Thursday, April 27, 2023

விஷ கண்டம் தரும் ராகு

🍁 விஷ கண்டம் _ ராகு தோசம் 🍁 #hazan 

பாற்கடலை கடைந்த போது பெறபட்ட அமிர்தத்தை உண்ட ஒரு அசுர உடலின் வெட்டபட்ட தலையே ராகு. 

அமிர்தம் முழுமையாக உடல் முழுவதும் கலக்கும் முன் , தலை வெட்டபட்டதால் அமிர்தம் கழுத்து கீழே உள்ள முண்டமான உடலை மட்டுமே அசுர குணம் இயல்பை மாற்றி விட்டது, வெட்டப்பட்ட தலை அதே அசுர குணத்தை கொண்டது என்று ராகு கேது இயல்பை மோகிணி அவதார புராணங்களில் கேட்டு இருப்போம். 

ராகு பகவானே விஷத்திற்கு காரகன், உயிர் கண்டம் தரும் அளவிற்கு கொடிய நஞ்சு விஷம் வேதி பொருட்களை குறிப்பவர் ராகு. #padmahazan 

இந்த ராகு ஒரு ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருக்கும் போது, 

1). பூச்சி கடி , பாம்பு கடி , விஷ ஜந்து கடி இவற்றால் உண்டாகும் உடல் பாதிப்பை தருவார். 

2). தற்கொலைக்கு விஷத்தை தேடும் எண்ணத்தை தருபவரும் ராகுதான். 

3). புதிய சுற்றுசூழலில் ஒருவருக்கு உண்டாகும் ஒவ்வாமைகளை குறிப்பவரும் ராகு. 

சிலருக்கு புதிய வேதிபொருட்கள் , சில பூக்களின் மகரந்த வாசனை ,தொற்று பூஞ்சைகள் நிறைந்த சூழல் சுவாசிக்கும் போது உண்டாகும் ஒவ்வாமை , அலர்ஜி இவற்றை தருவதும் ராகு. 

இவை சிறிய அளவிலான நச்சு தன்மை கொண்டவை. 

ஒருவருக்கு ராகு தசா அல்லது புத்தி காலத்தில் அடிக்கடி விஷ பூச்சி ஊர்வன பார்ப்பது , வீடுகளில் சுற்றுசூழல் களில் போவதை பார்ப்பது, அவற்றால் உண்டாகும் பய உணர்வு போன்றவை ராகு சாதகம் இல்லாத நிலையை காட்டும். 

அதே ராகு தசா அல்லது புத்தி காலத்தில் பணமும் பொருளும் ஆடம்பரமும் சேர்ந்து விஷ ஜந்து பாதிப்பு இல்லை என்றால் அந்த ராகு உங்களுக்கு நன்மையை தருவார்... 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🌟 சனி தொடர்பு பெற்ற ராகு ~ 

ராகுவோடு சனி இணைந்தாலோ பார்த்தாலோ, கூடுதலாக சனி லக்னத்திற்கு 6 8 அதிபதியாகும் போது ராகுவின் தசா புத்தி காலத்தில் ஊர்வன , சிறு சிறு பூச்சி தொந்தரவை ஏற்படுத்தி உடல் மனம் ( பயம் கொடுத்து ) இரண்டையும் ராகு பாதிப்பார். 

🌟 செவ்வாய் தொடர்பு பெற்ற ராகு ~ 

ராகுவோடு செவ்வாய் இணைந்தாலோ பார்த்தாலோ , கூடுதலாக செவ்வாய் லக்னத்திற்கு 6 8 பாதக அதிபதியானாலோ , ஜாதகர் அவசரபட்டு தன் முடிவை தேடி கொள்ளும் எண்ணங்களால் பாதிக்கபடுவார். 

🌟சந்திரன் ராகு இணைவு ~ 

சந்திரன் ராகுவோடு இணையும் நிலையில் விஷ ஊர்வன பூச்சிகள் மீதான பயம் அதிகபடியாக ஒருவருக்கு இருக்கும். 

பாம்பு படத்தை டிவியில் பார்த்தால் கூட இரவு தூங்காத சிலரை பார்க்க முடியும். அவர்களுக்கு கடுமையான தேய்பிறை சந்திரன் ராகுவோடு இணைந்து மனம் விச ஜந்து பூச்சிகளால் பயம் கொண்டு இருப்பார்கள். 

🌟லக்னம் லக்னாதிபதி கெட்டு 8 அதிபதியான சனி அல்லது செவ்வாய் அல்லது தேய்பிறை சந்திரனின் இணைவை பெற்ற ராகு தசா மற்றும் புத்தி காலம் , 

🌟லக்னாதிபதியோடு ராகு சேர்க்கை, 

🌟எட்டாம் அதிபதினோடு ராகு சேர்க்கை 

போன்ற நிலைகளில் விஷம் நஞ்சு ஒவ்வாமை பாதிப்புகளை ஏற்படுத்தும். 

