Thursday, August 15, 2024

தன யோக ஜாதக கிரக நிலைகள்

🍁 தன யோக ஜாதக கிரக நிலைகள் 🍁 #hazan 

👉தன காரகன் குரு மற்றும் லக்னத்திற்கு 2 5 9 10 11 அதிபதிகள் நட்பு ஆட்சி உச்சமாக ஸ்தான பலம் பெற்று குரு பகவானின் பார்வை இருக்கும் போது ஒருவருக்கு பணம் தங்கம் பொருளாதார மேன்மை தரும். 

👉4 5 & 9 அதிபதிகள் இணைவை பெற்ற 2 10 11 அதிபதிகளும் பணத்தை நீடித்த நிலையான வருமானமாக தொழில் அல்லது சொத்து கட்டிடம் நிலம் வழியாக கொடுப்பார்கள். #padmahazan 

👉 2 10 11 பாவகங்களில் சூரியன் புதன் சுக்ரன் இணைவு , குரு செவ்வாய் சந்திர இணைவு, சனி புதன் சுக்ரன் இணைவு போன்ற முக்கூட்டு கிரக இணைவுகள் சீரான பணத்தை கையில் வைத்து இருக்கும் அளவில் ஜாதகரை வைத்து இருக்கும். 

👉செவ் குரு இணைவு , சனி குரு இணைவு , குரு சந்திர இணைவு , குரு புதன் இணைவு போன்றவை ஒருவருக்கு லக்ன கேந்திர கோணத்தில் இணைந்து இவர்களில் ஒருவர் 1 5 9 அதிபதியாகவோ 2 10 அதிபதியாக வரும் போது குரு தன வருமானத்தை யோகமாக கொடுப்பார்.

👉 ஆறாம் பாவகத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட சுப கிரகங்கள் குரு சுக்ரன் வளர் சந் புதன் இவர்களுடன் இணைந்த சூரியன் போன்றவர்கள் இணையும் போது லட்சங்களில் பணம் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவன வேலை அல்லது நிலையான அரசு வேலை அமைந்து விடும். #padmahazan 

👉எந்த ஓர் கூட்டு கிரக இணைவிற்கும் வீடு கொடுத்த கிரகம் பலவீனம் ஆகாமல் இருக்கும் போது அங்கே லக்ன ஆதிபத்திய சுப பலன் பெற்ற யோக கிரகத்தின் வழியாக ஜாதகருக்கு தன யோகம் உண்டாகும். 

👉மேலே சொன்ன கிரக தசாக்கள் வரிசையாக 20 முதல் 60 வயது வரை நடக்கும் போது யோகமான வாழ்வை ஜாதகர் அனுபவிப்பார். 

👉கூடுதலாக இவற்றை அனுபவிக்க லக்னாதிபதி நன்றாக வலுவாக அமைய வேண்டும். #Padmahazan 

👉லக்னாதிபதி பலவீனம் என்றால் ஜாதகர் போதுமான ஆளுமை இல்லாமல் வாய்ப்பை தவற விடுவார் அல்லது கிடைப்பதை தக்க வைக்க முடியாதபடி யாரிடம் இழந்துவிடுவார்.

👉 இவர் சேர்த்த தனமும் பணமும் யாரோ ஒருவர் அனுபவித்து கொண்டு சுகவாசியாக இருப்பார்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...