Wednesday, January 11, 2023

ரிஷப லக்ன சுக்ர பலன்

🍁 ரிஷப லக்னத்திற்கு லக்னாதிபதி சுக்ரன் இருக்கும் பாவக பலன்கள் 🍁 

ரிஷப லக்ன சுக்ரன் ரிஷபத்தில் ஆட்சி பெற ஜாதகர் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து நல்ல அந்தஸ்து கொண்ட நிலையில் இருப்பாங்க.

2ல் மிதுனத்தில் இருப்பது குடும்பம் தனம் சம்மந்தப்பட்டவை நன்றாக இருக்கும். இவற்றின் மேல் ஜாதகர் பிரியம் அதிகம். அதிகப்படியான பேச்சு தொலைதொடர்பு சம்மந்தப்பட்ட ஆர்வம் இருக்கும்

3ல் கடகத்தில் சுக்ரன் இருப்பது தாய் மீதான பாசம் இருக்கும் தாராள எண்ணம் கொண்டவர். உதவி செய்வது புகழ் பெயர் எடுக்க வேண்டி செயல்படுபவர். 3ல் மறைவது சரியாகாது.

4ல் சிம்மத்தில் தாய் வீடு வண்டி வாகனம் மனைவி இவற்றில் நன்றாக இருப்பார். திக் பல வலுவோடு நன்மைகளை வாரி வழங்குவார். #padmahazan 

5ல் கன்னியில் இருப்பது நல்லதல்ல. நீசபங்கம் பெற்று இருப்பது மிக அவசியம். பூர்வ சொத்து புண்ணிய குறைபாடு பெண் குழந்தை வாழ்க்கை ஆதரவு குறைவு நீசமாகிட இருக்கும். 

6ல் துலாத்தில் இருப்பது நோய் எதிரி கடன் பிரச்சனைகளே தேடிகொள்வார் கஷ்டபடும் நிலை. உத்தியோகம் உண்டு. வாழ்க்கை துணை அன்னோன்யம் நன்றாக இருக்கும்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

7ல் விருச்சிகத்தில் மனைவி வாடிக்கையாளர் நண்பர்கள் வழி ஆதரவு நன்றாக இருக்கும். பாவர் பார்வை சேர்க்கை இல்லாமல் இருந்தால் காரகோ பாவ நாஸ்தி அமைப்பு செயல்படாது. #padmahazan 

8ல் தனுசில் இருப்பது மறைவான வாழ்க்கை தாமத திருமணம் தூர இடங்களில் வசிப்பது பெண்கள் மனைவி வழி திடீர் பணம் வரவு நஷ்டம் உயில் போன்றவை கிடைக்கும் ஆயுள் நன்று. பாவ தொடர்பில் இருக்க மறைவு ஸ்தான நோய் தாக்கம் வர வாய்ப்பு. 

9ல் மகர சுக்ரன் யோகமான அமைப்பு.நல்ல தந்தை ஆதரவு குலதெய்வ கடவுள் வழிபாடு உயர்கல்வி சகல சௌபாக்கியமும் கிடைக்கும் யோக அமைப்பு.

10ல் கும்ப சுக்ரன் தொழில் செய்யும் எண்ணம் உண்டு மாமியார் அத்தை வழி ஆதரவு உண்டு. 

11ல் மீனத்தில் இருப்பது யோகமான அமைப்பு. எதிலும் வெற்றி லாபம் முன்னேற்றம் எண்ணம் கொண்டவர். ஏழாமிடம் கெட்டால் துணை இரண்டு. #padmahazan 

12ல் மேஷத்தில் நில சேர்க்கை தரும். நல்ல உறக்கம் செலவு இருக்கும். போக எண்ணம் அதிகம். பெண்கள் மனைவி வழியில் செலவு வரும்.

3ல் பகை பெற்று மறைவது, 5ல் நீசபங்கம் இன்றி இருப்பது,7 8ல் பாவ தொடர்பில் இருப்பது போன்றவை தாமத திருமணம் பாவகம் சார்ந்த பிரச்சனை தரும் நிலை.

மேலே சொன்ன பலன்கள் அவரவர்கள் ஜாதகத்தில் சுக்ரனோடு இணைந்த பார்க்க மற்ற கிரகம் பொருத்து பலனில் சிறு மாற்றத்தை தரும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🤩 #padmahazan 🤩

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...