👉கேது நின்ற பாவகம் சார்ந்தவை தடைபடுத்துதல் துண்டித்தல் விலகி இருத்தல் கிடைத்தும் அதில் நிம்மதி இல்லாத மாதிரியான பலனை அனுபவிக்க வைப்பவர் கேது.
👉 விருப்பம் இல்லாமல் கடமைக்கு ஒன்றை செய்வது மாதிரியான பலனை தருபவர் கேது. #padmahazan
👉கேது நின்ற பாவகங்களில் ஆதிபத்தியம் மற்றும் நெருங்கும் கிரகங்களின் காரகத்துவத்தை தடை தாமதம் செய்வார். இவற்றை அனுபவிப்பதில் ஓர் சந்தோசம் இல்லாத அல்லது கடமையாக நினைக்கும் சூழலை கேது தருவார்.
👉ஜாதகருக்கு பாதிப்பை தந்த கேது தன் தசா புத்தி ஏற்ப தடைபடுத்திய காரக ஆதிபத்ய விஷயங்களை பின் கேதுவே தரவும் செய்வார். இதற்கு கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகம் வலுவாக இருப்பது நல்லது. கூடுதலாக கேது மீது குரு பார்வை அல்லது குரு இணைவு ஏற்பட வேண்டும்.
👉கேது நின்ற பாவகத்தில் ஒரு விதமான ஈர்ப்பு அல்லது ஆதரவு அல்லது மன ஒற்றுமை இல்லாமல் இருக்க செய்வார். #padmahazan
👉 உதாரணமாக 9ல் கேது இருந்தால் தந்தை மீது பாசம் குறைவு அல்லது தந்தை ஜாதகர் மீது எவ்வளவு பாசமாக அன்பாக இருந்தாலும் ஜாதகருக்கு அதனை புரிந்துகொள்ள முடியாமல் இருப்பார்.
👉தந்தை மகன் உறவில் ஓர் நெருடல் அல்லது அலச்சியம் வெளிபடும். மாறாக வீடு கொடுத்த கிரகம் வலுபெற்று சூரியன் வலு பெறுவது கூட கேது தந்தை ரீதியாக நற் பலனை கேது தருவார்.
👉கேது லக்னத்திற்கு 3 6 11 12 பாவகங்களில் கும்ப விருச்சிக கன்னி இடங்களில் நன்மை தரும். #padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment