Saturday, August 24, 2024

புதன் தரும் வாழ்க்கை துணை எப்படி அமையும்..?

🍁 புதன் தரும் வாழ்க்கை துணை எப்படி அமையும்..? 🍁 #hazan 

⚡️புதன் புத்திசாலிதனமான கிரகம் , பேசி பேசியே காரியம் சாதித்து கொள்ளும் கிரகம் , சாதுர்யம் சமயோஜீத புத்தி கிரகம். 

⚡️லக்ன சுபரான புதன் , 5 9 உடைய புதன் , ஏழில் நின்றாலும் , 

⚡️ஏழாம் அதிபதி உச்சம் ஆட்சி பெற்ற புதனோடு நெருங்கி இணைந்து நின்றாலும் , 

⚡️ஜாதகரின் வாழ்க்கை துணை குறும்புதனமும் சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்ளும் குணத்தை தரும். 

⚡️யார் சொல்வதையும் கேட்டு நடக்கும் குணம் ஏற்படும், இங்க அந்த யார் என்பது அவர்களுக்கு சரியான முடிவுகளை எடுக்கும் புத்திசாலி நபராக ஜாதகர் இருக்க வேண்டும். #padmahazan அதுதான் முக்கியம். 

⚡️நகைச்சுவை நக்கல் பண்றது , சிரித்து பேசி மகிழும் சுபாவம் கொண்டவராக இருப்பார். இளம் வயது கொண்ட துணை கூட தரும்

⚡️ஆண் ஜாதகர் 33 வயது என்றால் வாழ்க்கை துணை 23 என்பது மாதிரியாக நிலை , வயது குறைந்த பெண் மனைவியாக வருவது. 

⚡️ இளமை மாறாத ஆணோ பொண்ணோ கணவன் மனைவியாக வருவது 

⚡️ஒருவர் தன் வயது குறைவான அக்கா மகளை திருமணம் செய்வது , நீண்ட கால நண்பர்களாக இருந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது , #padmahazan சம வயது கொண்ட மாமன் மகனை ஓர் பெண் திருமணம் செய்து கொள்வது போன்ற பலனை புதன் தருவார்.

⚡️இதில் எங்கேயாவது ராகு கேது சனி தொடர்பு வந்தால் மாற்று மதம் இனம் மொழி காதல் கலப்பு திருமணமாக வரும். ( புதன் ராகு  , சனி புதன் ஏழில் இருப்பது )

⚡️புதன் தசா அல்லது புதனோடு இணைந்த கிரக தசா நடைமுறை அந்த ஆணிற்கோ பெண்ணிற்கோ பருவத்தில் வர வேண்டும். #padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851

Thursday, August 22, 2024

வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை தரும் சந்திரன்

🍁 வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை தரும் சந்திரன் 🍁 #hazan 

⚡️ஜாதகர் வாழ்க்கை எல்லாம் கிடைத்தும் மன நிம்மதி சந்தோஷம் மட்டும் இல்லாமல் இருக்காரா..?

⚡️வாழ்க்கையில் எதுவும் சரியாக அமையாத போதும் மன நிம்மதியோடு சந்தோசமாக நன்றாக இருக்காரா..? 

என்பதை காட்டுவது எல்லாமே அவரவர் ஜாதக சந்திர வலு குறிப்பிடும் நிலைதான்.

⚡️ சிலருக்கு ஒரே ஓர் பிரச்சனை மட்டும் இருக்கும் அதை சமாளிக்க முடியாமல் கஷ்டபடுவார்கள் , சிலருக்கு எல்லாமே பிரச்சனையாக இருக்கும் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக சரி செய்து அதே சமயம் நன்றாக சந்தோசமாக வாழ்க்கை வாழ்வார்கள். 

⚡️மனது செயல்படாமல் மனிதனால் ஓர் நொடி கூட இருக்க முடியாது. அவருக்கு மனதில் ஏதாவது ஓர் நினைப்பு எண்ணம் ஓடி கொண்டே இருக்கும். #padmahazan மனிதன் தூங்கினால் கூட கனவு அப்படிங்கிற ஒன்று வந்து தூக்கத்தில் எதையாவது படம் ஓட்டி கொண்டு இருக்கும். 

⚡️மனசு நன்றாக ஆக்கபூர்வமாக , நல்ல விதமாக யோசித்தால் உதவுவது கருணை சந்தோஷ நிகழ்வுகள் பங்குகொள்வது ,  நல்ல எண்ணத்தை கொடுத்தால் , ஜாதகர் நன்றாக வாழ்வில் பயணிப்பார். 

⚡️மாறாக மனசு பொறாமை வஞ்சக எண்ணம் ஏமாற்றுவது கஷ்டத்தை பிரச்சனை மட்டுமே கவனமாக கொள்ளும் போது அது ஜாதகரை முன்னேற விடாது. மீண்டும் சிக்கலுக்குள் கொண்டு வரும். 

⚡️ மனிதனுக்கு வரும் மன பாதிப்பினால் உடல் ஆரோக்கியம் குடும்ப வாழ்க்கை பிரச்சனை பிரிவு வேலை தொழில் பாதிப்பு மற்றும் பெரிய கடன் சிக்கும் நிகழ்வை கூட ஏற்படுத்தி விடும். 

⚡️இதெல்லாம் எதை சுற்றி நடக்கிறது..? மனசு ( சந்திரன் ) 

⚡️ லக்னாதிபதி வலுவை போலவே சந்திரனின் வலுவும் கவனிக்க வேண்டிய ஒன்று. #padmahazan 

⚡️ ஜாதகத்தில் சந்திர நின்ற பாவகமும் சந்திர தொடர்பில் உள்ள கிரகங்களும் பொறுத்து சந்திர பலன் அமையும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

Tuesday, August 20, 2024

கெடுபலனை தரும் ராகு எப்படி செயல்படுவார்..?

🍁 கடுமையான பலன் தரும் ராகு 🍁 #hazan 

ராகு பாவத்துவமாக அல்லது அவயோக துர் ஸ்தான கெடுபலன் ராகு தரும் நிலையில், 

👉ஜாதகர் போகும் வாழ்க்கை பாதை தவறானதாக இருக்கும் ,  

👉பேராசை கொடுக்கும் ஆட்களை ராகு அறிமுகம் தரும்

👉ஏமாற்றும் நபர்களை நம்பும் சூழலும் ,

👉சூதாட்டம் ஏமாற்றுதல் போலிதனம் குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்க வைக்கும் , 

👉சட்ட புறம்பான செயலை பயமின்றி செய்ய வைக்கும் #padmahazan 

👉மனசாட்சி இல்லாத வகையில் சுற்றி உள்ளவர்களை ஏமாற்ற வைக்கும்

 👉ஓர் கட்டத்தில் காலம் போக போக தவறுகள் அனைத்தும் ஜாதகரை பாதிக்க செய்யும் , 

👉படிபடியான முன்னேற்த்தை கொடுக்கும் ராகு தசாவில் புத்தி நாதனாக வரும் லக்ன பாவி புத்தியில் சரிவை ஏற்படுத்தி விடும்.

👉மிக கடுமையான ராகு சிறை தண்டனை அடிதடி விபத்து பஞ்சாயத்து சிலர் தற்*லை கூட செய்து கொள்வார்கள். 

👉விஷகடி , மருந்து இல்லாத வியாதி , அறுவை சிகிச்சை , மர்மமான இறப்பை கூட ஏற்படுத்தும். மருந்தே விஷயமாகும்.

👉 பெருமளவு பண ஆசையால் உண்டாகும் பெரிய அளவிலான கடனும் குடும்ப பொருளாதார பாதிப்பும் ராகுவால் ஏற்படும் பலன்தான். 

👉ராகு தொடர்பு கொண்ட கிரகத்தை பொறுத்து தசாவில் பண பொருள் காமம் நில ஆசை கொடுத்து பாவத்தை சேர்க்கும். #padmahazan 

👉 லக்னாதிபதி பலம் பெற்று , மனமும் புத்தியும் வலுபெற்ற நிலையில் ராகு பாதிப்பை ஜாதகர் சமாளித்து கொள்வார். தவறான பாதைக்கு செல்ல தாங்குவார். 

👉 காளி துர்க்கை அம்மன் , வராஹி மாதிரியான தெய்வ வழிபாடு ராகு பாதிப்பை குறைக்கும்.  
#padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY 
WHATS APP 8300 620 851

கேதுவின் இயல்புகள் & பலன்கள்

🍁 கேதுவின் இயல்பு & பலன்கள் 🍁 #hazan  

👉கேது நின்ற பாவகம் சார்ந்தவை தடைபடுத்துதல் துண்டித்தல் விலகி இருத்தல் கிடைத்தும் அதில் நிம்மதி இல்லாத மாதிரியான பலனை அனுபவிக்க வைப்பவர் கேது. 

👉 விருப்பம் இல்லாமல் கடமைக்கு ஒன்றை செய்வது மாதிரியான பலனை தருபவர் கேது. #padmahazan 

👉கேது நின்ற பாவகங்களில் ஆதிபத்தியம் மற்றும் நெருங்கும் கிரகங்களின் காரகத்துவத்தை தடை தாமதம் செய்வார். இவற்றை அனுபவிப்பதில் ஓர் சந்தோசம் இல்லாத அல்லது கடமையாக நினைக்கும் சூழலை கேது தருவார். 

👉ஜாதகருக்கு பாதிப்பை தந்த கேது தன் தசா புத்தி ஏற்ப தடைபடுத்திய காரக ஆதிபத்ய விஷயங்களை பின் கேதுவே தரவும் செய்வார். இதற்கு கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகம் வலுவாக இருப்பது நல்லது. கூடுதலாக கேது மீது குரு பார்வை அல்லது குரு இணைவு ஏற்பட வேண்டும். 

👉கேது நின்ற பாவகத்தில் ஒரு விதமான ஈர்ப்பு அல்லது ஆதரவு அல்லது மன ஒற்றுமை இல்லாமல் இருக்க செய்வார். #padmahazan

👉 உதாரணமாக 9ல் கேது இருந்தால் தந்தை மீது பாசம் குறைவு அல்லது தந்தை ஜாதகர் மீது எவ்வளவு பாசமாக அன்பாக இருந்தாலும் ஜாதகருக்கு அதனை புரிந்துகொள்ள முடியாமல் இருப்பார். 

👉தந்தை மகன் உறவில் ஓர் நெருடல் அல்லது அலச்சியம் வெளிபடும். மாறாக வீடு கொடுத்த கிரகம் வலுபெற்று சூரியன் வலு பெறுவது கூட கேது தந்தை ரீதியாக நற் பலனை கேது தருவார்.

👉கேது லக்னத்திற்கு 3 6 11 12 பாவகங்களில் கும்ப விருச்சிக கன்னி இடங்களில் நன்மை தரும். #padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY 
WHATS APP 8300 620 851

உங்களுக்கு கை கொடுக்கும் உறவுகள் எவை..? பாவகங்கள் எவை..?

🍁 உங்களுக்கு கை கொடுக்கும் உறவுகள் எவை..? பாவகங்கள் எவை..? 🍁 #hazan 

👉 ஜாதகருக்கு குறைந்தது , ஓர் லக்ன கேந்திரம் , ஓர் லக்ன திரிகோணம் , ஓர் உபஜெய ஸ்தானம் குறைந்தபட்சம் நன்றாக இருக்க வேண்டும். 

👉அதாவது 4 7 10 ல் ஒர் பாவகமும் , 5 9 ல் ஒர் பாவகமும்... 3 11 ல் ஒர் பாவகமும் நன்றாக இருப்பது அவசியம். அப்போதுதான் ஜாதகரால் ஏதோ ஒன்றை சார்ந்து வாழ்க்கை நடந்த முடியும். 

👉4 பாவகம் தாயார் வீடு வாகன கல்வி உண்டாகும் சிறப்பு. #padmahazan 

👉7 பாவகம் வாழ்க்கை துணை ஆதரவு நண்பர் கூட்டாளி சிறப்பு.

👉10 பாவகம் தொழில் வருமானம் பதவி வரும் சிறப்பு 

👉5 பாவகம் குழந்தைகளால் ஏற்படும் நன்மை பூர்வ புண்ணிய அதிர்ஷ்டம் 

👉9 பாவகம் தந்தை வழியான நன்மை பாக்கியங்களை அடைதல். 

👉3 11 பாவகம் உடன் பிறப்புகள் ஆதரவு முயற்சி வெற்றியடையும். #padmahazan 

👉இதில் ஏதோ ஒர் கேந்திரம் ஓர் திரிகோணம் ஓர் உபஜெயம் சரியாக அமைந்தால் ஓரளவு வாழ்க்கை சமாளிக்க முடியும். இவற்றின் தசா நன்மை ஏற்படுத்தி தரும். 

👉 இதில் எல்லாம் நன்றாக அமைந்தால் கொடுத்து வைத்த பிறவி. யோக வாழ்க்கை போராட்டம் இல்லாத சூழல்.

👉 இந்த கேந்திர கோணத்தில் நின்ற கிரகத்தின் காரகத்துவ பலனும் கூடுதலாக நன்மை தரும். #padmahazan 

👉 தாய்க்கு சந்திரனும் , தந்தைக்கு சூரியனும் , உடன் பிறப்பு செவ்வாயும் , வாழ்க்கை துணைக்கு சுக்ரனும் , புத்திர துணைக்கு குருவும் காரகத்துவ ரீதியாக வலு பெற வேண்டும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

சிவராஜயோகம் - சூரியன் குரு

🍁 சிவராஜ யோகம் - சூரியன் குரு 🍁 #hazan 

⚡️குருவின் 5 7 9 பார்வையில் சூரியன் இருப்பது சிவராஜயோகம் சிறப்பை சூரியன் பெறுவார். 

⚡️தந்தை வழி ஆதரவு , தந்தை வழி பாட்டன் சொத்து கிடைப்பது மாதிரியான தந்தை வழி சிறப்பை கொடுக்கும். 

⚡️அரசு பணி , அரசு உயர் பதவி , அரசியல் கட்சி பதவி , அரசியல் தேர்தல் வெற்றி மாதிரியான அரசு வழி சிறப்பை தரும். 

⚡️ தனியார் துறையில் பணியாற்றும் போது உயர் பொறுப்பில் வைத்து இருக்கும். 

⚡️சொந்த தொழிலில் முதலாளியாக இருப்பது , ஊர் , சொந்த பந்தம் , மக்கள் மத்தியில் முக்கிய நபராக மற்றவர்களால் #padmahazan மதிக்ககூடிய மரியாதை அந்தஸ்தை ஜாதகர் பெறுவார். 

⚡️மதிப்பு மரியாதை கௌரவம் அந்தஸ்து அதிகாரம் ஆகிய அனைத்தும் இந்த சிவராஜயோகம் ஒருவருக்கு கொடுக்கும். 

⚡️ஜாதகர் எண்ணமும் செயல்பாடுகளும் எப்போதும் உயர்ந்த இலக்குகளை கொண்டதாக இருக்கும் , அவற்றை அடையும் குறிக்கோளை தனக்கு தானே உருவாக்கி கொள்வார்கள். 

⚡️சிவராஜயோகமும் தர்மகர்மாதிபதி யோகமும் அமைந்து லக்னாதிபதியும் பத்தாம் அதிபதி வலுவாக உள்ள ஒருவர் மேலே சொன்ன ஓர் நிலையில் இருப்பார். 

⚡️சிவராஜயோகத்தில் சூரியனோ குருவோ சனி ராகு கேது தொடர்பு இன்றி , #padmahazan சூரிய குரு பகை நீசம் ஆகாமல் நட்பு ஆட்சி உச்ச ராசிகளில் லக்ன மறைவிடத்தில் மறையாத யோகமாக அமைய வேண்டும்.

⚡️ மிக முக்கியமாக சூரியன் குரு இணைவில் உண்டாகும் சிவராஜயோகத்தில் குரு அஸ்தங்கம் பெற்றால் குரு வலு இழந்து காரகத்துவ குறைவை பாதிப்பாக தரும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

கொடூர செவ்வாய் மற்றும் மங்கள யோக செவ்வாய் தரும் பலன்கள்

🍁 கொடூர செவ்வாய் மற்றும் மங்கள யோக செவ்வாய் தரும் பலன்கள் 🍁 #hazan 

⚡️அவசரதனம் , ஆவேசம் , வேகமாக செயல்படுவது , முன் யோசனை இன்றி முடிவு எடுப்பது , முன் கோபம் , நிதானத்தை இழப்பது , சண்டை போடும் குணம் , எதிர்த்து  தைரியமாக செயல்படுவது போன்ற குணமும் செயல்பாடுகளை தருபவர் செவ்வாய். ,  லக்னத்தில் செவ்வாய் பார்வை லக்ன செவ் இருப்பது  கூடுதலாக மேஷ விருச்சிக லக்ன ராசி பிறப்பது  இந்த குணத்தை ஜாதகரிடம் வெளிபடும் . #padmahazan 

⚡️செவ்வாய் மீது சனி பார்வை அல்லது செவ் சனி இணைவு செவ்  ராகு இணைவு ஏற்படும் போது செவ்வாய் தன்  அசுப பாவ குணத்தை வெளிபடுத்துவார்  , சனி செவ்வாய் ராகு மூன்று கிரகங்களும் ஒர் பாவகத்தில் பார்வை இணைவு உண்டாகும் போது அந்த பாவகம் முழுமையாக பலவீனமாகும். இது கொடூர குணத்தை வெளிபடுத்தும் செவ்வாய். 

⚡️லக்னத்தின் 1 2 7 8 பாவகத்தில் இது போன்ற செவ்வாய் இருக்கும் போது மணவாழ்க்கை பிரச்சனை வருவதை தவிர்க்க முடியாது. தற்காலிக பிரிவு நிரந்தர பிரிவு வாழ்க்கை துணை இழப்பது மாதிரியான பாதிப்பை தரும். 

⚡️செவ்வாய் 4 7 10 கேந்திர பலத்தை பெறும் போது கூடுதலாக குரு சந்திர சுக்ர பார்வை இணைவு தொடர்பில் மங்கள யோகமாக இருக்கும் போது செவ்வாய் யோகத்தை அதிகபடியாக தருவார். #padmahazan  செவ்வாய் 1 4 7 10 ஆட்சியாகி குரு சுக்ர சந்திர தொடர்பால் ருசக யோகத்தால் வருமானத்தை தருவார்.

⚡️விளை நிலம் , ரியல் எஸ்டேட் , கட்டுமான பொருள் , வீடு கடை கட்டிடம் வழியாக வாடகை வருமானம் ,  செம்மண் , நெருப்பு , மருத்துவம் , மருந்துகடை , விளையாட்டு , காவல் துறை ராணுவம் கடற்படை மாதிரியான காரகத்துவ வழியாக தனமும் பொருளும் யோகத்தை ஏற்படுத்தி தரும்.

⚡️வாகன விபத்தால் காயம் அடைவது , வெடி நெருப்பு மாதிரியான காரணத்தால் இறப்பது , உடல் சூடு பாதிப்பால் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடு, தசை பிடிப்பு , உள் உடம்பில் தசைநார் கிழிந்து வலி ஏற்படுவது , ரத்தகட்டு  எல்லாமே செவ்வாய் தரும் பலன்கள் தான். 
#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

Thursday, August 15, 2024

தன யோக ஜாதக கிரக நிலைகள்

🍁 தன யோக ஜாதக கிரக நிலைகள் 🍁 #hazan 

👉தன காரகன் குரு மற்றும் லக்னத்திற்கு 2 5 9 10 11 அதிபதிகள் நட்பு ஆட்சி உச்சமாக ஸ்தான பலம் பெற்று குரு பகவானின் பார்வை இருக்கும் போது ஒருவருக்கு பணம் தங்கம் பொருளாதார மேன்மை தரும். 

👉4 5 & 9 அதிபதிகள் இணைவை பெற்ற 2 10 11 அதிபதிகளும் பணத்தை நீடித்த நிலையான வருமானமாக தொழில் அல்லது சொத்து கட்டிடம் நிலம் வழியாக கொடுப்பார்கள். #padmahazan 

👉 2 10 11 பாவகங்களில் சூரியன் புதன் சுக்ரன் இணைவு , குரு செவ்வாய் சந்திர இணைவு, சனி புதன் சுக்ரன் இணைவு போன்ற முக்கூட்டு கிரக இணைவுகள் சீரான பணத்தை கையில் வைத்து இருக்கும் அளவில் ஜாதகரை வைத்து இருக்கும். 

👉செவ் குரு இணைவு , சனி குரு இணைவு , குரு சந்திர இணைவு , குரு புதன் இணைவு போன்றவை ஒருவருக்கு லக்ன கேந்திர கோணத்தில் இணைந்து இவர்களில் ஒருவர் 1 5 9 அதிபதியாகவோ 2 10 அதிபதியாக வரும் போது குரு தன வருமானத்தை யோகமாக கொடுப்பார்.

👉 ஆறாம் பாவகத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட சுப கிரகங்கள் குரு சுக்ரன் வளர் சந் புதன் இவர்களுடன் இணைந்த சூரியன் போன்றவர்கள் இணையும் போது லட்சங்களில் பணம் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவன வேலை அல்லது நிலையான அரசு வேலை அமைந்து விடும். #padmahazan 

👉எந்த ஓர் கூட்டு கிரக இணைவிற்கும் வீடு கொடுத்த கிரகம் பலவீனம் ஆகாமல் இருக்கும் போது அங்கே லக்ன ஆதிபத்திய சுப பலன் பெற்ற யோக கிரகத்தின் வழியாக ஜாதகருக்கு தன யோகம் உண்டாகும். 

👉மேலே சொன்ன கிரக தசாக்கள் வரிசையாக 20 முதல் 60 வயது வரை நடக்கும் போது யோகமான வாழ்வை ஜாதகர் அனுபவிப்பார். 

👉கூடுதலாக இவற்றை அனுபவிக்க லக்னாதிபதி நன்றாக வலுவாக அமைய வேண்டும். #Padmahazan 

👉லக்னாதிபதி பலவீனம் என்றால் ஜாதகர் போதுமான ஆளுமை இல்லாமல் வாய்ப்பை தவற விடுவார் அல்லது கிடைப்பதை தக்க வைக்க முடியாதபடி யாரிடம் இழந்துவிடுவார்.

👉 இவர் சேர்த்த தனமும் பணமும் யாரோ ஒருவர் அனுபவித்து கொண்டு சுகவாசியாக இருப்பார்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

விரைய பாவகம் 12ல் நின்ற கிரக பலன்

🍁 விரைய பாவகமான 12ல் நின்ற கிரகம் தரும் பலன்கள் 🍁 #hazan 

லக்னத்திற்கு எண்ணி வர 12 இடமான கடைசி பாவகம் விரைய பாவகம். 

கடைசி, இறுதி, கைவிட்டு போதல் போன்ற நிலையை குறிப்பது இந்த பாவக பலன். 

12 பாவகமும் அதிபதியும் நீங்கள் உங்கள் வாழ்வில் இழக்க போகும், நஷ்டமடைய போகும், பிறருக்காக விட்டு கொடுக்க போகும் பொருளை பணத்தை உறவை குறிக்கும்.

பிறருக்கு பணத்தை கொடுத்து அதனால் உண்டாகும் நிம்மதி இழப்பை தருவதும் 12 பாவகம்தான்.
12 ல் மறையும் கிரகம் ஆதிபத்திய காரகத்துவ பலனில் ஜாதகர் இழப்பை தேடி கொள்வார்.padmahazan 

லக்னாதிபதி குரு சுக்ரன் புதன் வளர் சந்திரனாக 12 ல் மறையும் போது ஜாதகரே செலவுகளை அதீத கவன குறைவான சேமிப்பு எண்ணத்தில் பணத்தை பொருளை தண்ணியாக கரைத்துவிடுவார்கள். செலவு செய்வார்கள். கூடுதலாக சுக்ரன் சுப வலுபெற்றால் நிச்சயமாக ஆடம்பர விரும்பியாகி பின் அனைத்தும் இழந்து வருந்த வைப்பது 12 பாவகம். 

12ல் குரு மறைந்தால் தங்க நகை அடகில் மூழ்கும், வட்டி பணம் பெற்று கணக்கு இன்றி தண்டல் கட்டி பணம் இழப்பை தரும் , அதீத பணம் நஷ்டத்தில் போகும் , பணத்தை எடுத்து வைத்தாலும் புதிதாத ஓர் செலவு நஷ்டம் விரையம் வந்துவிடும். அல்லது உதவி என்று மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த பணம் அல்லது கடன் கொடுத்த பணத்தை பெற இயலாது. அது நஷ்ட நிலையை தரும். #padmahazan 

12 ல் சுக்ரன் , வீடு கார் பைக் போன் பர்னீச்சர் போன்ற ஆடம்பர பொருட்கள்க்கு பணத்தை விரையம் செய்து வருவார்கள். மனைவியோ கணவரோ நோய்வாய்பட்டு மருத்துவ செலவை கூட இங்கே சுக்ரனோடு இணையும் செவ்வாய் சனி அல்லது ராகு ஏற்படுத்தி விடுவார்கள்.

12ல் செவ்வாய் மறைந்தால் நிலம் விற்பது , சகோதரனிடம் இடத்தை விட்டு கொடுத்து ஜாதகர் வெளி ஊருக்கு சென்று வாழ்வது , போன்ற பலனை தரும். 

12 பாவக கெடுபலனை குறைகளை இந்த பதிவில் எழுதி உள்ளேன். அடுத்த பதிவில் இதன் நிறைகளை கூறுகிறேன். #padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY 
WHATS APP 8300 620 851

அஷ்டமாதிபதி (8) தரும் கெடுபலன்

🍁 எட்டாம் அதிபதி தரும் பலன்கள் எப்படி இருக்கும்..? 🍁 #hazan 

⚡️ லக்னத்தின் எட்டாம் அதிபதி ஜாதகருக்கு கஷ்டங்களை , போராட்டமான சூழலை , புரிந்து கொள்ள முடியாத நபர்களை உங்கள் உறவினராக தெரிந்தவராக தரும் விதமாக செயல்படும். 

⚡️ எட்டாம் அதிபதி கெடுதலை அதிகபடியாகவும் அதோடு கூடிய நற்பலனை தரும்.

⚡️ எட்டாம் அதிபதி நின்ற பாவகம் ரீதியாக ஜாதகர் சில பிரச்சனைகளை சந்திப்பார். #padmahazan ஜாதகத்தில் எட்டாம் அதிபதி சனி செவ் ராகு கேது தொடர்பில் பாதிப்பை கூடுதலாக தரும். 

⚡️ மன அழுத்தம் , மன நிம்மதி இழக்கும் நிகழ்வுகள், ஏமாற்றம் , துரோகம் அல்லது அவமானம் , திடீர் இடையூறு , திடீர் மாற்றம் மாதிரியான பலனை ஏற்படுத்தும். 

⚡️மிக கடுமையான நிலையில் எட்டாம் அதிபதி நின்ற பாவக உறவை ஜாதகர் இழக்க வேண்டி இருக்கும், அல்லது பிரிவை ஏற்படுத்தி விடும் அல்லது புரிந்து கொள்ள முடியாத மனிதராக அவர்கள் உங்களுக்கு இருப்பாங்க. 

⚡️ யோகமான அமைப்பில் நின்ற பாவக ரீதியிலான திடீர் உயர்வை பண பொருளாதார யோகத்தை கொடுத்து ஜாதகர் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துவார் அட்டமாதிபதி. #padmahazan பங்குசந்தை உயில் மியூசுவல் பண்ட் இன்சூரன்ஸ் வெளிநாட்டு பணம் மாதிரியான வகையில் பண பொருளாதார ஏற்றம் தரும். 

⚡️ ஐந்தாம் அதிபதியோடு எட்டாம் அதிபதி இணைந்து , குரு பகவானை எட்டாம் அதிபதி பார்த்து, பங்குசந்தை சூதாட்டம் மாதிரியான வழிகளில் பணத்தை கொடுத்து பிள்ளை இழப்பை ஏற்படுத்திய எட்டாம் அதிபதியும் உண்டு. 

⚡️ மணவாழ்வில் பிரிந்து , வெளிநாட்டில் உள்ள கணவர் வழியாக லட்ச லட்சமாக பணத்தை கொட்டும் எட்டாம் அதிபதியும் உண்டு. 

⚡️ எட்டாம் அதிபதி தசா புத்தியோ உங்கள் வாழ்வில் ஏதோ மாற்றத்தை தரவே செய்யும். #padmahazan நீங்கள் விரும்பியோ / விரும்பாத வகையிலோ அதை ஏற்று கொள்ளும் சூழலில் வைத்து விடும். 

⚡️ இரு ஆதிபத்திய கிரகம் 8 அதிபதி ஆக வந்தால் தசாவின் முற்பகுதியோ பிற்பகுதியோ 8 ஆதிபத்திய பாதிப்பை ஓர் கட்டத்தில் தர தான் பார்க்கும்.  

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

Sunday, August 4, 2024

புதன் தரும் அறிவும் ஜோதிடமும் - தொழில்

🍁 புதன் தரும் அறிவும் ஜோதிடமும் 🍁 #hazan 

👉ஜோதிடத்தின் காரக கிரகம் புதன்.

👉ஜோதிடம் மட்டும் அல்ல படிப்பு அறிவை சார்ந்த செயல்படும் எந்தவொரு துறையிலும் சிறப்பான பங்களிப்பை தருபவர்கள் புதன் ஆதரவை பெற்றவர்களே. 

👉எவ்வளவோ கடினமான புரிந்துகொள்ளவே சிக்கலான விதிகளையும் புரிந்துகொள்ள புதனின் தயவு தேவை. அது computer language, physics, modern science, research மாதிரியான எந்த வகையில் செயல்படும். #padmahazan 

👉புதன் கிரகம் ஒருவருக்கு தீவிரமாக நொடி பொழுதில் எண்ண ஒட்டம் மாற்றுவது ஒரு விஷயத்தை நொடி போழுதில் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப சாதூர்யமாக முடிவை மாற்றும் தன்மை கொடுப்பார்.

💥புத பகவான் கீழ்க்காணும் படிநிலைகளில் ....

👉1. நேரடியாக ஆட்சி உச்சம் பெற்று லக்ன கேந்திர திரிகோணங்களில் இருத்தல்.

👉2. உபய ராசிகளான மிதுன கன்னியில் புதன் ஆட்சி உச்சமாக இருப்பது, புதன் தன் வீட்டை தானே பார்க்கும் தனுசு மீன ராசிகளில் இருப்பது. 

👉3.மீனத்தில் நீசமாகி சுக்ரனோடு இணைந்து நீசபங்கராஜயோகத்தில் இருப்பது.

👉4. நீச புதனுக்கு வீடு கொடுத்த குரு ஆட்சி உச்சமாகி இருப்பது ,

👉5.சந்திரனுக்கு 1 4 7 10ல் புதன் இருப்பது.#padmahazan 

👉6.லக்ன கேந்திரம் திரிகோணத்தில் புதன் சுக்ரன் இணைந்து நட்பு வலுவோடு இருப்பது. 

👉7. புதன் பரிவர்த்தனையில் வலுபெறுவது போன்ற நிலைகளில

👉 புதன் அறிவு சார்ந்த தேடலை கொடுத்து விடுவார் , ஜோதிடம் , கணினி , சாப்ட்வேர் , கணக்கீடுகள் கொண்ட ஆடிட் அக்கவுண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வங்கி பணி கதை கவிதை கட்டுரை பாடல் எழுத்தாளர் வியாபாரம் மாதிரியான ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் அறிவும் அனுபவமும் புதன் தருவார்.  

⛔️⛔️உபய லக்னங்களுக்கு மட்டுமே புதன் தனித்து ஆட்சி உச்சமாகி பாவிகள் தொடர்பு பெறாத போது கொடுக்கும் பத்ரயோகம் ஆனது சிலநிலைகளில் கேந்திராதிபத்திய தோசமாக இருக்கும். அதிகபடியான புத்திசாலிதனத்தை கொடுத்து கேந்திர ஆதிபத்திய தோஷ பாதிப்பை தரும். ⛔️⛔️

👉ஒருவர் ஒரு ஜோதிட விதியை படிப்பதற்கும், அதை தனது மனதில் நிறுத்தி, ஒரு ஜாதகத்தை பார்த்த பொழுது அதுவரை படித்த அவ்வளவு விதிகளையும் நொடி பொழுதினில் ஞாபகத்திற்கு கொண்டு வந்து அவற்றை ஜாதக கிரக அமைப்போடு பொருத்தி பலன் எடுப்பதற்கும் உதவும் கிரகமே புதன்.

👉 இது போக ஜோதிடம் பற்றிய தேடலை நிறைவு செய்ய புதன் அடுத்தபடியாக கேது சனி குரு போன்ற கிரகங்களும் நன்றாக அமைய வேண்டும். #Padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...