மேலே சொன்ன கிரக நிலைகளோடு 

🌟குரு இணைவது பார்ப்பது பாதிப்பை குறைக்கும். 

🌟லக்னமும் லக்னாதிபதியும் வலு பெற்றால் பாதிப்பை சமாளிக்கும் ஆற்றலை ஜாதகர் பெறுவார். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

Tuesday, April 18, 2023

சுக்ரனும் சிறுநீரகமும்

🍁 சுக்ரனும் சிறுநீரகமும் 🍁 #hazan 

சுக்ரன் கழிவு நீக்க உறுப்பான சிறுநீரகங்களை குறிப்பவர். வெளிப்புற கழிவு நீக்க உறுப்பை சனியும் கேதுவும் குறிக்கும் போது உட்புற உறுப்பான சிறுநீரகத்தை சுக்ரன் குறிப்பார். 

சுக்ரன் பகை நீசம் பெற்று சனி பார்வை பெறுவது, 

சுக்ரன் ஆட்சி உச்சம் பெற்றாலும் ராகு இணைவது அல்லது சுக்ரன் ராகுவோடு இணைந்து சனி பார்வை பெறுவது, 

வெண் படிமங்களை குறிக்கும் சந்திரன் உடன் இணைவது போன்றவை சிறுநீரக கல் அல்லது சிறுநீரக குறைபாட்டை, 6 8 அதிபதி தொடர்பை பெறும் போது தருவார். 

சனி ராகு சந்திரனால் பாதிக்கும் சுக்ரனுக்கு 6 8 அதிபதிகளது சாரம் இணைவு , பார்வை பரிவர்த்தனை பெறும் போது சிறுநீரக கல் , சிறுநீரக செயல் இழப்பு தருவார். #padmahazan 

சுக்ரன் கன்னி துலாம் விருச்சிக ராசிகளில் மேலே உள்ள சனி ராகு செவ்வாய் பார்வை இணைவு கூடுதலாக 6 8 அதிபதி ஆதிபத்திய நட்சத்திர பெற்றும் விடும் நிலையில் சிறுநீரக பாதிப்பை தருகிறது. 

6 அல்லது 8 ஆதிபத்திய பெற்ற சூரியனால் அஸ்தங்க தோசம் பெற்ற சுக்ரனும் சிறுநீரக பாதிப்பை குறிப்பாக மீன லக்னத்திற்கு சுக்ர தசாவில் தரும். 

கூடுதலாக செவ்வாய் தொடர்பை பெற்றால் சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற நிலையை சுக்ரன் தருவார். 

" சுக்ரன் சந்திரன் இணைவு இருக்கு அப்ப என் கிட்னி கியா முயா தானா..? கிட்னி பிரச்சனை கொடுக்குமா ..? " பயபட கூடாது. மேலே சொன்ன ஒட்டு மொத்த தொடர்பும் சுக்ரனுக்கு வர வேண்டும் சம்மந்தப்பட்ட தசா புத்தி வர வேண்டும். 

சுக்ர தசா வராத வரை பாதிப்பு வராது , பிற தசாக்களில் வரும் சுக்ர புத்தி சில குறுகிய கால சரியாக கூடும் பாதிப்பை தரும். 

மேலே சொன்ன கிரக அமைப்பை கொண்ட நிலையில் சுக்ர தசா 40 வயது முதல் 80 வயதிற்குள் வரும் நிலையில் ஜாதகர் கவனமாக இருப்பது நல்லது. #padmahazan 

இதுவரைக்கும் எந்த பிரச்சனை வரவில்லை , ஆனால் அமைப்பு உள்ளது என்றால் பயபடாதீங்க , 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

1). நிறைய தண்ணி குடிங்க, 

2). அதிகமா வியர்வை வெளியேற்றும் நடைபயிற்சி பண்ணுங்க, 

3). அதிகபடியான தாது பொருட்களை கொண்ட சுத்தம் இல்லாத நீரை குடிக்காதீங்க , 

4). அதிகபடியான நச்சு தன்மை , அதிகபடியான தாது *கால்சியம்* உடம்பில் சேர்வது போன்ற நிலையில் அது கல்லாக மாறும். 

5) அதிகபடியாக குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. 

6). இளநீர் குடிப்பது , வாழைதண்டு , வாழைபூ உணவில் சேர்த்து கொள்ளுங்கள். 

உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

Sunday, April 9, 2023

சூரியனின் தன்மைகள்

🤩 சூரியனின் தன்மைகள் 🤩  

சூரியன் நவகிரகங்களில் அனைத்து கிரகங்களுக்கும் தனது ஒளியை தரும் ஒளி மூல ஆதார கிரகம். 

ராகு கேதுவை தவிர யாரிடமும் அடங்கிபோகாத தன்மை கொண்டவர். தான் நீச நிலையில் நின்றாலும் இணைந்த கிரகத்தை அஸ்தங்கம் செய்து வலுஇழக்க வைக்கும் தன்மை உடையவர். பிற கிரகங்கள் இழந்த பலத்தை தன் தசா புத்தி காலத்தில் தரும் நவகிரக நாயகன். நவகிரகங்களில் அரை சுபராக விளங்குபவர். #padmahazan 

குரு சுக்ர புதன் கிரகங்களோடு இணையும் போதும் , குரு மற்றும் சந்திரன் பார்வை பெறும் போதும் அளவுகடந்த சுப வலுவை பெற்று யோக நிலையை லக்ன 3 9 11 , 4 7 10 இடங்களில் தருவார்.

சனி செவ்வாய் பார்வை பெறும் போதும், சனி செவ்வாய் ராகு கேது இணைவை பெறும் போதும் இயல்பிற்கு மாறாக தனது அசுப வலுவோடு கெடு பலனை தருவதாக அமைந்துவிடுவார்.

9 வீட்டில் இருக்கும் சூரியனிற்கு ராகு கேது சனி தொடர்பை பெறும் போது காரகோ பாவ நாஸ்தியை தந்து தந்தையை பிடிப்பார் அல்லது இழக்க வைப்பார். சூரியனது தசா அல்லது புத்தி காலத்தில் பலனை தருவார். 

சூரியனின் உச்ச வீடு மேஷம் ;
ஆட்சி & மூலத்திரிகோண வீடு சிம்மம்; 
நீசவீடு துலாம்.

இவரின் தன்மைகள் : 

1). அரசு மற்றும் அரசியல் : எல்லோருக்கும் ஆணையிடும் அதன் வழியே வழிநடத்தும் அரசாங்கம் அரசு உடைமைகள் மற்றும் தலைமைகளை குறிப்பவர்.

2). ஆளுமைத்திறன் : நாலு பேராக இருந்தாலும் அவர்களை ஆணையிட்டு வேலை செய்ய வைப்பது அவர்களை வழிநடத்தும் தன்மை பெறுவது. #padmahazan 

3). உஷ்ணம் : நெருப்பு சூடு சம்மந்தப்பட்ட தன்மை அதனால் உண்டாகும் நோய் 

4). கம்பீரமான தோற்றம் : அனைவராலும் மதிக்ககூடிய மரியாதை தரகூடியதொரு கம்பீரமான தோற்றம். 

5). ஆத்ம பலம் : ஒரு செயல் செய்ய தன்னை உணரும் நிலை... தான் யார் என்பதை உணர்ந்து ஒரு மேல் நிலையான நிலையை அடைய உதவும் தன்மை.

6). தன்னம்பிக்கை : ஒரு செயலை செய்ய தன்னால் முடியும் என்ற ஒரு சுய எண்ணத்தை கொடுக்கும் கிரகம். #padmahazan 

பொதுவாகவே மேலே சொன்ன அனைத்து விஷயங்களுமே தலைமை தாங்க தேவையான குணநலன்களே... அதுவே சூரியனை முதன்மை கிரகம் ஆக உள்ளார்.

ஆதிபத்திய சிறப்பு இல்லாமல் இருந்தாலும் 12 லக்னங்ககாரர்களுக்கும் சூரிய வலுஇழப்பது நல்லது கிடையாது. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP NUMBER 8300 620 851 

🤩 #padmahazan 🤩

சாப்பாட்டு பிரியர் & சாப்பாட்டு கலை

🍁 சாப்பாட்டு கலை & சாப்பாட்டு பிரியர் 🍁 #hazan 

ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் பெறும் ஒளி நிலையை பொறுத்தும், சந்திரன் பெறும் ஸ்தான பல வலுவை பொறுத்தும் ஒருவருக்கு சாப்பிட்டு பிரியராக்கும் , 

கூடுதலாக சுக்ரன் மற்றும் செவ்வாய் தொடர்பை பொறுத்து சமையல் கலையும் கொடுக்கும்.

சந்திரன் அமாவசை நிலையில் இருப்பது , சனியோடு இணைந்து பார்க்கபட்ட சந்திரன் சாப்பாட்டு சார்ந்த பாதிப்பை தருவார், எவ்வளவு சம்பாதித்தாலும் வாய்க்கு ருசியாக சமைக்கும் தாயாரோ அல்லது மனைவியோ அமையமாட்டார்கள். சுக்ரன் வலுவையும் இங்கே காண வேண்டும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

பெரும்பாலான ரிஷப ராசிக்காரர்கள் 90% சாப்பாட்டு பிரியர்களாக இருப்பார்கள். காரணம் இனிப்பு மற்றும் உணவுகளை குறிக்கும் சந்திரனும் சுக்ரனும் ரிஷபத்தில் உச்சம் மற்றும் ஆட்சி வலுவை பெற்று இருக்கும் ராசி என்பதால். 90% ரிஷப ராசிக்காரர்கள் சாப்பாட்டு பிரியர்களே.

அதே போல பெரும்பாலான மேஷ விருச்சிக ராசிகாரர்களும் நல்ல சமையல் கலை அறிந்தவர்களாக இருப்பார்கள். சமையல் நுணுக்கங்களை எளிதாக புரிந்து கொள்பவர்கள் இவர்கள். 

மேஷ ராசிக்கு சுகாதிபதியாகும் சந்திரன், விருச்சிக ராசிக்கு பாக்கியாதிபதி யாகி ராசியில் நீசமாவார், இருப்பினும் நீச சந்திரனுக்கு குரு பார்வை அல்லது சுக்ர பார்வை கிடைக்கும் போது, நீச சந்திரன் செவ்வாயோடு நீச பரிவர்த்தனையாக இருக்கும் போது சாப்பாட்டு கலை மீதான ஈர்ப்பை நுணுக்கத்தை தரும். #padmahazan 

ஒருவருக்கு சாப்பாடு பிரியம் மற்றும் சமையல் கலை மீதான ஆர்வம் பற்றி புரிந்து கொள்ள , முதன்மையாக சந்திரன், செவ்வாய் மற்றும் சுக்ரன் மூன்று கிரகங்களையும் , பாவக ரீதியாக 2 4 10 இடங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது பற்றி எழுத இன்னும் பல கிரக அமைப்புகளும் உள்ளன. உதாரணமாக வளர்பிறை சந்திரன் ராகு இணைவு போன்றவை அதை மற்றொரு பதிவில் காண்போம்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

#padmahazan

5 பாவகம் _ நற்சிந்தனை

🍁 5 பாவகம் 🍁 #hazan 

12 பாவகங்களில் மிக முக்கியமான பாவகங்கள் 1 5 9. இவை வலுவாக அமைவது யோகம். 

இந்த 5 பாவகம் வலுபெற்றால் மிகப்பெரிய அதிர்ஷ்டம், புத்திசாலிதனம், நற் சிந்தனை , தெளிவான முடிவை தீர்க்கமாக எடுக்க வைக்கும்.

வாழ்வில் சாதித்த பெரும் உயர்வு பெற்றவர்களுக்கு இந்த ஐந்தாம் இடம் வலுவாக அமைந்து இருக்கும். 

ஐந்தாம் அதிபதி உச்சம் பெறுவார் அல்லது ஐந்தில் ஒரு சுபர் உச்சம் பெறுவார், அல்லது நட்பு வீடுகளில் ஐந்தாம் அதிபதி நன்றாக இருப்பார். #padmahazan 

உங்களை ஒரு புலி துரத்தும் போது , ஐந்தாம் இடம் கெட்டால் " ஐயோ புலி துரத்துதே " என்று ஓடி கொண்டே இருபீங்க , ஒரு கட்டத்தில் கால் சோர்ந்து வேகம் குறைய புலியிடம் சிக்கி ; புலிக்கு லெக் பீஸ் கொடுக்க வேண்டி இருக்கும்.

அதே ஐந்தாம் இடமும் அதிபதி வலுத்த ஒருவரை , புலி துரத்தினால், ஓடும் போதே அவர் , எங்கிட்டு ஓடி எங்கிட்டு குதித்து , புலியை பள்ளத்தில் தள்ளி விடுவது , புலிக்கு ஏதேனும் பாதிப்பை தர முடியுமா..? என்ற கோணத்தில் புத்தியை தீட்டுவார்கள். பிரச்சனை விட அதில் இருந்து வெளியே வரும் தீர்வை தேடுவார்கள். 

ஐந்தாம் இடம் கெடும் போது பிரச்சனை மட்டும் கண்ணுக்கு தெரியும், ஐந்தாம் இடம் வலுக்கும் போது பிரச்சனைக்கான தீர்வு கண்ணுக்கு தெரியும்.

இதை பூர்வ புண்ணி அதிர்ஷ்டம் என்றும் எடுத்து கொள்ளலாம், இல்லை புத்திசாலி திறமை என்றும் எடுத்து கொள்ளலாம். 

ஒர் நாள் புதன் உச்சம் பெற்றாலும், அன்றைய 12 லக்னத்திற்கு ஐந்தாம் பாவக வலு ஏற்ப , அன்றைக்கு வெவ்வேறு லக்னத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திசாலி தனமும் , திறமையும் வேறுபடும். 

5ம் பாவகம் வலு மிக முக்கியம்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

பெண்களால் பாதிப்படையும் ஜாதகம்

🍁 பெண்களால் பாதிப்படையும் ஜாதகம் 🍁 #hazan 

கீழே கொடுக்கபட்டுள்ள கிரக அமைப்பை பாருங்கள். 


கடக லக்னம். 

பெண்களை குறிக்கும் சுக்ரன் 8ல் அஷ்டம ஸ்தான அதிபதி யான சனியோடு இணைந்து மறைகிறார். 8 சுக்ரனுக்கு கடுமையான மறைவு. 

8ல் மறையும் சனி மறுபக்கம் 7 அதிபதியான வாழ்க்கை துணையை குறிக்கும். அவரும் 8ல் மறைகிறார். 

சுக்ரனே பாதகாதிபதி ஆகி அவரும் இளைய தாரத்தை தரும் 11 அதிபதி அவரும் 8ல் மறைகிறார். 

ஏழாம் அதிபதி , 11 அதிபதி , சுக்ரன் என அனைத்தும் 8ல் மறைவது காதலி , மனைவி , இரண்டாம் மனைவி , ஏன்..? துணிக்கடையில் சட்டை எடுத்து பிரித்து காமிக்கும் பெண் வரை இவருக்கு மன அழுத்தம் , பிரச்சனை தருவார்கள். 

வரவு செலவு , குடும்ப செலவு , வாகனம் தொழில் அனைத்தும் தலைவலியை உண்டாக்கும். 

கடக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு இருக்க கூடாத கிரக அமைப்பு இது. இதில் சுக்ர அல்லது சனி தசா புத்தி வரும் காலத்தில் பாதிப்பை கூடுதலாக காட்டும். 

இங்கே அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திர பெற்றால் நிச்சயமாக 100% பாதிப்பை சுக்ரன் தருவார். குருவின் பூரட்டாதி சாரம் பிரச்சனை சமாளிக்கும் குணத்தை தரும்.

இதே அமைப்பு, ரிஷபம் 10ல் , துலாம் 5ல் , தனுசு 3ல் , மகரம் 2ல் , கும்பம் லக்னத்தில் சுக்ரன் சனி இணைவு மனைவி வந்த பிறகு நல்ல பொருளாதார சேர்க்கை , தொழில் முன்னேற்றம் தரும்.

ஏழாம் அதிபதி சுப வலுபெற்று , ஏழாம் அதிபதிக்கு வீடு கொடுத்த கிரகமும் வலுபெற அதிகபடியான சுப பலனை வாகன யோகம் தொழில் விருத்தி ஏற்படுத்தி கொடுக்கும். 

இந்த கடக லக்னத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். 

இதே சிம்ம லக்னத்திற்கு எட்டில் சுக்ரன் தனித்து உச்சமாகி தசா நடத்தால் , 10 அதிபதி 8ல் உச்சமாகி , 

தூர தேச வாழ்வில் பெரும் சொகுசு வாழ்வை தருவார், கை நிறைய பணம் கிடைக்கும்.

வெளிநாட்டு பெண்ணை கூட திருமணம் செய்யும் சூழலை வயதிற்கு ஏற்ப தருவார்.

ஜோதிடம் ரொம்ப நுணுக்கமானது சிறிய கிரக மாற்றம் கூட மொத்த பலனும் மாறி அமைத்து கொடுக்கும்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

அரசு பணி vs அவயோக தசா

🍁 அரசு பணி Vs அவயோக தசா 🍁 #hazan 

 சில ஜாதகங்களில் பார்க்க முடிகிறது, 

யோக தசா அல்லது அதிக சுப கிரக தொடர்பை பெற்ற தசா ஒருவருக்கு துறை ரீதியாக அரசு பணிக்கு படிக்கும் தூண்டுகோலை தந்தாலும் , 

அதற்கு அடுத்து வரும் அவயோக தசா அல்லது அதிகபடியாக பாவியர் தொடர்பை பெற்ற தசா , 

1). கிடைத்த வேலையை விட்டு அவயோக தசா பாதிப்பை தருகிறது,

அல்லது

2). அரசு பணி என்கிற மோகத்தில் அவயோக தசா வாழ்வை அரசு பணி முயற்சியிலேயே வாழ்வை தொலைத்து விடுகிறது.

அரசு பணியில் இருந்து நிம்மதியாக அடுத்த 25 to 60 வயது வரை சம்பளம் வாங்கும் அமைப்பிற்கு அடுத்தடுத்த யோக தசா அல்லது சுப கிரக தொடர்பை பெற்ற தசா வர வேண்டும் என்கிற வேறுபாடு தெளிவாக பார்க்க முடிகிறது.

அரசு வங்கி கிளார்க் பணி கிடைத்தும் அதை அனுபவிக்க முடியாதபடி ராஜினாமா செய்ய துண்டும் சனி பார்த்த அவயோக ராகு தசா வை கூட இங்கே பார்க்க முடிகிறது.

நடப்பு மற்றும் அடுத்தடுத்த தசா மிக முக்கியம் , சம்பவங்களை நடத்தி காட்டுவது தசா... 

பௌர்ணமி யோகம் வேணுமா..? இருக்கு, 
தர்மகர்மாதிபதி யோகம் வேணுமா..? இருக்கு,
பஞ்சமகா புருஷ யோகம் வேணுமா..? இருக்கு, 
பர்வத ராஜயோகம் வேணுமா..? அதுவும் இருக்கு, 

ஆனால் அந்த யோக தசா ஏதும் இல்ல நடப்பது அவயோக தசா என்றால், " அத்தனை யோகம் இருந்தும் என்ன புண்ணியம்..? " என்கிற வேதனைதான் மிஞ்சும். 

அடுத்தடுத்த தசாகள் மிக மிக முக்கியம்... 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

தனிமை தரும் கேது

🍁 தனிமை தரும் கேது 🍁 #hazan 

தனிமையை தருவது கேது. 

தனித்திரு..! 
விலகி இரு..!! 
வீட்டிலேயே இரு..!!! என்ற கொள்கை கொண்டவர் கேது. 

கேது தனிமை விரும்பி. தனிமையை கொடுப்பது கேதுவாக இருந்தாலும் , அதை முறையாக பயன்படுத்தி கொள்வதற்கு லக்னம் லக்னாதிபதி , கேது நின்ற பாவக அதிபதி சரியாக அமைய வேண்டும். 

சிலருக்கு தனிமை கருப்பு ஜீஸ் போல இனிக்கும் , பலருக்கு பாகற்காய் ஜீஸ் போல கசக்கும்.

தனிமை சரியாக கையாள தெரிந்தவர்கள் , நிச்சயமாக அந்த சூழலையும் நேரத்தையும் சரியாக பயன்படுத்தி கொள்வார்கள். அடுத்தடுத்த நகர்விற்கான தேடலை , ஒருவருக்கு தன்னை பற்றிய உண்மை புரிதலை , தன்னுடைய திறமை வரம்புகளை தனக்கு உணர்த்துபவர் கேது. #padmahazan 

இதெல்லாம் உணர்ந்து அதை முறையாக பயன்படுத்தி உயரத்தை தொட வைப்பவர் கேது.

கூட்டத்தில் இருந்தாலும் தனி ஒருவனாய் வாழ வைப்பது கேது. கூட்டத்தில் இருந்தாலும் பிறரால் கவனத்தை சிதறாது தன் வேலையில் குறியாக இருப்பது கேது.

ராகு கொட்டி கொட்டி எதை கொடுத்தாலும் மனிதனை மாயையில் சுற்ற வைத்து சிரிப்பார்... 

கேது தனிமையை கொடுத்து மனிதனை வாழ்வை புரிய வைத்து , தனிமை க்கு பிறகான சூழலை முறையாக பயன்படுத்தி கொள்ளும் பக்குவத்தை தருவார். 

கேது உங்களுக்கு முறையாக அமைந்தால் , யோகமாக அமைந்தால் , யோகாதிபதி வீட்டில் அமைந்தால் , குருவோடு இணைந்தால் , சனி தொடர்பை பெற்றால் நிச்சயமாக தனிமையை கொடுத்து பின்னாளில் பக்குவ பட வைப்பார்.

கேது அவயோகமாக அமைந்தால் , 6 8 அதிபதி தொடர்பை பெற்றால் , தனிமையில் ஜாதகரை பக்குவபடுத்துவதை விட சித்திரவதை செய்வார். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

சம்பாத்தியம் Vs கடன்

🍁 சம்பாத்தியம் Vs EMI அரக்கன் 🍁 #hazan 

மூன்று மாதம் முன்பு பலன் சொன்ன ஜாதகம்,

ஜாதகரது சம்பாத்தியம் 1.5 லட்சம் / மாதம்.

ஐடி ஊழியர். 

அவரது முக்கியமான கேள்வி , 

" மாத வீட்டு EMI 70 ,000 போய்விடுகிறது, 70000 மற்ற வீட்டு செலவு , பெட்ரோல் , ஸ்கூல் பீஸ் , Shopping பொய்டுது , கையில எதுவுமே தங்க மாட்டுது , சேமிப்புனு எதுவுமே இல்ல , வீட்டு EMI இன்னும் 7 8 வருஷத்துக்கு மேல போகுது , பசங்களோட higher studies எப்படி சமாளிக்க போறேன்னு தெர்ல , lay off ஏதும் வந்தால் என்ன பண்ண போறேனு தெர்ல " என்பதே.

வீட்டு EMI 70000 என்றால் வீட்டின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் , என்று யோசிக்க வேண்டும்.

