சில ஜாதகங்களில் பார்க்க முடிகிறது,
யோக தசா அல்லது அதிக சுப கிரக தொடர்பை பெற்ற தசா ஒருவருக்கு துறை ரீதியாக அரசு பணிக்கு படிக்கும் தூண்டுகோலை தந்தாலும் ,
அதற்கு அடுத்து வரும் அவயோக தசா அல்லது அதிகபடியாக பாவியர் தொடர்பை பெற்ற தசா ,
1). கிடைத்த வேலையை விட்டு அவயோக தசா பாதிப்பை தருகிறது,
அல்லது
2). அரசு பணி என்கிற மோகத்தில் அவயோக தசா வாழ்வை அரசு பணி முயற்சியிலேயே வாழ்வை தொலைத்து விடுகிறது.
அரசு பணியில் இருந்து நிம்மதியாக அடுத்த 25 to 60 வயது வரை சம்பளம் வாங்கும் அமைப்பிற்கு அடுத்தடுத்த யோக தசா அல்லது சுப கிரக தொடர்பை பெற்ற தசா வர வேண்டும் என்கிற வேறுபாடு தெளிவாக பார்க்க முடிகிறது.
அரசு வங்கி கிளார்க் பணி கிடைத்தும் அதை அனுபவிக்க முடியாதபடி ராஜினாமா செய்ய துண்டும் சனி பார்த்த அவயோக ராகு தசா வை கூட இங்கே பார்க்க முடிகிறது.
நடப்பு மற்றும் அடுத்தடுத்த தசா மிக முக்கியம் , சம்பவங்களை நடத்தி காட்டுவது தசா...
பௌர்ணமி யோகம் வேணுமா..? இருக்கு,
தர்மகர்மாதிபதி யோகம் வேணுமா..? இருக்கு,
பஞ்சமகா புருஷ யோகம் வேணுமா..? இருக்கு,
பர்வத ராஜயோகம் வேணுமா..? அதுவும் இருக்கு,
ஆனால் அந்த யோக தசா ஏதும் இல்ல நடப்பது அவயோக தசா என்றால், " அத்தனை யோகம் இருந்தும் என்ன புண்ணியம்..? " என்கிற வேதனைதான் மிஞ்சும்.
அடுத்தடுத்த தசாகள் மிக மிக முக்கியம்...
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment