Wednesday, January 11, 2023

7 பாவகம் அதிக வலுபெறலாமா..?

🍁 ஏழாம் இடம் அதிக வலுபெறலாமா..? 🍁 #hazan 

" அதிக வலுபெற கூடாது " 

ஏழாம் இடத்தில் சுக்ரன் புதன் குரு போன்ற உச்ச கிரகமோ , ( இது 7ல் சனி செவ்வாய் உச்சமாக பொருந்தாது)

ஏழாம் அதிபதி வேறு பாவகத்தில் உச்சமாகி இருப்பது, ( இது அனைத்து கிரகத்திற்கு பொருந்தும்).

அதிகபடியாக சுப கிரகமும் ஏழில் இணைவு பெறுவதும் சிறப்பு அல்ல. 

ஏழில் ஏழாம் அதிபதி ஆட்சி ஆகவே அமைவது போன்றவை கூடாது.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

இவை பெரும்பாலான நிலையில் 

அதிகபடியாக அந்தஸ்து கொண்ட வாழ்க்கை துணை ,

ஜாதகரை அடக்கி ஆளும் ஆளுமைமிக்க துணையை தரும் , 

மணவாழ்வில் துணையின் ஆதிக்கத்தை அதிகபடுத்தும்.

லக்னாதிபதி கெட்டால் துணைக்கு அடிமையாக வேண்டியது சூழல்.

ஏழாம் இடம் ஜாதகரை அடிமைபடுத்தும். 

அஷ்டமும் கெட்டால் மாரகம் என்னும் மரணத்தை எளிதாக தந்துவிடும். 

6 8 இடங்களாவது சிங்கமுத்து டயலாக் போல , " இவன் சொன்னா கேட்க மாட்டான், இவன புடுச்சி நாலு ஊமை குத்தா குத்தி விடுங்க " மாதிரிதான் பலனை தரும். பிரச்சனை தந்தாலும் உயிர் இருக்கும்.

ஆனால் இந்த வலுத்த ஏழாம் அதிபதியோ, 

" வெட்ட வேண்டியது விரல்களை அல்ல , தலையை என்று " பாகுபலியை போல ஜாதகரை முடித்து தள்ளவே பார்க்கும். உயிருக்கு திடீர் முடிவை தந்துவிடும். 

கடந்த மாதத்தில் ஒரு ஜாதகம் பார்க்க முடிந்தது. அப்போது எதேர்ச்சையாக ஒரு ஜாதகம் கிடைத்தது. 

மீன லக்னம் ஏழில் பாதக மாரக புதன் உச்சம். 

லக்னமும் அஷ்டமும் கெட்ட ஜாதகம். 

20 வயதிற்குள் மாரகத்தை கொடுத்தது ஏழில் உச்சமான புதன். 

ஏழு உச்சமானால் கண்டிப்பாக லக்னமும் அஷ்டமமும் வலுவாக வேண்டும்....

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

🤩 #padmahazan 🤩

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...