இருக்குற தசாவிலேயே சந்திர தசாதான் சிறப்பான தசா. என்ன பொசுக்குனு இப்படி சொல்றீங்கனு பாக்காதீங்க... உண்மையாதாங்க சொல்றேன்.
பதிவை இறுதிவரை படியுங்கள்.
சந்திரன் வளர்பிறை அமைப்பில் இருந்து சனி ராகு பாவர் இணைவு பார்வை தொடர்பு இல்லாமல் இருந்தாலே போதும்.
சந்திரன் தேய்பிறை அமைப்பில் இருக்க அவரை குரு பார்க்க தேய்பிறை கெடுபலனை குறைத்து கொள்வார்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS NU 8300 620 851
லக்னத்திற்கு சுப ஆதிபத்தியம் பெற்று வந்தால் இன்னும் சிறப்பு. குறிப்பாக மேஷம், கடகம் , மீனம் லக்னங்களுக்கு சந்திர தசா யோக பலனை வளர்பிறை பௌர்ணமி நிலையில் இருக்கும் போது சுப பலனை அளவுக்கு அதிகமாக தரும்.
அதனை அடுத்ததாக விருச்சிகம், கன்னி லக்னத்திற்கு சுப பலனை தருவார். #padmahazan
முதல் விஷயம் தாயார் மீதான பாசம் அதிகமாக இருக்கும். தாயார் வழி ஆதரவு பாசம் நன்றாக கிடைக்கும். அம்மா அப்படினா யாருக்குதான் பிடிக்காதுனு அளவுக்கு feel பண்ண வைக்கும்.
தாயார் வழியாக சொத்து சேர்க்கை , தாயார் வழி சொந்தங்களால் ஆதரவு , குறிப்பாக சித்தி (ஆறாம் பாவகம்) மற்றும் பெரியம்மா (இரண்டாம் பாவகம் ) இவர்களால் ஜாதகருக்கு ஆதரவு கிடைக்கும்.
சந்திரன் வலு பெற்றவர்கள் மனசு எப்போதும் நிம்மதியா இருக்கும். என்ன நடந்தாலும் அந்த நிமிடம் மட்டுமே கவலை இருக்கும். அடுத்த நிமிடம் என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் அப்படி அளவுக்கு தெளிவாக ஒரு விஷயம் முடிவு எடுப்பாங்க எது சரி தவறுனு பிரித்து பார்க்கும் நிலையை எளிதில் தருபவர் சந்திரன்.
தீர்க்கமான முடிவு , மனிதாபிமானம் கொண்ட நெஞ்சம் ஆகியவற்றை சனி பார்வை இணைவு ராகு இணைவு இல்லாத சந்திரன் ஒருவருக்கு தருவார்.
குரு பார்க்க சந்திரன் குரு சந்திர யோகத்தை பெற்று அந்தஸ்து கௌரவம் போன்ற திடமான செயல்களால் முடிவுகளால் மேன்மையை தருவார். அதாவது ராசியை குரு பார்ப்பதால் உண்டாகும் யோகம்.
அடுத்த விஷயம் சாப்பாடு. நல்ல சாப்பாடு கிடைக்கும் சூழலை தந்து விடுவார். " கல்யாண சமையல் சாதம் காய்கறிகளோ பிரமாதம் " மாதிரி வகை வகையான அறுசுவை உணவை சாப்பிட வைத்து வயிற்றை நிறைய வைப்பார்.
#padmahazan
இப்படி நிறைவான சாப்பாடு, தெளிவான மனம், தாயார் பாசம் பிறருக்கான பரிவான சேவை எண்ணம் தருபவர் சந்திரன் மட்டுமே.
சுயநலமற்ற கருணை மற்றும் சேவையை தருவது சந்திரன் சுப வலுவோடு லக்ன ராசி தொடர்பில் கொண்டவர்களே.
நல்ல மனசு சிந்தனை சாப்பாடு மட்டுமே ஒருவருக்கு போதுமா அப்டினு கேட்டால் நிச்சயமாக போதும்.... பிற கிரகங்கள் தரும் தனம், பொண், பெண், மரியாதை, அந்தஸ்து, நிலம் எவ்வளவு இருந்தாலும் சந்திரன் தரும் பாசம் மனநிலை சாப்பாடு குறை பட்டால் வாழ்க்கை நிறைவாகுமா? நிச்சயமாக ஆகாது. ஒரு பெரிய மாளிகையில் மனைவி குழந்தைகளோடு பெரும் பணக்காரராக இருந்தாலும் சந்திரன் கெட்டால் சாப்பாடு உணவு விஷயத்தில் திருப்தி இருக்காது. மனநிம்மதி இருக்காது... அந்த விதத்தில் சந்திரன் நிகர் சந்திரனே.
பாவர் தொடர்பு இல்லாத வளர்பிறை பௌர்ணமி சந்திரன் தசாவை கடந்து வந்தவர்களுக்கு இந்த பதிவு நன்றாக புரியும்.
சந்திரன் தேய்பிறை பாவி ஆகவோ , அமாவசை நிலையை பெறும் போதோ, சனி பார்வை இணைவோ பெற , தாயார் மீதான வெறுப்பு , பிரச்சனை , பெற்ற தாயாலே பிள்ளைக்கு ஏற்ற நன்மை செய்யாது இருத்தல் , தாயே உடல்வீனபடுவது ( தாயார் பாவகம்கூடுதலாக பார்க்க வேண்டும் )
ஜாதகருக்கு மன குழப்பம் , நிம்மதியில்லாத வாழ்வு , கெடுதலை எண்ணி மனம் வருந்துவது, சரியான சாப்பாடு இன்றி வருந்துவது மாதிரியான கெடுபலனை தன் தசாவில் தரும்.
செவ்வாயின் பார்வை சந்திரனை பாதிக்காது, குரு பார்த்த சுக்ரன் பார்த்த சந்திரன் என்றும் சுப பலனை மிகுதியாக தருவார்.
மகர கும்ப லக்னத்தில் பிறந்திருந்தால் கூட, லக்னத்திற்கு ஆகாத 6 7 அதிபதியாக சந்திரன் அவயோக ஆதிபத்திய கிரகம் ஆனாலும் அவர் கெட கூடாது. தாயாருக்கு காரகன் சந்திரன் கெட்டால் அந்த ஜாதகரது இளம் வயதில் தாயார் வழி சுப பலனை அனுபவிப்பதில் தடை செய்யும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🤩 #padmahazan 🤩
No comments:
Post a Comment