பதிவை முழுமையாக skip பண்ணாம படித்து அறிந்து கொள்ளுங்கள்.
🍂 சனி வந்தாலே இருக்கும் நிலையில் ஓர் மாற்றத்தை சனி தருவார், கோட்சார ஏழரை அஷ்டம சனியாக இருந்தாலும் சரி , ஜாதகப்படி சனி தசா அல்லது சனி புத்தி இருந்தாலும் சரி , உங்களது குணமும் வருமான சூழலும் மாற்றம் உண்டாக்கும்.
🍂 சனி தசா அல்லது புத்தி காலத்தில் அவர்களுடைய ஜாதகத்தில் சனி பெறும் வலு ஏற்ப பலன்களும் குணங்களும் கீழே உள்ளபடி மாற்றத்தை தரும்...
🍂 நட்பு ஆட்சி உச்சம் மற்றும் வக்ர பெற்ற சனி உழைக்கும் எண்ணத்தை ஒருவருக்கு தருவார் , அல்லது விரும்பம் இல்லாத அதிகபடியாக உடல் உழைப்பை போட்டு பணம் சேர்க்கும் சூழலை தருவார்.
🍂சனி வக்ர கதியில் இருக்கும் போது சனி தசா புத்தி காலத்தில் தொழில் மீதான அதிகபடியான ஆசை கொடுத்து பின் அதில் நிலையில்லாதபடி , விருப்பபட்ட படி தொழில் அமையாத எண்ணத்தை கொடுத்து பின் தொழில் மாற்றத்தை தரும். #padmahazan
🍂வேலை , தொழில் , வருமானம் , இது சார்ந்த மக்கள் தொடர்பை சனி ஏற்படுத்தி கொடுப்பார், சனி தசா புத்தி முடியும் வரை இவற்றை சுற்றியே உங்களது வாழ்க்கை நகரும். சாமானிய மக்கள் , நடுத்தர வர்க்க மக்களை சனி அதிகபடியாக உங்களுக்கு தொழில் வேலை நிமித்தமாக அறிமுகபடுத்துவார்.
🍂பெண் ஒருவர் வேலை அல்லது தொழில் செய்யும் நிலையில் இவர்களுக்கு வரும் சனி புத்தி அல்லது சனி தசா தொழிலா குடும்பமா என்கிற போராட்டத்தை சனி தருவார்.
🍂குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாது , குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கினால் , வருமானம் பாதிப்பு அல்லது மன அழுத்தம் தரும் விதமான சிக்கலை தரும்.
🍂வருமானம் தொழில் வேலை கவனித்தால் குடும்பம் பற்றிய கவலை மனதில் தோன்றும். #padmahazan
🍂வேலை அல்லது தொழில் செய்யும் பெண்ணிற்கு சனி தசா அல்லது சனி புத்தி சிறு மன கஷ்டத்தை தரவே செய்யும்.
🍂 மந்த தன்மை , தாமதமாக ஒரு செயலை முடிக்கும் தன்மை , கொஞ்சம் சுத்தம் இல்லாத சூழலில் வேலை தொழில் வீடு இருப்பது , சுகாதாரமற்ற இடங்களில் வசிப்பது , உடல் சுத்தம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய சிந்தனை இன்றி வேறு தொழில் வருமானம் வேலை சூழலில் மாட்டி கொள்வது போன்ற பலனை தரும்.
🍂பலருக்கு சனி தசா அல்லது புத்தி காலம் அதிகபடியாக உடல் உழைப்பில் உடல் பலவீனபடுவது , அதிகபடியாக சோம்பல் தந்து அதுவே காரிய தடையை தரவும் கூடும்.
🍂சனி தசா புத்தி காலத்தில் உங்களுக்கு அதிகபடியாக பணத்தை தொழில் முன்னேற்றத்தை அல்லது வேலை சம்பளத்தை தரும் நிலையில் அது உங்களது மனதையும் உடல்நலத்தையும் உங்களுக்கும் மற்றவர்களுக்கான உறவுகளையும் பாதித்து தான் தரும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥💥💥 இது ஒரு பொதுவான சனி பற்றிய தகவல்தான். பெரும்பாலான நிலையில் இது பலருக்கு பொருந்தும். ஜாதகத்தில் சனி பெறும் நட்சத்திர சாரம் பிற கிரக இணைவு பார்வை பொறுத்து குறிப்பாக குரு பார்வை இணைவு இந்த கெடுபலன்களை மாற்றும். 💥💥💥
No comments:
Post a Comment