சுக்ரன் கழிவு நீக்க உறுப்பான சிறுநீரகங்களை குறிப்பவர். வெளிப்புற கழிவு நீக்க உறுப்பை சனியும் கேதுவும் குறிக்கும் போது உட்புற உறுப்பான சிறுநீரகத்தை சுக்ரன் குறிப்பார்.
சுக்ரன் பகை நீசம் பெற்று சனி பார்வை பெறுவது,
சுக்ரன் ஆட்சி உச்சம் பெற்றாலும் ராகு இணைவது அல்லது சுக்ரன் ராகுவோடு இணைந்து சனி பார்வை பெறுவது,
வெண் படிமங்களை குறிக்கும் சந்திரன் உடன் இணைவது போன்றவை சிறுநீரக கல் அல்லது சிறுநீரக குறைபாட்டை, 6 8 அதிபதி தொடர்பை பெறும் போது தருவார்.
சனி ராகு சந்திரனால் பாதிக்கும் சுக்ரனுக்கு 6 8 அதிபதிகளது சாரம் இணைவு , பார்வை பரிவர்த்தனை பெறும் போது சிறுநீரக கல் , சிறுநீரக செயல் இழப்பு தருவார். #padmahazan
சுக்ரன் கன்னி துலாம் விருச்சிக ராசிகளில் மேலே உள்ள சனி ராகு செவ்வாய் பார்வை இணைவு கூடுதலாக 6 8 அதிபதி ஆதிபத்திய நட்சத்திர பெற்றும் விடும் நிலையில் சிறுநீரக பாதிப்பை தருகிறது.
6 அல்லது 8 ஆதிபத்திய பெற்ற சூரியனால் அஸ்தங்க தோசம் பெற்ற சுக்ரனும் சிறுநீரக பாதிப்பை குறிப்பாக மீன லக்னத்திற்கு சுக்ர தசாவில் தரும்.
கூடுதலாக செவ்வாய் தொடர்பை பெற்றால் சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற நிலையை சுக்ரன் தருவார்.
" சுக்ரன் சந்திரன் இணைவு இருக்கு அப்ப என் கிட்னி கியா முயா தானா..? கிட்னி பிரச்சனை கொடுக்குமா ..? " பயபட கூடாது. மேலே சொன்ன ஒட்டு மொத்த தொடர்பும் சுக்ரனுக்கு வர வேண்டும் சம்மந்தப்பட்ட தசா புத்தி வர வேண்டும்.
சுக்ர தசா வராத வரை பாதிப்பு வராது , பிற தசாக்களில் வரும் சுக்ர புத்தி சில குறுகிய கால சரியாக கூடும் பாதிப்பை தரும்.
மேலே சொன்ன கிரக அமைப்பை கொண்ட நிலையில் சுக்ர தசா 40 வயது முதல் 80 வயதிற்குள் வரும் நிலையில் ஜாதகர் கவனமாக இருப்பது நல்லது. #padmahazan
இதுவரைக்கும் எந்த பிரச்சனை வரவில்லை , ஆனால் அமைப்பு உள்ளது என்றால் பயபடாதீங்க ,
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
1). நிறைய தண்ணி குடிங்க,
2). அதிகமா வியர்வை வெளியேற்றும் நடைபயிற்சி பண்ணுங்க,
3). அதிகபடியான தாது பொருட்களை கொண்ட சுத்தம் இல்லாத நீரை குடிக்காதீங்க ,
4). அதிகபடியான நச்சு தன்மை , அதிகபடியான தாது *கால்சியம்* உடம்பில் சேர்வது போன்ற நிலையில் அது கல்லாக மாறும்.
5) அதிகபடியாக குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
6). இளநீர் குடிப்பது , வாழைதண்டு , வாழைபூ உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
#padmahazan
No comments:
Post a Comment