பதிவில் இருப்பவை 1).அஸ்தங்க பாகை
2).காரகத்துவ ஆதிபத்திய பாதிப்பு
3). அஸ்தங்க தோச நிவர்த்தி
சூரியனை நெருங்கும் கிரகம் சூரியனின் பிரம்மாண்ட ஒளியில் அந்த நெருங்கிய கிரக ஒளி வலுவை இழக்கும் நிலையே அஸ்தங்கம் என்கிறோம்.
சூரியனுக்கு முன் பின் ஆக நெருங்கும் , செவ்வாய் குரு புதன் சுக்ரன் சனி ஆகிய 5 கிரகமும் அஸ்தங்க தோசத்தை பெறுவார்கள். தோசம் என்றால் குறை என்று பொருள்.
சூரியனால் ராகு கேதுவை அஸ்தங்கபடுத்த இயலாது. மாறாக சூரியனை ராகு கேது இணைவில் கிரகணம் ஆகி சூரியனே வலுஇழப்பார். #padmahazan
○○○ அஸ்தங்க பாகை ○○○
சூரியனை நெருங்கும் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனி தனியே அஸ்தங்க தூரம் பாகை அளவில் இருந்தாலும் , சூரியனோடு 5° குள் கிரகம் பாதிக்கவே செய்யும். சூரியனோடு 3° பாகைகுள் நெருங்கும் கிரகம் கடுமையாக வலுஇழந்து போகும்.
சூரியனோடு 10° மேல் விலகி இருந்தால் கூட அந்த அஸ்தங்க நிலை பெரிதாக பாதிப்பது இல்லை. 5° குள் இணையும் கிரகமும் அதனினும் கூடுதலாக 1° பாகையில் சூரியனோடு இணையும் கிரகமும் கடுமையாக பாதிக்கவே செய்கிறது.
அஸ்தங்கம் பெற்ற கிரகம் சூரியனோடு எவ்வளவு பாகை நெருங்கி உள்ளதோ , அதற்கு ஏற்ப அந்த கிரக காரகமும் ஆதிபத்தியமும் பாதிக்க செய்யும். #padmahazan
அஸ்தங்கம் பெற்ற கிரகம் தனது உச்ச வீட்டிலோ ஆட்சி வீட்டிலோ அமைந்து இருந்தால் அந்த அஸ்தங்க நிலையில் அந்த கிரகம் பலவீனபடுவது இல்லை.
மாறாக நீச வீட்டிலோ பகை சம வலு கொண்ட வீட்டில் அஸ்தங்க பெறும் கிரகம் கடுமையாக பாதிக்கும். அந்த கிரகம் 10° விலகி இருந்தால் கூட பலம் இல்லாத வீட்டில் இருந்து அஸ்தங்கம் பெறும் நிலையில் மேலும் அந்த கிரகம் பாதிக்கவே செய்கிறது.
மிகவும் குறிப்பாக இருள் கிரகமான கருப்பு ஊதா நிறத்தை வெளிபடுத்தும் சனி அஸ்தங்க தோசத்தில் சூரியனால் அதிகபடியாக வலுஇழந்து போவார்.
குரு பகவான் அஸ்தங்கம் பெற்றால் கூட அவரது பார்வை ஓரளவுக்கான பார்வை வலுவை கொண்டே இருக்கும். மிக குறைந்த வலு குன்றிய பார்வை நிச்சயமாக அஸ்தங்க குரு பெற்று இருப்பார்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
○○○ காரகத்துவ ஆதிபத்திய பாதிப்பு ○○○
" ஐயோ எனக்கு ஏழாம் அதிபதி சனி அஸ்தங்கம் ஆகிட்டாருங்க.. அப்ப எனக்கு திருமணமே ஆகாதா..? " என்று கேட்பவர்களும் உண்டு.
ஏழாம் அதிபதி அஸ்தங்க தோசத்தை பெற்றாலும் , களத்திர காரகன் சுக்ரன் நன்றாக அமைந்து விட்டால் நிச்சயமாக திருமணம் நடக்கும். அல்லது ஏழாம் அதிபதியை அஸ்தங்கம் செய்த சூரியனின் தசா அல்லது புத்தி காலத்தில் திருமணத்தை தருவார். #padmahazan
மூன்றாம் அதிபதி அஸ்தங்கம் பெற்றாலும் , செவ்வாய் வலுவாக அமைந்து விட்டால் சகோதரர் இருப்பார்.
நான்காம் அதிபதி பகை வீட்டில் அஸ்தங்க தோசத்தை பெற்றாலும் தாயார் காரகன் சந்திரன் நன்றாக அமையும் நிலையில் தாயாருக்கு எந்த பாதிப்பும் வராது.
அதே நிலையில் ஆதிபத்தியமும் காரமும் ஒன்றாக அமைந்து, அந்த கிரகம் அஸ்தங்கம் பெற பாதிப்பை கூடுதலாக தரும்.
அஸ்தங்கம் பெற்ற கிரக தசா பெரும்பாலான நிலையில் சுப பலனை தராது. மாறாக அவை முன்னேற்றம் இல்லாத மந்த தசாவாக அமைந்துவிடும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
○○○ அஸ்தங்க தோச நிவர்த்தி ○○○
அஸ்தங்க கிரகத்தை நட்பு ஆட்சி உச்ச குரு தனது பார்வையில் 10 ° டிகிரிகுள் இருந்தால் அந்த கிரகம் தனது அஸ்தங்க தோசத்தை நிவர்த்தி செய்யும் நிலையை குரு தருவார்.
குரு பார்வை கோடி நன்மை அதில் ஒரு நன்மை குரு பார்த்த அஸ்தங்க கிரகம் இழந்த வலுவை மீண்டும் பெறும். #padmahazan
அஸ்தங்க கிரகம் பரிவர்த்தனையாக இருப்பது. பரிவர்த்தனையாக இருக்கும் ஆதிபத்திய வீ்ட்டின் வலுவை அந்த கிரகம் பெற்று விடும்.
அஸ்தங்க கிரகம் வர்கோத்தம வலுவில் இருப்பது.
அஸ்தங்க கிரகம் வக்ரம் பெற்றுவிடும் நிலையில் காரகத்துவ பலனை குறை இல்லாதபடி தரும். சுக்ரனுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.
அஸ்தங்க கிரகத்திற்கு 6 7 8 ல் சந்திரன் இருப்பது அதாவது பௌர்ணமி சந்திர பார்வை , சந்திர அதியோகம் அஸ்தங்க தோசத்தை நிவர்த்தி செய்யும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851