Wednesday, January 11, 2023

சுய சார கிரக சிறப்பு

🍁 சுய சார கிரகத்தின் சிறப்பு 🍁 #hazan 

 ஒரு கிரகம் அதோட சாரத்திலேயே அந்த கிரகம் நின்றால் அந்த கிரகத்தின் பகை வீடாகவோ அல்லது நீச வீடாகவோ அந்த ராசி இருந்தாலும் அந்த கிரகம் தனது பகை அல்லது நீச வீட்டில் வலுவானதாகவே செயல்படும். உதாரணமாக உங்களது பகைவரது வீட்டில் உங்களுக்கு என்று தனியாக ஒரு ரூம் கொடுத்து அங்கே நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு இருக்க சொல்வது போல...

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

அதாவது இங்கு சுய சார வலு என்பது ஆட்சி உச்சத்திற்கு இணையாக பெரிய அளவில் இருக்காது. அதே சமயம் பகை நீச அளவை விட அதிகமாகவே வலுவாக இருக்கும். 

சுய சாரத்தில் நின்ற கிரகம் மற்றொரு சிறப்பையும் பெறும் சுய சாரத்தில் மற்றொரு சார கிரகத்தினை சார்ந்து அதோடு ஆதிபத்திய பலனோடு தன் பலனை தராமல் தானே சார நாதனும் தசா புத்தி நாதனும் வந்து தன்னிச்சையாக தன் பலனை தரும்.

உதாரணமாக. மிதுன லக்னத்திற்கு புதன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருந்தால் சார நாதனின் அஷ்டம பாக்கியா ஆதிபத்தியங்கள் புதன் சம்மந்தப்பட்ட தசா புத்தி காலங்களில் நடக்கும். #padmahazan  

அதே மிதுன லக்னம் லக்னாதிபதி புதன் ரேவதி நட்சத்திரத்தில் உள்ளார். சாரநாதனும் அவரே தசா நாதனும் அவரே என்ற இருவிதமான நிலையில் புதனே வருவதால் தனது லக்ன மற்றும் வீடு வண்டி சுகாதிபத்தியத்தை மட்டுமே கொடுப்பார். கடகத்தில் ஆயில்யம் விருச்சிகத்தில் கேட்டை அதே போலவே.

சுய சாரம் என்பது ஒரு வலுவான நிலை ஆனால் அது நன்மை அல்லது தீமை தருமா என்பது அந்த கிரகம் பெறும் ஆதிபத்தியம் பொறுத்தே அமையும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🤩 #padmahazan 🤩

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...