அடுத்து அஷ்டம சனி , அதன் பிறகான வலுத்த 12 மிட அதிபதி தசா , 12 மிட பாவ கிரக பார்வையில் அந்த தசா , சம்பாத்தியம் முழுவதும் நிம்மதி இல்லாமல் போகும் சூழலில் உள்ளது. 

" இவ்வளவு விலைக்கு ஏன் வாங்குறீங்க..? " என்றால்,

" எங்க ஆபிஸ் ல higher position இருக்க எல்லாரும் இப்படிதான் வாங்கி இருக்காங்க, என்னையும் வாங்க encourage பண்ணாங்க , வாங்கிடேன் சார் " சொல்றார்... 

நகர்புற கிராமங்களில் மாத வருமானம் 15,000 20,000 வருமானத்தில் நிம்மதியாக இருப்பவர்களை பார்க்கும் போது , பெருசா படிக்கலைனாலும் பிரச்சனையை தேடிக்காமல் நிம்மதியாக வாழும் சூழலில் இருக்காங்க... 

பணம் வர வர மனிதனுக்கு பிரச்சனைகளும் மேலே மேலே வருகிறது... 

கடன் இருக்கலாம், தலைக்கு மேலே இருக்க கூடாது. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

சொந்த தொழிலுக்கான கிரக நிலை

🍁 சொந்த தொழிலுக்கான கிரக நிலை 🍁 #hazan 

(1). ஜாதகரின் லக்னாதிபதி வலுபெற்று, 

(2). ஜீவனாதிபதி ஆன பத்தாம் அதிபதி சுப வலு பெற்று லக்னாதிபதிக்கு இணையான வலுவோடு ,

(3). உத்தியோக பாவகமான 6 இடத்தில் ராகு கேது சனி போன்ற பாவர்கள் நின்று , 6 அதிபதி வலு குறைந்து, 

(4). 2 10 11 பாவகங்கள் வலுபெறும் நிலையில், 

(5). தலைமை மற்றும் அதிகார கிரகம் சூரியன் பாதிக்காமல் 

(6). நடக்கும் தசா புத்தி ஏற்ப 

மேலே சொன்ன 6 குறிப்புகளும் ஒன்றாக பொருந்தி வரும் நிலையில் 

சொந்த தொழிலில் வருமானம் அமையும்.

10 × 10 கடையில் மிட்டாய் விற்பவரும் முதலாளிதான் , தொழிற்சாலை அமைத்து ஏற்றுமதி செய்பவரும் முதலாளிதான். 

இந்த வேறுபாட்டை தருவது லக்னம் லக்னாதிபதி வலு. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

கர்மா

🍁 கர்மா 🍁 #hazan 

360° சுற்றுவட்டார பரந்து விரிந்த இந்த வான் மண்டலத்தில் கிரகங்கள் எங்கு எங்கோ சுற்றி கொண்டு வருகிறது.

அது ஏன்..? ஒரு பிறப்பு நடக்கும் போது மட்டும்... ஒரு குறிப்பிட்ட கிரக நிலை நிகழ்கிறது.

சுக்ரன் வருடத்தில் பெரும்பாலான நாட்களில் பரந்த வானில் சுற்றி வருகிறது.

அது ஏன் சுக்ரன் ராகுவோடோ கேதுவோடு இணையும் போது ஒரு பிறப்பு பிறக்க வேண்டும்.

தனி சுக்ரனாக இருக்கும் போது அந்த பிறப்பு இருக்கலாம் அல்லவா..?

காரணம்... அதுதான் கர்மா... 

யார் எப்போது பிறக்க வேண்டும்..

எங்கே யாருக்கு பிறக்கு வேண்டும்... 

யாரோடு யார் வாழ வேண்டும்... 

எப்படிப்பட்ட வாழ்வை வாழ வேண்டும்... 

எல்லாமே கர்மா.

சுக்ரன் ராகு கேது இணைவிற்கு மட்டுமே இது பொருந்தாது. எல்லா கிரக அமைப்பிற்கும் இது பொருந்தும். எல்லா கிரக இணைவிற்கும் பொருந்தும்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

சந்திரன் ராகு , சந்திர கேது இணைவு

🍁 சந்திரனோடு ராகு கேது🍁 #hazan

ராகு கேதுவோடு இணையும் சந்திரன் , ஜாதகருக்கு மாறுபட்ட சிந்தனை தருவார். மனம் சார்ந்த தாக்கத்தை ராகு கேது தருவார்கள்.

இவர்களுக்கு போட்டியே எதிரியே இவர்களது மனசுதான். 

 தன் மனதை தான் கட்டுபடுத்தினால் மட்டுமே இந்த சந்திரன் இவர்களை முன்னேற பாதையை காட்டும். 

ராகு கேதுவின் போக்கில் சந்திரனை விட்டால் , மனம் ஜாதகரை போட்டு ஆட்டி வைக்கும்.

சந்திரன் சரியாக செயல்பட்டால் தான் மனசு சரியாக இருக்கும். மனசு சரியாக இருந்தால்தான் புத்திசாலிதனம் வெளிபடும். #padmahazan 

சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் புத்திக்காரகன் புதன் உச்சமாவார். 

அப்ப புதன் நன்றாக செயல்பட வேண்டும் என்றால் சந்திர தன்னிச்சையாக செயல்பட வேண்டும், சந்திர தன்னிச்சையாக சரியாக செயல்பட சந்திர ராகு கேது இணைவை பெறவே கூடாது.

உப்புகடலில் போட்ட தகர டப்பாவை போல சந்திரனை சர்பங்கள் அரிக்கும். சிதிலமடைய வைக்கும். 

சந்திர ராகு கேது இணைவை பெற்றவர்கள் , இறைவன், கடவுள், ஆன்மீகம் , யோகா , தியானம் போன்ற செயலில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

Tuesday, April 4, 2023

தந்தை வழி பாதிப்பு தரும் கிரகம்

🍁 🌟 தந்தை வழி பாதிப்பை தரும் கிரக அமைப்பு 🌟 🍁  #hazan 

ஜாதகத்தில் தந்தையை குறிக்கும் ஒன்பதாம் பாவகத்தில் , பாவர்களான சனி செவ்வாய் ராகு அல்லது நீச தொடர்பை கிரகங்கள் பெறும் போது தந்தை வழி ஆதரவு சிறப்பாக சொல்லி கொள்ளும் விதமாக இருக்காது அல்லது சுமூகமான உறவுமுறை தராது

கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதக கிரக அமைப்பை பாருங்கள்.


மீன லக்னம்.

9ல் சனி , 9 அதிபதி செவ்வாய் 6ல் மறைந்து உள்ளார். 

அந்த ஒன்பதாம் அதிபதிக்கு செவ்வாய்க்கும் சனியின் பத்தாம் பார்வை உள்ளது.

ஒன்பதாம் பாவகத்தில் உள்ள சனியை செவ்வாய் தனது 4ம் பார்வையாக பார்க்கிறார்.

தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம் அந்த வீட்டை வலுபடுத்தும் ஆனால் இங்கே சனி பார்த்த செவ்வாய் தன் வீடான விருச்சிகத்தை பார்ப்பது ஒன்பதாம் வீட்டை வலுபடுத்தும் ஆனால் பாவ வலுவை ஏற்படுத்தும். அதாவது negative ஆன வலுவை ஒன்பதாம் இடம் பெறும். #padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

பலன் ~ 

1). தந்தை இருப்பார் ஆனால் ஜாதகரோடு ஒத்து போக மாட்டார்.

2). தந்தை செயல் ஜாதகருக்கு பிடிக்காது, ஜாதகரை கண்டால் தந்தை விரோதம் செய்வார்.

3). ஜாதகருக்கு நல்ல விஷயம் சுப காரியம் நடைபெறுவதை தந்தையே தடுப்பார் , அதை தந்தை விரும்ப மாட்டார்.

அல்லது

4). தந்தை கூலிதொழிலாளி போன்ற நலிந்த பொருளாதார அந்தஸ்து கொண்ட நபராக இருப்பார்.

5). குடியும் கோபமும் எப்போதும் தந்தையிடம் இருக்கும். 

6). தந்தை ஊர் வம்பை தேடி சென்று பெறுபவராக இருப்பார் அல்லது , தந்தை பட்ட கடனை மகன் அடைப்பார்

7). தந்தை வழி பங்காளிகளோடு வம்பு வழக்கு வரும். அதில் ஜாதகர் வாழ்க்கை சிக்கி பரிதவிப்பார். ( தசா புத்தி ஏற்ப இது மாறும் )

மேலே உள்ள பலனை த‌ந்தை காரகன் சூரியன் நின்ற பாவகம், சூரியன் பெறும் ஸ்தான பலம் , சூரியனுக்கு கிடைக்கும் சுப / பாவ தொடர்பை பொறுத்து இதில் எது நடக்கும் என்று கூறலாம். ஆனால் இந்த பலன்கள் முதன்மையாக நடைபெறும். 

லக்னாதிபதியான குரு வலு ஏற்ப தந்தை மகனுக்கு அடிமையா..? இல்லை மகன் தந்தைக்கு அடிமையா..? என்று கூறலாம். 

மிக குறிப்பாக ,  6ல் மறையும் செவ்வாய் 8 அதிபதி சுக்ரனின் சாரம் பெறவோ , 9 இருக்கும் சனி சுயசாரமோ புதனின் பாதக சாரமோ பெறுவது பிரச்சனைக்கு மேலும் வலுசேர்த்து விடும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...