத்தில் சுக்ரன் அல்லது ராகு இருப்பது,
2). குருவின் இணைவில் சுக்ரன் அல்லது ராகு தசா புத்தி நடத்துவது,
3). குரு பார்வையில் சுக்ரன் அல்லது ராகு தசா புத்தி நடத்தும் போது ,
✔️✔️✔️
💐பிறர் சொல்லும் ஆலோசனை, அறிவுரை , சமுதாயத்தில் பெறும் நன்மதிப்பு, கௌரவம் மீதான கவனத்தை ஜாதகர் பெறுவார்.
💐கூடுதலாக லக்னாதிபதி மற்றும் பூர்வ புண்ணிய பாக்கிய ஸ்தான அதிபதிகள் குரு பகவான் வலுக்கும் போது , அதாவது 1 5 9 மற்றும் குரு வலுக்கும் போது இளம் வயதில் வரும் இந்த தசாக்களை பெரிய பாதிப்பு இன்றி கடக்க முடியும்.
இவர்கள் மஹா லெக்ஷ்மி வழிபாடு , துர்கை அம்மன் வழிபாடு போன்றவை பாதிப்பை குறைக்கும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment