⚡️ லக்னத்தின் எட்டாம் அதிபதி ஜாதகருக்கு கஷ்டங்களை , போராட்டமான சூழலை , புரிந்து கொள்ள முடியாத நபர்களை உங்கள் உறவினராக தெரிந்தவராக தரும் விதமாக செயல்படும்.
⚡️ எட்டாம் அதிபதி கெடுதலை அதிகபடியாகவும் அதோடு கூடிய நற்பலனை தரும்.
⚡️ எட்டாம் அதிபதி நின்ற பாவகம் ரீதியாக ஜாதகர் சில பிரச்சனைகளை சந்திப்பார். #padmahazan ஜாதகத்தில் எட்டாம் அதிபதி சனி செவ் ராகு கேது தொடர்பில் பாதிப்பை கூடுதலாக தரும்.
⚡️ மன அழுத்தம் , மன நிம்மதி இழக்கும் நிகழ்வுகள், ஏமாற்றம் , துரோகம் அல்லது அவமானம் , திடீர் இடையூறு , திடீர் மாற்றம் மாதிரியான பலனை ஏற்படுத்தும்.
⚡️மிக கடுமையான நிலையில் எட்டாம் அதிபதி நின்ற பாவக உறவை ஜாதகர் இழக்க வேண்டி இருக்கும், அல்லது பிரிவை ஏற்படுத்தி விடும் அல்லது புரிந்து கொள்ள முடியாத மனிதராக அவர்கள் உங்களுக்கு இருப்பாங்க.
⚡️ யோகமான அமைப்பில் நின்ற பாவக ரீதியிலான திடீர் உயர்வை பண பொருளாதார யோகத்தை கொடுத்து ஜாதகர் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துவார் அட்டமாதிபதி. #padmahazan பங்குசந்தை உயில் மியூசுவல் பண்ட் இன்சூரன்ஸ் வெளிநாட்டு பணம் மாதிரியான வகையில் பண பொருளாதார ஏற்றம் தரும்.
⚡️ ஐந்தாம் அதிபதியோடு எட்டாம் அதிபதி இணைந்து , குரு பகவானை எட்டாம் அதிபதி பார்த்து, பங்குசந்தை சூதாட்டம் மாதிரியான வழிகளில் பணத்தை கொடுத்து பிள்ளை இழப்பை ஏற்படுத்திய எட்டாம் அதிபதியும் உண்டு.
⚡️ மணவாழ்வில் பிரிந்து , வெளிநாட்டில் உள்ள கணவர் வழியாக லட்ச லட்சமாக பணத்தை கொட்டும் எட்டாம் அதிபதியும் உண்டு.
⚡️ எட்டாம் அதிபதி தசா புத்தியோ உங்கள் வாழ்வில் ஏதோ மாற்றத்தை தரவே செய்யும். #padmahazan நீங்கள் விரும்பியோ / விரும்பாத வகையிலோ அதை ஏற்று கொள்ளும் சூழலில் வைத்து விடும்.
⚡️ இரு ஆதிபத்திய கிரகம் 8 அதிபதி ஆக வந்தால் தசாவின் முற்பகுதியோ பிற்பகுதியோ 8 ஆதிபத்திய பாதிப்பை ஓர் கட்டத்தில் தர தான் பார்க்கும்.
No comments:
Post a Comment