ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் பெறும் ஒளி நிலையை பொறுத்தும், சந்திரன் பெறும் ஸ்தான பல வலுவை பொறுத்தும் ஒருவருக்கு சாப்பிட்டு பிரியராக்கும் ,
கூடுதலாக சுக்ரன் மற்றும் செவ்வாய் தொடர்பை பொறுத்து சமையல் கலையும் கொடுக்கும்.
சந்திரன் அமாவசை நிலையில் இருப்பது , சனியோடு இணைந்து பார்க்கபட்ட சந்திரன் சாப்பாட்டு சார்ந்த பாதிப்பை தருவார், எவ்வளவு சம்பாதித்தாலும் வாய்க்கு ருசியாக சமைக்கும் தாயாரோ அல்லது மனைவியோ அமையமாட்டார்கள். சுக்ரன் வலுவையும் இங்கே காண வேண்டும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
பெரும்பாலான ரிஷப ராசிக்காரர்கள் 90% சாப்பாட்டு பிரியர்களாக இருப்பார்கள். காரணம் இனிப்பு மற்றும் உணவுகளை குறிக்கும் சந்திரனும் சுக்ரனும் ரிஷபத்தில் உச்சம் மற்றும் ஆட்சி வலுவை பெற்று இருக்கும் ராசி என்பதால். 90% ரிஷப ராசிக்காரர்கள் சாப்பாட்டு பிரியர்களே.
அதே போல பெரும்பாலான மேஷ விருச்சிக ராசிகாரர்களும் நல்ல சமையல் கலை அறிந்தவர்களாக இருப்பார்கள். சமையல் நுணுக்கங்களை எளிதாக புரிந்து கொள்பவர்கள் இவர்கள்.
மேஷ ராசிக்கு சுகாதிபதியாகும் சந்திரன், விருச்சிக ராசிக்கு பாக்கியாதிபதி யாகி ராசியில் நீசமாவார், இருப்பினும் நீச சந்திரனுக்கு குரு பார்வை அல்லது சுக்ர பார்வை கிடைக்கும் போது, நீச சந்திரன் செவ்வாயோடு நீச பரிவர்த்தனையாக இருக்கும் போது சாப்பாட்டு கலை மீதான ஈர்ப்பை நுணுக்கத்தை தரும். #padmahazan
ஒருவருக்கு சாப்பாடு பிரியம் மற்றும் சமையல் கலை மீதான ஆர்வம் பற்றி புரிந்து கொள்ள , முதன்மையாக சந்திரன், செவ்வாய் மற்றும் சுக்ரன் மூன்று கிரகங்களையும் , பாவக ரீதியாக 2 4 10 இடங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது பற்றி எழுத இன்னும் பல கிரக அமைப்புகளும் உள்ளன. உதாரணமாக வளர்பிறை சந்திரன் ராகு இணைவு போன்றவை அதை மற்றொரு பதிவில் காண்போம்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment