Sunday, August 4, 2024

புதன் தரும் அறிவும் ஜோதிடமும் - தொழில்

🍁 புதன் தரும் அறிவும் ஜோதிடமும் 🍁 #hazan 

👉ஜோதிடத்தின் காரக கிரகம் புதன்.

👉ஜோதிடம் மட்டும் அல்ல படிப்பு அறிவை சார்ந்த செயல்படும் எந்தவொரு துறையிலும் சிறப்பான பங்களிப்பை தருபவர்கள் புதன் ஆதரவை பெற்றவர்களே. 

👉எவ்வளவோ கடினமான புரிந்துகொள்ளவே சிக்கலான விதிகளையும் புரிந்துகொள்ள புதனின் தயவு தேவை. அது computer language, physics, modern science, research மாதிரியான எந்த வகையில் செயல்படும். #padmahazan 

👉புதன் கிரகம் ஒருவருக்கு தீவிரமாக நொடி பொழுதில் எண்ண ஒட்டம் மாற்றுவது ஒரு விஷயத்தை நொடி போழுதில் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப சாதூர்யமாக முடிவை மாற்றும் தன்மை கொடுப்பார்.

💥புத பகவான் கீழ்க்காணும் படிநிலைகளில் ....

👉1. நேரடியாக ஆட்சி உச்சம் பெற்று லக்ன கேந்திர திரிகோணங்களில் இருத்தல்.

👉2. உபய ராசிகளான மிதுன கன்னியில் புதன் ஆட்சி உச்சமாக இருப்பது, புதன் தன் வீட்டை தானே பார்க்கும் தனுசு மீன ராசிகளில் இருப்பது. 

👉3.மீனத்தில் நீசமாகி சுக்ரனோடு இணைந்து நீசபங்கராஜயோகத்தில் இருப்பது.

👉4. நீச புதனுக்கு வீடு கொடுத்த குரு ஆட்சி உச்சமாகி இருப்பது ,

👉5.சந்திரனுக்கு 1 4 7 10ல் புதன் இருப்பது.#padmahazan 

👉6.லக்ன கேந்திரம் திரிகோணத்தில் புதன் சுக்ரன் இணைந்து நட்பு வலுவோடு இருப்பது. 

👉7. புதன் பரிவர்த்தனையில் வலுபெறுவது போன்ற நிலைகளில

👉 புதன் அறிவு சார்ந்த தேடலை கொடுத்து விடுவார் , ஜோதிடம் , கணினி , சாப்ட்வேர் , கணக்கீடுகள் கொண்ட ஆடிட் அக்கவுண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வங்கி பணி கதை கவிதை கட்டுரை பாடல் எழுத்தாளர் வியாபாரம் மாதிரியான ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் அறிவும் அனுபவமும் புதன் தருவார்.  

⛔️⛔️உபய லக்னங்களுக்கு மட்டுமே புதன் தனித்து ஆட்சி உச்சமாகி பாவிகள் தொடர்பு பெறாத போது கொடுக்கும் பத்ரயோகம் ஆனது சிலநிலைகளில் கேந்திராதிபத்திய தோசமாக இருக்கும். அதிகபடியான புத்திசாலிதனத்தை கொடுத்து கேந்திர ஆதிபத்திய தோஷ பாதிப்பை தரும். ⛔️⛔️

👉ஒருவர் ஒரு ஜோதிட விதியை படிப்பதற்கும், அதை தனது மனதில் நிறுத்தி, ஒரு ஜாதகத்தை பார்த்த பொழுது அதுவரை படித்த அவ்வளவு விதிகளையும் நொடி பொழுதினில் ஞாபகத்திற்கு கொண்டு வந்து அவற்றை ஜாதக கிரக அமைப்போடு பொருத்தி பலன் எடுப்பதற்கும் உதவும் கிரகமே புதன்.

👉 இது போக ஜோதிடம் பற்றிய தேடலை நிறைவு செய்ய புதன் அடுத்தபடியாக கேது சனி குரு போன்ற கிரகங்களும் நன்றாக அமைய வேண்டும். #Padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...