🍁 கொடூர செவ்வாய் மற்றும் மங்கள யோக செவ்வாய் தரும் பலன்கள் 🍁 #hazan
⚡️அவசரதனம் , ஆவேசம் , வேகமாக செயல்படுவது , முன் யோசனை இன்றி முடிவு எடுப்பது , முன் கோபம் , நிதானத்தை இழப்பது , சண்டை போடும் குணம் , எதிர்த்து தைரியமாக செயல்படுவது போன்ற குணமும் செயல்பாடுகளை தருபவர் செவ்வாய். , லக்னத்தில் செவ்வாய் பார்வை லக்ன செவ் இருப்பது கூடுதலாக மேஷ விருச்சிக லக்ன ராசி பிறப்பது இந்த குணத்தை ஜாதகரிடம் வெளிபடும் . #padmahazan
⚡️செவ்வாய் மீது சனி பார்வை அல்லது செவ் சனி இணைவு செவ் ராகு இணைவு ஏற்படும் போது செவ்வாய் தன் அசுப பாவ குணத்தை வெளிபடுத்துவார் , சனி செவ்வாய் ராகு மூன்று கிரகங்களும் ஒர் பாவகத்தில் பார்வை இணைவு உண்டாகும் போது அந்த பாவகம் முழுமையாக பலவீனமாகும். இது கொடூர குணத்தை வெளிபடுத்தும் செவ்வாய்.
⚡️லக்னத்தின் 1 2 7 8 பாவகத்தில் இது போன்ற செவ்வாய் இருக்கும் போது மணவாழ்க்கை பிரச்சனை வருவதை தவிர்க்க முடியாது. தற்காலிக பிரிவு நிரந்தர பிரிவு வாழ்க்கை துணை இழப்பது மாதிரியான பாதிப்பை தரும்.
⚡️செவ்வாய் 4 7 10 கேந்திர பலத்தை பெறும் போது கூடுதலாக குரு சந்திர சுக்ர பார்வை இணைவு தொடர்பில் மங்கள யோகமாக இருக்கும் போது செவ்வாய் யோகத்தை அதிகபடியாக தருவார். #padmahazan செவ்வாய் 1 4 7 10 ஆட்சியாகி குரு சுக்ர சந்திர தொடர்பால் ருசக யோகத்தால் வருமானத்தை தருவார்.
⚡️விளை நிலம் , ரியல் எஸ்டேட் , கட்டுமான பொருள் , வீடு கடை கட்டிடம் வழியாக வாடகை வருமானம் , செம்மண் , நெருப்பு , மருத்துவம் , மருந்துகடை , விளையாட்டு , காவல் துறை ராணுவம் கடற்படை மாதிரியான காரகத்துவ வழியாக தனமும் பொருளும் யோகத்தை ஏற்படுத்தி தரும்.
⚡️வாகன விபத்தால் காயம் அடைவது , வெடி நெருப்பு மாதிரியான காரணத்தால் இறப்பது , உடல் சூடு பாதிப்பால் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடு, தசை பிடிப்பு , உள் உடம்பில் தசைநார் கிழிந்து வலி ஏற்படுவது , ரத்தகட்டு எல்லாமே செவ்வாய் தரும் பலன்கள் தான்.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment