Sunday, April 9, 2023

தனிமை தரும் கேது

🍁 தனிமை தரும் கேது 🍁 #hazan 

தனிமையை தருவது கேது. 

தனித்திரு..! 
விலகி இரு..!! 
வீட்டிலேயே இரு..!!! என்ற கொள்கை கொண்டவர் கேது. 

கேது தனிமை விரும்பி. தனிமையை கொடுப்பது கேதுவாக இருந்தாலும் , அதை முறையாக பயன்படுத்தி கொள்வதற்கு லக்னம் லக்னாதிபதி , கேது நின்ற பாவக அதிபதி சரியாக அமைய வேண்டும். 

சிலருக்கு தனிமை கருப்பு ஜீஸ் போல இனிக்கும் , பலருக்கு பாகற்காய் ஜீஸ் போல கசக்கும்.

தனிமை சரியாக கையாள தெரிந்தவர்கள் , நிச்சயமாக அந்த சூழலையும் நேரத்தையும் சரியாக பயன்படுத்தி கொள்வார்கள். அடுத்தடுத்த நகர்விற்கான தேடலை , ஒருவருக்கு தன்னை பற்றிய உண்மை புரிதலை , தன்னுடைய திறமை வரம்புகளை தனக்கு உணர்த்துபவர் கேது. #padmahazan 

இதெல்லாம் உணர்ந்து அதை முறையாக பயன்படுத்தி உயரத்தை தொட வைப்பவர் கேது.

கூட்டத்தில் இருந்தாலும் தனி ஒருவனாய் வாழ வைப்பது கேது. கூட்டத்தில் இருந்தாலும் பிறரால் கவனத்தை சிதறாது தன் வேலையில் குறியாக இருப்பது கேது.

ராகு கொட்டி கொட்டி எதை கொடுத்தாலும் மனிதனை மாயையில் சுற்ற வைத்து சிரிப்பார்... 

கேது தனிமையை கொடுத்து மனிதனை வாழ்வை புரிய வைத்து , தனிமை க்கு பிறகான சூழலை முறையாக பயன்படுத்தி கொள்ளும் பக்குவத்தை தருவார். 

கேது உங்களுக்கு முறையாக அமைந்தால் , யோகமாக அமைந்தால் , யோகாதிபதி வீட்டில் அமைந்தால் , குருவோடு இணைந்தால் , சனி தொடர்பை பெற்றால் நிச்சயமாக தனிமையை கொடுத்து பின்னாளில் பக்குவ பட வைப்பார்.

கேது அவயோகமாக அமைந்தால் , 6 8 அதிபதி தொடர்பை பெற்றால் , தனிமையில் ஜாதகரை பக்குவபடுத்துவதை விட சித்திரவதை செய்வார். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...