Wednesday, January 11, 2023

சனி பகவான் இல்லை என்றால் என்ன நடக்கும்..?

🍁 சனி பகவான் இல்லை என்றால் என்ன நடக்கும்..? சனி மகிமை 🍁 #hazan 

சனி பகவானை அழுக்கு, மந்தன், வேகம் இல்லாதவன், முடவன், மூடன், நோயாளி, திருடன், பொறாமை குணம் கொண்டவன், பொய் பேசுபவன், விதவை, இப்படி பல விதங்களில் மட்டம் தட்டி பேசினாலும், சனி பகவான் என்ற ஒருவர் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று பார்ப்போம். 

ஆயுள் காரகன் இல்லை என்றால் யாருக்கும் ஆயுள் இருக்காது, வாழ முடியாது, பிறப்பே கிடையாது, பிறந்தால் தானே சேர்த்த பாவங்களை அனுபவித்து மோட்சத்தை அடைய முடியும். மோட்சத்தை தருவது கேது. கேது தரும் வரை உயிரோடு இருக்க வைப்பது கஷ்டங்களை அனுபவித்து சேர்த்த பாவ கர்மத்தை குறைக்க வழி செய்வது சனி.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

வாழ்ந்து அதன் மூலம் துன்பத்தை அனுபவித்தே மோட்சத்தை பெற முடியும். வாழவே ஆயுள் தர சனி பகவான் இல்லாவிட்டால் பிறப்பு ஏது பின் மோட்சம் வர வாழ்வு ஏது..? சேர்த்து வைத்த கர்மாவை உடல் இல்லாத ஆத்மாவாகவே சுமக்க வேண்டியது தான். கர்மா சேர்க்கும் ஆன்மா மோட்சம் என்ற நிலையை அடையாது. 

ஆயுள் மட்டும் அல்ல ஆயில் ம்( oil ) இருக்காது. வண்டி வாகனம் ஓடும் பெட்ரோல் டீசல் எண்ணெய், இயந்திரம் எதுமே இருக்காது. இதெல்லாம் இல்லாமல் வாழ்க்கை ஏது..? நாம் உயிர் வாழ ஆக்ஸிஜன் தரும் மரமும் காடு அது சார்ந்த சூழல் அனைத்துமே சனி. #padmahazan 

உழைப்பாளிகளை குறிப்பது சனி, உழைக்காமல் விவசாயி கிடையாது. உழைப்பாளி இல்லாமல் முதலாளி ஏது..? சாப்பாடு ஏது..? போக்குவரத்து ஆடம்பர பொருட்களை உற்பத்தி செய்வது யாரு..? நின்று வேலை பார்ப்பது யாரு..? எதுமே இருக்காது. 

பணத்தை குரு கொடுத்தாலும், வண்டி வாகன ஆடம்பர வீட்டை சுக்ரன் கொடுத்தாலும், அவற்றிற்கான பொருட்களை உற்பத்தி செய்ய வேலை பார்க்க சனி வேண்டும், automobile அனைத்தும் அடிப்படையும் சனி. 
 
நல்ல உணவை சமைத்து சந்திரன் கொடுத்தாலும், பயிரிட விவசாயி சனி வேண்டும்.

நல்ல அரசாட்சியை சூரியன் கொடுத்தாலும், வாக்களிக்க நாட்டு குடிமக்களாக சனி வேண்டும். மக்கள் கூட்டத்தை குறிப்பது சனி #padmahazan 

நல்ல பாதுகாப்பை செவ்வாய் கொடுத்தாலும், பாதுகாப்பு இருப்பு சாதனங்களுக்கு பொருட்களுக்கு சனி வேண்டும்.

 படித்து அறிவை வளர்த்து புதுமையை கண்டுபிடிக்கும் யுக்தியை புதன் கொடுத்தாலும், அதை அன்றாடம் உற்பத்தி செய்ய சனி என்னும் உழைப்பாளி வேண்டும். 

சனி இல்லாமல் இங்கே யாரும் இல்லை... 

சனி பலரை கஷ்டங்களாலும், கெடுதல்களாலும் வாட்டினாலும், கர்மாவின் சேர்த்து வைத்த பாவ புண்ணிய பலத்தின் அடிப்படையிலேயே சனி ஒவ்வொரு வருக்கும் தனது கெடு பலனை தருவார். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🤩 #padmahazan 🤩

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...