ஜோதிடத்தின் இரண்டு கிரகங்களான செவ்வாயும் புதனும் எதிரெதிர் குணங்களை கொண்ட கிரகங்கள்.
வேகம், அவசரதனம் , துடிதுடிப்பு , தைரியம் , முரட்டு தனம், அடித்து வெற்றி கொள்வது ஆகியற்றை கொண்டது செவ்வாய்.
நிதானம் , தீர்க்க யோசிப்பது , விவேகம் , சாதுர்யமாக சூட்சமமாக வெற்றி கொள்வது ஆகியவற்றை கொண்டது புதன். #padmahazan
ராசி மண்டலத்தில் கூட இருவரது வீடுகளும் 6 க்கு 8 ஆக அமைந்துவிடும்.
செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற ஒருவரை புதன் ஆதிக்கம் பெற்ற ஒருவர் எளிதாக வீழ்த்த முடியும்.
செஸ் விளையாடும் போட்டியாளரிடம் ஒரு கபடி போட்டியாளரை செஸ் ஆட வைத்தால் , செஸ் ஆடும் போட்டியாளரே எளிதாக வெல்வார்.
கபடி விளையாடும் போட்டியாளரோடு , ஒரு செஸ் போட்டியாளரை ஆட வைத்தால் அதோ கதிதான்.
நீங்கள் எதில் திறமை வாய்ந்தவர்..? உங்கள் களம் எது..?
களத்தில் யாரை எதிர் கொள்ள போறீங்க..?
என்ற மூன்று விஷயமும் அறிந்து செயல்படுவது அவசியம்.புதனிற்கு இது நன்றாக தெரியும். ஆனால் செவ்வாய்க்கு அந்த சூட்சமம் தெரியாது.
செவ்வாய்க்கு உரிய கபடியை நாம் விளையாடினால் நமக்கு கை கால் உடைந்து விடும் என்பதை புதன் நன்றாக அறிவார். அதற்கு போக மாட்டார். #padmahazan
ஆனால் செஸ் விளையாடினால் நாம் தோற்போம் என்கிற சமயோஜித புத்தி செவ்வாய்க்கு இருக்காது, யோசிக்காது. முரட்டு செவ்வாய்க்கு புத்திசாலி தனம் வெளிபடாது. தோற்கும்.
" நீ வாடா வாடா என் ஏரியாவுக்கு வாடா..." என்று யார் சொன்னாலும் உடனே " எந்த ஏரியா என்று " கிளம்பிவிடும் யோசிக்காத செவ்வாய்.
செவ்வாய்க்கு தோல்வியை விட அதனால் உண்டாகும் அவமானம் பெரிதாக பாதிக்கும்.
நேற்று ஒரு நேர்காணல் trending ல் போனது அதை பார்த்த போது இது தெள்ள தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.
நீங்கள் புதன் ஆதிக்கம் பெற்றால் செஸ் மட்டும் விளையாடனும் , நீங்கள் செவ்வாய் ஆதிக்கம் பெற்றால் கபடி மட்டும் விளையாடனும். மாறி ஆடினால் எதிர் தன்மை பெற்ற கிரகம் உங்களை பந்தாடிடும். #padmahazan
அதே போல இதை விளையாட்டாக மட்டுமே பார்க்காமல் தொழிலாகவும் பார்க்கலாம்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
மேஷம் விருச்சிக லக்ன ராசியில் பிறந்து account , audit, software , technology, media , paperwork, astrology தொழிலாக கொண்டவர்களுக்கு இவற்றை தரும் புதனால் சில நேரங்களில் முன்னேற்றம் தடைபடும். காரணம் தொழிலை தரும் புதன் இந்த லக்னத்திற்கு 6 8 நிலையை பெறுவார்.
மிதுன கன்னி லக்ன ராசியில் பிறந்து construction, medical, pharmacy, sports, police சார்ந்த துறையில் இருப்பவர்கள் செவ்வாயின் தொழிலை செய்யும் போது முன்னேற்ற தடை , ஆர்வம் இல்லாதபடி நிகழும்.
உங்களது 5 மற்றும் 9 குடையவனது தொழிலை செய்தால் மேன்மை ஆக நினைத்ததை விட மேலான லாபத்தை அடைவீர்கள். #padmahazan
" தலைகீழாகத்தான் குதிப்பேன் " , என்று 6 8 அதிபதி தொழிலை செய்தால் அது ஜாதகரது விதி என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும்.
Computer editing & develope செய்யும் நபருக்கு
ரிஷப லக்னம் லக்ன சனி லக்னாதிபதி மிதுனத்தில் புதன் வீட்டில்
லக்னத்தோடு புதனோ சனியோ அதிபதி ஆவது அல்லது இருப்பது கொண்டால் நிதானமான பொறுமையாக திறம்பட வேலையை முடிப்பார். முன்னேற்றம் இருக்கும்.
இதே நிலையில்
விருச்சிக லக்னம் பத்தில் செவ்வாய் லக்னத்தை பார்த்தால் நிதானமான பொறுமையான வேலையை முடிக்காமல் , பட்டு பட்டு னு தட்டி 6 மாதத்தில் இன்னொரு keyboard தான் வாங்க வேண்டி இருக்கும். வேலையில் திறமை வெளிபடாது.
பத்தில் செவ்வாய் திக் பலத்தோடு computer field ல் ஒருவரா..? எப்படி சாத்தியம் என்றால்.
விருச்சிக லக்னத்திற்கு வர கூடாத அவயோக சனி தசா வந்து, புதனும் சந்திரனும் 8 9 பரிவர்த்தனை புதன் மறைமுகமாக மிதுனத்தில் ஆட்சி பெற்றால் இது போன்ற சம்மந்தமே இல்லாத இடத்தில் வேலையை வாங்கி தரும்.
" குழாய் அடியில புரண்டு என்ன பண்றது..? கோவில் அடியில இல்ல புரலனும்..." அப்படிங்கிறது அவயோக தசாவுக்கு தெரியாது.
அதே போல யோக தசா வில் ஒரு நல்ல தொழிலை செய்து வந்தவர் , திடீரென அவயோக தசாவில் முற்றிலும் ஒத்து வராத தொழிலை மாற்றும் எண்ணத்தை அவயோக தசா தரும். அப்படி தந்தால்தான் அது அவயோக தசா.
அவயோக தசா வரும் நிலையில் அதுவரை இருந்த துறையில் இருப்பதே மேன்மை. அவயோக கிரக காரக தொழிலிற்கு மாற, இன்னும் நான்கு அடி சேர்த்து போடவே அந்த கிரகம் பார்க்கும். கவனமாக செயல்படுவது நல்லது.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
#padmahazan🍁 அவயோக தசா தொழில் உதாரண அமைப்பு 🍁 #hazan
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அவயோக தசா ஒருவருக்கு தொழில் சார்ந்த பாதிப்பை எப்படி தருகிறது என்று விவரித்து எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதை படித்தால் உங்களுக்கு இந்த பதிவு எளிதாக புரியும். அதன் லிங்க் comment ல் உள்ளது.
லக்னத்திற்கு ஆகாத ஆதிபத்தியம் பெற்ற லக்னாதிபதிக்கு பகையான கிரக தசாக்களை அவயோக தசா என்போம்.
அவயோக தசாக்கள் ஒருவருக்கு ஏற்ற பொருத்தமான தொழிலோ வாழ்வையோ தருவதில்லை. பெரும்பாலான நிலையில் அந்த அவயோக தசா ஜாதகருக்கு முன்னேற்ற தடையை கொடுக்கவே செய்கிறது.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
ஓரிரு நாட்களுக்கு முன்பு பலன் சொன்ன ஜாதகம்...
Bill section ல் பணியாற்றும் ஜாதகம் வந்தது , தொழில் தொடங்கலாமா..? என்று.
தனுசு லக்னம்.
2ல் சனி ஆட்சி
4ல் புதன் நீசபங்கம்.
8ல் குரு உச்சம்
5ல் சூரியன் உச்சம்.
#padmahazan
நடப்பதோ புதன் தசா....
நான் கேட்டது , " engineering படித்தாரா..? " என்றேன்.
" ஆமாங்க , எலெக்ட்ரிக்கல் diploma படித்துள்ளார் " என்றாங்க.
பொறியியல் காரக கிரகமான சனி , சூரியனும் ஆட்சி உச்சமாக இருப்பதால் பொறியியல் துறை படிப்பு.
ஆனால் நடப்பதோ ஆகாத நீசபங்கம் பெற்ற பாதகாதிபதியான புதன் தசா பத்தாம் வீட்டை பார்வை செய்து உள்ளார். அதனால் கணக்குகளை கையாளும் bill போடும் பணியில் வைத்து விட்டது.
சூரியனின் காரகமான electrical தொழிலில் படிப்பு இருந்தாலும் நடக்கும் தசாவே ஒருவரது தொழிலை நிர்ணயிக்கிறது.
படித்தது ஒன்று பார்ப்பது ஒன்றாக அமைய அவயோக தசா இளம் வயதில் நடைமுறையில் வருவதே காரணமாக உள்ளது.
அவயோக தசாக்கள் கொடுக்க வேண்டியதை கொடுக்க மாட்டார் என்பதற்கு இந்த ஜாதகம் ஒரு உதாரணம்...
பத்தாம் அதிபதி பலவீனமாகும் போது தசாக்கு ஒரு தொழிலோ வேலையோ அந்த தசா அமைந்து கொடுத்து விடும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🤩 #padmahazan 🤩
No comments:
Post a Comment