Thursday, August 15, 2024

விரைய பாவகம் 12ல் நின்ற கிரக பலன்

🍁 விரைய பாவகமான 12ல் நின்ற கிரகம் தரும் பலன்கள் 🍁 #hazan 

லக்னத்திற்கு எண்ணி வர 12 இடமான கடைசி பாவகம் விரைய பாவகம். 

கடைசி, இறுதி, கைவிட்டு போதல் போன்ற நிலையை குறிப்பது இந்த பாவக பலன். 

12 பாவகமும் அதிபதியும் நீங்கள் உங்கள் வாழ்வில் இழக்க போகும், நஷ்டமடைய போகும், பிறருக்காக விட்டு கொடுக்க போகும் பொருளை பணத்தை உறவை குறிக்கும்.

பிறருக்கு பணத்தை கொடுத்து அதனால் உண்டாகும் நிம்மதி இழப்பை தருவதும் 12 பாவகம்தான்.
12 ல் மறையும் கிரகம் ஆதிபத்திய காரகத்துவ பலனில் ஜாதகர் இழப்பை தேடி கொள்வார்.padmahazan 

லக்னாதிபதி குரு சுக்ரன் புதன் வளர் சந்திரனாக 12 ல் மறையும் போது ஜாதகரே செலவுகளை அதீத கவன குறைவான சேமிப்பு எண்ணத்தில் பணத்தை பொருளை தண்ணியாக கரைத்துவிடுவார்கள். செலவு செய்வார்கள். கூடுதலாக சுக்ரன் சுப வலுபெற்றால் நிச்சயமாக ஆடம்பர விரும்பியாகி பின் அனைத்தும் இழந்து வருந்த வைப்பது 12 பாவகம். 

12ல் குரு மறைந்தால் தங்க நகை அடகில் மூழ்கும், வட்டி பணம் பெற்று கணக்கு இன்றி தண்டல் கட்டி பணம் இழப்பை தரும் , அதீத பணம் நஷ்டத்தில் போகும் , பணத்தை எடுத்து வைத்தாலும் புதிதாத ஓர் செலவு நஷ்டம் விரையம் வந்துவிடும். அல்லது உதவி என்று மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த பணம் அல்லது கடன் கொடுத்த பணத்தை பெற இயலாது. அது நஷ்ட நிலையை தரும். #padmahazan 

12 ல் சுக்ரன் , வீடு கார் பைக் போன் பர்னீச்சர் போன்ற ஆடம்பர பொருட்கள்க்கு பணத்தை விரையம் செய்து வருவார்கள். மனைவியோ கணவரோ நோய்வாய்பட்டு மருத்துவ செலவை கூட இங்கே சுக்ரனோடு இணையும் செவ்வாய் சனி அல்லது ராகு ஏற்படுத்தி விடுவார்கள்.

12ல் செவ்வாய் மறைந்தால் நிலம் விற்பது , சகோதரனிடம் இடத்தை விட்டு கொடுத்து ஜாதகர் வெளி ஊருக்கு சென்று வாழ்வது , போன்ற பலனை தரும். 

12 பாவக கெடுபலனை குறைகளை இந்த பதிவில் எழுதி உள்ளேன். அடுத்த பதிவில் இதன் நிறைகளை கூறுகிறேன். #padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY 
WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...