ராகு கேதுக்களை ஜோதிடத்தில் சாய கிரகங்களாக , நிழல் கிரகங்களாக குறிப்பிடுகின்றனர்.
சூரியன் சந்திர செவ்வாய் குரு புதன் சுக்ரன் சனி கிரகங்களுக்கு சொந்தமாக ராசிகள் ஆட்சி வீடுகள் இருப்பதை போல , ராகு கேதுவிற்கு சொந்தமாக ராசிகள் ஆட்சி வீடுகள் கிடையாது.
ஆட்சி வீடுகள் இல்லாத ராகுவும் கேதுவும் தான் இருக்கும் ராசியை தன் வீடாக நினைத்து பலனை தருவார்கள்.
அத்தகைய ராகுவும் கேதுவும் வர்கோத்தமம் பெற்றால் எத்தகைய பலனை தருவார்கள் என்று பார்ப்போம்.
முதலில் வர்கோத்தமம் அப்படினா என்னனு சொல்லுங்க பத்மஹாசன் என்று கேட்பவர்களுக்கு
வர்கோத்தமம் என்றால் என்ன..?
ராசிகட்டத்தில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் , நவாம்சத்தில் அதே நவாம்ச வீட்டிலும் அந்த கிரகம் இருக்கும்.
உதாரணமாக...
ராசி கட்டத்தில் மேஷத்தில் இருக்கும் சூரியன் , நவாம்சத்திலும் மேஷ நவாம்ச வீட்டில் இருப்பதே வர்கோத்தமம்.
ராசி நவாம்சம் ஆகிய இரண்டு கட்டத்திலும் ஒரே இடத்தில் ஒர் கிரகம் இருப்பதே வர்கோத்தமம்.
இத்தகைய வர்கோத்தமம் பெற்ற கிரகங்கள் தன் வலுவை கூடுதலாக பெறுவார்கள்.
அதாவது மேஷத்தில் குரு நட்பு வலுவோடு இருப்பார். அதே குரு மேஷத்தில் வர்கோத்தமம் பெறுவது என்பது நட்பு வலுவை விட கூடுதலான நல்ல வலுவில் உள்ளதாக எடுத்து கொள்ள வேண்டும். #padmahazan
ஒரு கட்டிடத்திற்கு strong foundation போடுவதை போல வர்கோத்தமம் வலிமையான பலத்தை கிரகங்களுக்கு கொடுக்கும்.
அத்தகைய வலுபெற வைக்கும் வர்கோத்தம நிலையை ராகு கேது பெற்றால் ராகு கேதுவும் தன் இயல்பில் கூடுதலாக வலுவோடு அமைந்து விடுவார்கள்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
வர்கோத்தம ராகு கேது தான் தர வேண்டிய யோக பலனையோ அல்லது கெடு பலனையோ கூடுதலாக தர இருப்பார்கள்.
வர்கோத்தமம் என்பது வலுவான அமைப்புதானே தவிர நன்மை தீமை என்பது ராகு கேதுவை தொடர்பு கொள்ளும் கிரகம் , ராகு கேது இருக்கும் வீடு ஏற்ப யோகமும் தோசமும் உண்டாகும்.
வர்கோத்தம ராகு கேது விற்கு குரு பார்வை இணைவு இருப்பது மிக அவசியம். அதே போல அந்த குரு லக்னத்திற்கு 6 அதிபதி ஆக வர கூடாது. குரு லக்னத்திற்கு 1 5 9 அதிபதி ஆக வருவது சிறப்பு. சீரான பணபுழக்கம் , சுப நிகழ்வுகள், பொருளாதார முன்னேற்றம் , ஆன்மீக கடவுள் வழிபாடு, திடீர் அதிர்ஷ்டம் தரும். #padmahazan
வர்கோத்தம ராகு கேதுவிற்கு லக்னத்திற்கு ஆகாத 6 8 அதிபதியான செவ்வாய் அல்லது சனி பார்வை இணைவை பெறவே கூடாது. இந்த நிலையில் இயல்பை விட கூடுதலாக ராகு கேது விபத்து , நோய் , நில பிரச்சனை , தொழில் நஷ்டம் , பொருளாதார பண பிரச்சனை தந்துவிடும்.
வர்கோத்தம ராகு கேதுவிற்கு லக்ன 1 5 9 அதிபதி ஆன புதன் சுக்ரன் இணைவு பார்வை பெற்றுவிடுவது யோக பலனை வர்கோத்தம ராகு கேது கூடுதலாக ஆராய்ச்சி எண்ணம் , உயர் படிப்பு யோகம் , வீடு வாகன யோகம் தரும்.
வர்கோத்தம ராகு கேது சூரியனோடு இணைவது சிறப்பு கிடையாது.
யோகமான அமைப்பில் உள்ள ராகு கேது வர்கோத்தமம் பெறுவது சிறப்பு. ராகு கேது தசா காலத்தில் மேன்மையான வாழ்வை ஏற்படுத்தி தருவார்கள்.
தோசமுள்ள அவயோக அமைப்பில் உள்ள ராகு கேது வர்கோத்தமம் பெறுவது சிறப்பு கிடையாது. மாறாக ராகு கேது தசா காலத்தில் நஷ்டங்களை இழப்புகளை கொடுத்து வாழ்வை பாதிக்கும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment