கீழே கொடுக்கபட்டுள்ள கிரக அமைப்பை பாருங்கள்.
கடக லக்னம்.
பெண்களை குறிக்கும் சுக்ரன் 8ல் அஷ்டம ஸ்தான அதிபதி யான சனியோடு இணைந்து மறைகிறார். 8 சுக்ரனுக்கு கடுமையான மறைவு.
8ல் மறையும் சனி மறுபக்கம் 7 அதிபதியான வாழ்க்கை துணையை குறிக்கும். அவரும் 8ல் மறைகிறார்.
சுக்ரனே பாதகாதிபதி ஆகி அவரும் இளைய தாரத்தை தரும் 11 அதிபதி அவரும் 8ல் மறைகிறார்.
ஏழாம் அதிபதி , 11 அதிபதி , சுக்ரன் என அனைத்தும் 8ல் மறைவது காதலி , மனைவி , இரண்டாம் மனைவி , ஏன்..? துணிக்கடையில் சட்டை எடுத்து பிரித்து காமிக்கும் பெண் வரை இவருக்கு மன அழுத்தம் , பிரச்சனை தருவார்கள்.
வரவு செலவு , குடும்ப செலவு , வாகனம் தொழில் அனைத்தும் தலைவலியை உண்டாக்கும்.
கடக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு இருக்க கூடாத கிரக அமைப்பு இது. இதில் சுக்ர அல்லது சனி தசா புத்தி வரும் காலத்தில் பாதிப்பை கூடுதலாக காட்டும்.
இங்கே அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திர பெற்றால் நிச்சயமாக 100% பாதிப்பை சுக்ரன் தருவார். குருவின் பூரட்டாதி சாரம் பிரச்சனை சமாளிக்கும் குணத்தை தரும்.
இதே அமைப்பு, ரிஷபம் 10ல் , துலாம் 5ல் , தனுசு 3ல் , மகரம் 2ல் , கும்பம் லக்னத்தில் சுக்ரன் சனி இணைவு மனைவி வந்த பிறகு நல்ல பொருளாதார சேர்க்கை , தொழில் முன்னேற்றம் தரும்.
ஏழாம் அதிபதி சுப வலுபெற்று , ஏழாம் அதிபதிக்கு வீடு கொடுத்த கிரகமும் வலுபெற அதிகபடியான சுப பலனை வாகன யோகம் தொழில் விருத்தி ஏற்படுத்தி கொடுக்கும்.
இந்த கடக லக்னத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.
இதே சிம்ம லக்னத்திற்கு எட்டில் சுக்ரன் தனித்து உச்சமாகி தசா நடத்தால் , 10 அதிபதி 8ல் உச்சமாகி ,
தூர தேச வாழ்வில் பெரும் சொகுசு வாழ்வை தருவார், கை நிறைய பணம் கிடைக்கும்.
வெளிநாட்டு பெண்ணை கூட திருமணம் செய்யும் சூழலை வயதிற்கு ஏற்ப தருவார்.
ஜோதிடம் ரொம்ப நுணுக்கமானது சிறிய கிரக மாற்றம் கூட மொத்த பலனும் மாறி அமைத்து கொடுக்கும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
#padmahazan
No comments:
Post a Comment