பாற்கடலை கடைந்த போது பெறபட்ட அமிர்தத்தை உண்ட ஒரு அசுர உடலின் வெட்டபட்ட தலையே ராகு.
அமிர்தம் முழுமையாக உடல் முழுவதும் கலக்கும் முன் , தலை வெட்டபட்டதால் அமிர்தம் கழுத்து கீழே உள்ள முண்டமான உடலை மட்டுமே அசுர குணம் இயல்பை மாற்றி விட்டது, வெட்டப்பட்ட தலை அதே அசுர குணத்தை கொண்டது என்று ராகு கேது இயல்பை மோகிணி அவதார புராணங்களில் கேட்டு இருப்போம்.
ராகு பகவானே விஷத்திற்கு காரகன், உயிர் கண்டம் தரும் அளவிற்கு கொடிய நஞ்சு விஷம் வேதி பொருட்களை குறிப்பவர் ராகு. #padmahazan
இந்த ராகு ஒரு ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருக்கும் போது,
1). பூச்சி கடி , பாம்பு கடி , விஷ ஜந்து கடி இவற்றால் உண்டாகும் உடல் பாதிப்பை தருவார்.
2). தற்கொலைக்கு விஷத்தை தேடும் எண்ணத்தை தருபவரும் ராகுதான்.
3). புதிய சுற்றுசூழலில் ஒருவருக்கு உண்டாகும் ஒவ்வாமைகளை குறிப்பவரும் ராகு.
சிலருக்கு புதிய வேதிபொருட்கள் , சில பூக்களின் மகரந்த வாசனை ,தொற்று பூஞ்சைகள் நிறைந்த சூழல் சுவாசிக்கும் போது உண்டாகும் ஒவ்வாமை , அலர்ஜி இவற்றை தருவதும் ராகு.
இவை சிறிய அளவிலான நச்சு தன்மை கொண்டவை.
ஒருவருக்கு ராகு தசா அல்லது புத்தி காலத்தில் அடிக்கடி விஷ பூச்சி ஊர்வன பார்ப்பது , வீடுகளில் சுற்றுசூழல் களில் போவதை பார்ப்பது, அவற்றால் உண்டாகும் பய உணர்வு போன்றவை ராகு சாதகம் இல்லாத நிலையை காட்டும்.
அதே ராகு தசா அல்லது புத்தி காலத்தில் பணமும் பொருளும் ஆடம்பரமும் சேர்ந்து விஷ ஜந்து பாதிப்பு இல்லை என்றால் அந்த ராகு உங்களுக்கு நன்மையை தருவார்...
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🌟 சனி தொடர்பு பெற்ற ராகு ~
ராகுவோடு சனி இணைந்தாலோ பார்த்தாலோ, கூடுதலாக சனி லக்னத்திற்கு 6 8 அதிபதியாகும் போது ராகுவின் தசா புத்தி காலத்தில் ஊர்வன , சிறு சிறு பூச்சி தொந்தரவை ஏற்படுத்தி உடல் மனம் ( பயம் கொடுத்து ) இரண்டையும் ராகு பாதிப்பார்.
🌟 செவ்வாய் தொடர்பு பெற்ற ராகு ~
ராகுவோடு செவ்வாய் இணைந்தாலோ பார்த்தாலோ , கூடுதலாக செவ்வாய் லக்னத்திற்கு 6 8 பாதக அதிபதியானாலோ , ஜாதகர் அவசரபட்டு தன் முடிவை தேடி கொள்ளும் எண்ணங்களால் பாதிக்கபடுவார்.
🌟சந்திரன் ராகு இணைவு ~
சந்திரன் ராகுவோடு இணையும் நிலையில் விஷ ஊர்வன பூச்சிகள் மீதான பயம் அதிகபடியாக ஒருவருக்கு இருக்கும்.
பாம்பு படத்தை டிவியில் பார்த்தால் கூட இரவு தூங்காத சிலரை பார்க்க முடியும். அவர்களுக்கு கடுமையான தேய்பிறை சந்திரன் ராகுவோடு இணைந்து மனம் விச ஜந்து பூச்சிகளால் பயம் கொண்டு இருப்பார்கள்.
🌟லக்னம் லக்னாதிபதி கெட்டு 8 அதிபதியான சனி அல்லது செவ்வாய் அல்லது தேய்பிறை சந்திரனின் இணைவை பெற்ற ராகு தசா மற்றும் புத்தி காலம் ,
🌟லக்னாதிபதியோடு ராகு சேர்க்கை,
🌟எட்டாம் அதிபதினோடு ராகு சேர்க்கை
போன்ற நிலைகளில் விஷம் நஞ்சு ஒவ்வாமை பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மேலே சொன்ன கிரக நிலைகளோடு
🌟குரு இணைவது பார்ப்பது பாதிப்பை குறைக்கும்.
🌟லக்னமும் லக்னாதிபதியும் வலு பெற்றால் பாதிப்பை சமாளிக்கும் ஆற்றலை ஜாதகர் பெறுவார்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment