Tuesday, April 4, 2023

தந்தை வழி பாதிப்பு தரும் கிரகம்

🍁 🌟 தந்தை வழி பாதிப்பை தரும் கிரக அமைப்பு 🌟 🍁  #hazan 

ஜாதகத்தில் தந்தையை குறிக்கும் ஒன்பதாம் பாவகத்தில் , பாவர்களான சனி செவ்வாய் ராகு அல்லது நீச தொடர்பை கிரகங்கள் பெறும் போது தந்தை வழி ஆதரவு சிறப்பாக சொல்லி கொள்ளும் விதமாக இருக்காது அல்லது சுமூகமான உறவுமுறை தராது

கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதக கிரக அமைப்பை பாருங்கள்.


மீன லக்னம்.

9ல் சனி , 9 அதிபதி செவ்வாய் 6ல் மறைந்து உள்ளார். 

அந்த ஒன்பதாம் அதிபதிக்கு செவ்வாய்க்கும் சனியின் பத்தாம் பார்வை உள்ளது.

ஒன்பதாம் பாவகத்தில் உள்ள சனியை செவ்வாய் தனது 4ம் பார்வையாக பார்க்கிறார்.

தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம் அந்த வீட்டை வலுபடுத்தும் ஆனால் இங்கே சனி பார்த்த செவ்வாய் தன் வீடான விருச்சிகத்தை பார்ப்பது ஒன்பதாம் வீட்டை வலுபடுத்தும் ஆனால் பாவ வலுவை ஏற்படுத்தும். அதாவது negative ஆன வலுவை ஒன்பதாம் இடம் பெறும். #padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

பலன் ~ 

1). தந்தை இருப்பார் ஆனால் ஜாதகரோடு ஒத்து போக மாட்டார்.

2). தந்தை செயல் ஜாதகருக்கு பிடிக்காது, ஜாதகரை கண்டால் தந்தை விரோதம் செய்வார்.

3). ஜாதகருக்கு நல்ல விஷயம் சுப காரியம் நடைபெறுவதை தந்தையே தடுப்பார் , அதை தந்தை விரும்ப மாட்டார்.

அல்லது

4). தந்தை கூலிதொழிலாளி போன்ற நலிந்த பொருளாதார அந்தஸ்து கொண்ட நபராக இருப்பார்.

5). குடியும் கோபமும் எப்போதும் தந்தையிடம் இருக்கும். 

6). தந்தை ஊர் வம்பை தேடி சென்று பெறுபவராக இருப்பார் அல்லது , தந்தை பட்ட கடனை மகன் அடைப்பார்

7). தந்தை வழி பங்காளிகளோடு வம்பு வழக்கு வரும். அதில் ஜாதகர் வாழ்க்கை சிக்கி பரிதவிப்பார். ( தசா புத்தி ஏற்ப இது மாறும் )

மேலே உள்ள பலனை த‌ந்தை காரகன் சூரியன் நின்ற பாவகம், சூரியன் பெறும் ஸ்தான பலம் , சூரியனுக்கு கிடைக்கும் சுப / பாவ தொடர்பை பொறுத்து இதில் எது நடக்கும் என்று கூறலாம். ஆனால் இந்த பலன்கள் முதன்மையாக நடைபெறும். 

லக்னாதிபதியான குரு வலு ஏற்ப தந்தை மகனுக்கு அடிமையா..? இல்லை மகன் தந்தைக்கு அடிமையா..? என்று கூறலாம். 

மிக குறிப்பாக ,  6ல் மறையும் செவ்வாய் 8 அதிபதி சுக்ரனின் சாரம் பெறவோ , 9 இருக்கும் சனி சுயசாரமோ புதனின் பாதக சாரமோ பெறுவது பிரச்சனைக்கு மேலும் வலுசேர்த்து விடும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...