ஒரு கிரகம் தன் ஆதிபத்திய வீட்டிற்கு 6 8 12 ல் மறையும் போது தான் பெற்ற ஆதிபத்திய பலனை தரமாட்டார் என்பது பாவத் பாவக பொது விதி.
ஆனால் அனைத்து கிரக நிலைக்கும் இது பொருந்தாது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், தன் வீட்டிற்கு 6 8 12 ல் மறைந்த கிரகம் ராகுவோடு இணையும் போது , அந்த ராகு தசா தொடங்கினால் அந்த கிரக ஆதிபத்திய பலனை ராகு தருவார்.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதக கிரக நிலையை பாருங்கள்.
சிம்ம லக்னம். லக்னத்தில் சனி ராகு இணைவு பெற்று உள்ளது.
லக்னத்திற்கு ஆறாம் அதிபதியான சனி கடன் நோய் எதிரி வம்பு வழக்குகளை தரும் அதிபதி ஆகி , தனது ஆறாம் பாவகத்திற்கு எட்டில் மறைந்து லக்னத்தில் உள்ளார்...
அவரும் இங்கே ராகுவோடு இணைந்து முழு பாவியான சனி மற்றொரு பாவியான ராகுவோடு இணைகிறார்.
ஜாதகரது அந்தஸ்து கௌரவம் தரும் லக்ன பாவகம் கடுமையாக பாதிக்கிறது. கூடுதலாக இது சிம்மத்தில் இருப்பதும் நல்ல அமைப்பு அல்ல.
இங்கே ராகு தசா வரும் நிலையில் , ஜாதகருக்கு நிச்சயமாக நோய் அல்லது உடல் குறைபாட்டை தந்து , ஜாதகரின் உடல் பலவீனபடுவது, உடல் உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவது, ஊனமுற்று கைத்தடி வைத்து நடந்துபோவது, ஆரோக்கியமான சூழலை இல்லாது ராகு தசா கடுமையாகவும் மற்றவர்கள் ஜாதகரை கண்டு பரிதாபமாக பார்க்கும் சூழலையும் தரும்.
சனி ஆறாம் அதிபதி அவர் வீட்டிற்கு மறைந்து விட்டாரே..? பின்பு ஏன் இந்த நிலை என்றால் ராகு தன்னோடு இணைந்த கிரகத்தின் பலனை அப்படியே தருவார்.,
சனியை பொறுத்தவரை ஆறாம் வீட்டிற்கு மறைந்து விட்டார் , ஆனால் ராகுவை பொறுத்தவரை அந்த சனி ஆறாம் அதிபதி அதனால் அந்த பலனை ராகு தருவார்.
கூடுதலாக சிம்ம வீட்டில் சனி ராகு இணைவதால் அரச தண்டனை , அரசு வழக்குகள், அரசாங்கம் ரீதியான கெடுபலனை ராகு தருவார்.
அதற்கு அடுத்ததாக சாரம் கொடுத்த நட்சத்திர அதிபதி எங்கே உள்ளார்..? எப்படி..? உள்ளார் என்பதை பொறுத்து மேற்கொண்டு கூடுதலாக கணிக்கலாம்.
இங்கே லக்னாதிபதியான சூரியன் உச்சமாகவே இருந்தாலும் லக்னத்தில் உள்ள பாவத்துவ ராகு தசா அல்லது சனி தசா ஜாதகரை பாதிக்கவே செய்யும். அதை ஜாதகர் சமாளித்து வருவார். பாதிப்பே வராது என்று சொல்லிவிட முடியாது.
லக்னாதிபதியான சூரிய 6 8 மறைவது அல்லது சனி பார்வை பெற்று இருப்பது , நீசமாகி போவது போன்றவை கெடுபலனால் ஜாதகர் அவதிபடுவதை அதிகபடுத்தும்.
எட்டாம் அதிபதியான குரு , சூரியனின் பலம் நன்றாக அமைந்து விட்டால் நன்று மாறாக அவர்களும் கெட்டு,
ராகு லக்ன ஏழுக்குடைய பொது மாரகாதிபதியான சனி இணைவை பெறுவதும், லக்னத்திலேயே ராகு மாரக தொடர்பை பெறுவதும் மரணத்தை தரும் கிரக அமைப்பாக போய்விடும் .
ராகு ஏழில் நிற்கும் கேது சாரம் அல்லது மூன்றுக்குடைய சுக்ரன் சாரம் பெறுவது போன்றவை மாரகத்திற்கான வாய்ப்பை அதிகபடுத்தும்.
தன் வீட்டிற்கு 6 8 12 மறைந்த கிரகம் ராகுவோடு இணைந்தாலும் ராகு அந்த கிரகத்தின் ஆதிபத்திய பலனை ராகு தன் தசாவில் தரவே செய்வார்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🤩 #padmahazan 🤩
No comments:
Post a Comment