மூன்று மாதம் முன்பு பலன் சொன்ன ஜாதகம்,
ஜாதகரது சம்பாத்தியம் 1.5 லட்சம் / மாதம்.
ஐடி ஊழியர்.
அவரது முக்கியமான கேள்வி ,
" மாத வீட்டு EMI 70 ,000 போய்விடுகிறது, 70000 மற்ற வீட்டு செலவு , பெட்ரோல் , ஸ்கூல் பீஸ் , Shopping பொய்டுது , கையில எதுவுமே தங்க மாட்டுது , சேமிப்புனு எதுவுமே இல்ல , வீட்டு EMI இன்னும் 7 8 வருஷத்துக்கு மேல போகுது , பசங்களோட higher studies எப்படி சமாளிக்க போறேன்னு தெர்ல , lay off ஏதும் வந்தால் என்ன பண்ண போறேனு தெர்ல " என்பதே.
வீட்டு EMI 70000 என்றால் வீட்டின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் , என்று யோசிக்க வேண்டும்.
அடுத்து அஷ்டம சனி , அதன் பிறகான வலுத்த 12 மிட அதிபதி தசா , 12 மிட பாவ கிரக பார்வையில் அந்த தசா , சம்பாத்தியம் முழுவதும் நிம்மதி இல்லாமல் போகும் சூழலில் உள்ளது.
" இவ்வளவு விலைக்கு ஏன் வாங்குறீங்க..? " என்றால்,
" எங்க ஆபிஸ் ல higher position இருக்க எல்லாரும் இப்படிதான் வாங்கி இருக்காங்க, என்னையும் வாங்க encourage பண்ணாங்க , வாங்கிடேன் சார் " சொல்றார்...
நகர்புற கிராமங்களில் மாத வருமானம் 15,000 20,000 வருமானத்தில் நிம்மதியாக இருப்பவர்களை பார்க்கும் போது , பெருசா படிக்கலைனாலும் பிரச்சனையை தேடிக்காமல் நிம்மதியாக வாழும் சூழலில் இருக்காங்க...
பணம் வர வர மனிதனுக்கு பிரச்சனைகளும் மேலே மேலே வருகிறது...
கடன் இருக்கலாம், தலைக்கு மேலே இருக்க கூடாது.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment