சூரியன் நவகிரகங்களில் அனைத்து கிரகங்களுக்கும் தனது ஒளியை தரும் ஒளி மூல ஆதார கிரகம்.
ராகு கேதுவை தவிர யாரிடமும் அடங்கிபோகாத தன்மை கொண்டவர். தான் நீச நிலையில் நின்றாலும் இணைந்த கிரகத்தை அஸ்தங்கம் செய்து வலுஇழக்க வைக்கும் தன்மை உடையவர். பிற கிரகங்கள் இழந்த பலத்தை தன் தசா புத்தி காலத்தில் தரும் நவகிரக நாயகன். நவகிரகங்களில் அரை சுபராக விளங்குபவர். #padmahazan
குரு சுக்ர புதன் கிரகங்களோடு இணையும் போதும் , குரு மற்றும் சந்திரன் பார்வை பெறும் போதும் அளவுகடந்த சுப வலுவை பெற்று யோக நிலையை லக்ன 3 9 11 , 4 7 10 இடங்களில் தருவார்.
சனி செவ்வாய் பார்வை பெறும் போதும், சனி செவ்வாய் ராகு கேது இணைவை பெறும் போதும் இயல்பிற்கு மாறாக தனது அசுப வலுவோடு கெடு பலனை தருவதாக அமைந்துவிடுவார்.
9 வீட்டில் இருக்கும் சூரியனிற்கு ராகு கேது சனி தொடர்பை பெறும் போது காரகோ பாவ நாஸ்தியை தந்து தந்தையை பிடிப்பார் அல்லது இழக்க வைப்பார். சூரியனது தசா அல்லது புத்தி காலத்தில் பலனை தருவார்.
சூரியனின் உச்ச வீடு மேஷம் ;
ஆட்சி & மூலத்திரிகோண வீடு சிம்மம்;
நீசவீடு துலாம்.
இவரின் தன்மைகள் :
1). அரசு மற்றும் அரசியல் : எல்லோருக்கும் ஆணையிடும் அதன் வழியே வழிநடத்தும் அரசாங்கம் அரசு உடைமைகள் மற்றும் தலைமைகளை குறிப்பவர்.
2). ஆளுமைத்திறன் : நாலு பேராக இருந்தாலும் அவர்களை ஆணையிட்டு வேலை செய்ய வைப்பது அவர்களை வழிநடத்தும் தன்மை பெறுவது. #padmahazan
3). உஷ்ணம் : நெருப்பு சூடு சம்மந்தப்பட்ட தன்மை அதனால் உண்டாகும் நோய்
4). கம்பீரமான தோற்றம் : அனைவராலும் மதிக்ககூடிய மரியாதை தரகூடியதொரு கம்பீரமான தோற்றம்.
5). ஆத்ம பலம் : ஒரு செயல் செய்ய தன்னை உணரும் நிலை... தான் யார் என்பதை உணர்ந்து ஒரு மேல் நிலையான நிலையை அடைய உதவும் தன்மை.
6). தன்னம்பிக்கை : ஒரு செயலை செய்ய தன்னால் முடியும் என்ற ஒரு சுய எண்ணத்தை கொடுக்கும் கிரகம். #padmahazan
பொதுவாகவே மேலே சொன்ன அனைத்து விஷயங்களுமே தலைமை தாங்க தேவையான குணநலன்களே... அதுவே சூரியனை முதன்மை கிரகம் ஆக உள்ளார்.
ஆதிபத்திய சிறப்பு இல்லாமல் இருந்தாலும் 12 லக்னங்ககாரர்களுக்கும் சூரிய வலுஇழப்பது நல்லது கிடையாது.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP NUMBER 8300 620 851
No comments:
Post a Comment