⚡️குருவின் 5 7 9 பார்வையில் சூரியன் இருப்பது சிவராஜயோகம் சிறப்பை சூரியன் பெறுவார்.
⚡️தந்தை வழி ஆதரவு , தந்தை வழி பாட்டன் சொத்து கிடைப்பது மாதிரியான தந்தை வழி சிறப்பை கொடுக்கும்.
⚡️அரசு பணி , அரசு உயர் பதவி , அரசியல் கட்சி பதவி , அரசியல் தேர்தல் வெற்றி மாதிரியான அரசு வழி சிறப்பை தரும்.
⚡️ தனியார் துறையில் பணியாற்றும் போது உயர் பொறுப்பில் வைத்து இருக்கும்.
⚡️சொந்த தொழிலில் முதலாளியாக இருப்பது , ஊர் , சொந்த பந்தம் , மக்கள் மத்தியில் முக்கிய நபராக மற்றவர்களால் #padmahazan மதிக்ககூடிய மரியாதை அந்தஸ்தை ஜாதகர் பெறுவார்.
⚡️மதிப்பு மரியாதை கௌரவம் அந்தஸ்து அதிகாரம் ஆகிய அனைத்தும் இந்த சிவராஜயோகம் ஒருவருக்கு கொடுக்கும்.
⚡️ஜாதகர் எண்ணமும் செயல்பாடுகளும் எப்போதும் உயர்ந்த இலக்குகளை கொண்டதாக இருக்கும் , அவற்றை அடையும் குறிக்கோளை தனக்கு தானே உருவாக்கி கொள்வார்கள்.
⚡️சிவராஜயோகமும் தர்மகர்மாதிபதி யோகமும் அமைந்து லக்னாதிபதியும் பத்தாம் அதிபதி வலுவாக உள்ள ஒருவர் மேலே சொன்ன ஓர் நிலையில் இருப்பார்.
⚡️சிவராஜயோகத்தில் சூரியனோ குருவோ சனி ராகு கேது தொடர்பு இன்றி , #padmahazan சூரிய குரு பகை நீசம் ஆகாமல் நட்பு ஆட்சி உச்ச ராசிகளில் லக்ன மறைவிடத்தில் மறையாத யோகமாக அமைய வேண்டும்.
⚡️ மிக முக்கியமாக சூரியன் குரு இணைவில் உண்டாகும் சிவராஜயோகத்தில் குரு அஸ்தங்கம் பெற்றால் குரு வலு இழந்து காரகத்துவ குறைவை பாதிப்பாக தரும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment