12 பாவகங்களில் மிக முக்கியமான பாவகங்கள் 1 5 9. இவை வலுவாக அமைவது யோகம்.
இந்த 5 பாவகம் வலுபெற்றால் மிகப்பெரிய அதிர்ஷ்டம், புத்திசாலிதனம், நற் சிந்தனை , தெளிவான முடிவை தீர்க்கமாக எடுக்க வைக்கும்.
வாழ்வில் சாதித்த பெரும் உயர்வு பெற்றவர்களுக்கு இந்த ஐந்தாம் இடம் வலுவாக அமைந்து இருக்கும்.
ஐந்தாம் அதிபதி உச்சம் பெறுவார் அல்லது ஐந்தில் ஒரு சுபர் உச்சம் பெறுவார், அல்லது நட்பு வீடுகளில் ஐந்தாம் அதிபதி நன்றாக இருப்பார். #padmahazan
உங்களை ஒரு புலி துரத்தும் போது , ஐந்தாம் இடம் கெட்டால் " ஐயோ புலி துரத்துதே " என்று ஓடி கொண்டே இருபீங்க , ஒரு கட்டத்தில் கால் சோர்ந்து வேகம் குறைய புலியிடம் சிக்கி ; புலிக்கு லெக் பீஸ் கொடுக்க வேண்டி இருக்கும்.
அதே ஐந்தாம் இடமும் அதிபதி வலுத்த ஒருவரை , புலி துரத்தினால், ஓடும் போதே அவர் , எங்கிட்டு ஓடி எங்கிட்டு குதித்து , புலியை பள்ளத்தில் தள்ளி விடுவது , புலிக்கு ஏதேனும் பாதிப்பை தர முடியுமா..? என்ற கோணத்தில் புத்தியை தீட்டுவார்கள். பிரச்சனை விட அதில் இருந்து வெளியே வரும் தீர்வை தேடுவார்கள்.
ஐந்தாம் இடம் கெடும் போது பிரச்சனை மட்டும் கண்ணுக்கு தெரியும், ஐந்தாம் இடம் வலுக்கும் போது பிரச்சனைக்கான தீர்வு கண்ணுக்கு தெரியும்.
இதை பூர்வ புண்ணி அதிர்ஷ்டம் என்றும் எடுத்து கொள்ளலாம், இல்லை புத்திசாலி திறமை என்றும் எடுத்து கொள்ளலாம்.
ஒர் நாள் புதன் உச்சம் பெற்றாலும், அன்றைய 12 லக்னத்திற்கு ஐந்தாம் பாவக வலு ஏற்ப , அன்றைக்கு வெவ்வேறு லக்னத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திசாலி தனமும் , திறமையும் வேறுபடும்.
5ம் பாவகம் வலு மிக முக்கியம்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment