Thursday, August 22, 2024

வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை தரும் சந்திரன்

🍁 வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை தரும் சந்திரன் 🍁 #hazan 

⚡️ஜாதகர் வாழ்க்கை எல்லாம் கிடைத்தும் மன நிம்மதி சந்தோஷம் மட்டும் இல்லாமல் இருக்காரா..?

⚡️வாழ்க்கையில் எதுவும் சரியாக அமையாத போதும் மன நிம்மதியோடு சந்தோசமாக நன்றாக இருக்காரா..? 

என்பதை காட்டுவது எல்லாமே அவரவர் ஜாதக சந்திர வலு குறிப்பிடும் நிலைதான்.

⚡️ சிலருக்கு ஒரே ஓர் பிரச்சனை மட்டும் இருக்கும் அதை சமாளிக்க முடியாமல் கஷ்டபடுவார்கள் , சிலருக்கு எல்லாமே பிரச்சனையாக இருக்கும் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக சரி செய்து அதே சமயம் நன்றாக சந்தோசமாக வாழ்க்கை வாழ்வார்கள். 

⚡️மனது செயல்படாமல் மனிதனால் ஓர் நொடி கூட இருக்க முடியாது. அவருக்கு மனதில் ஏதாவது ஓர் நினைப்பு எண்ணம் ஓடி கொண்டே இருக்கும். #padmahazan மனிதன் தூங்கினால் கூட கனவு அப்படிங்கிற ஒன்று வந்து தூக்கத்தில் எதையாவது படம் ஓட்டி கொண்டு இருக்கும். 

⚡️மனசு நன்றாக ஆக்கபூர்வமாக , நல்ல விதமாக யோசித்தால் உதவுவது கருணை சந்தோஷ நிகழ்வுகள் பங்குகொள்வது ,  நல்ல எண்ணத்தை கொடுத்தால் , ஜாதகர் நன்றாக வாழ்வில் பயணிப்பார். 

⚡️மாறாக மனசு பொறாமை வஞ்சக எண்ணம் ஏமாற்றுவது கஷ்டத்தை பிரச்சனை மட்டுமே கவனமாக கொள்ளும் போது அது ஜாதகரை முன்னேற விடாது. மீண்டும் சிக்கலுக்குள் கொண்டு வரும். 

⚡️ மனிதனுக்கு வரும் மன பாதிப்பினால் உடல் ஆரோக்கியம் குடும்ப வாழ்க்கை பிரச்சனை பிரிவு வேலை தொழில் பாதிப்பு மற்றும் பெரிய கடன் சிக்கும் நிகழ்வை கூட ஏற்படுத்தி விடும். 

⚡️இதெல்லாம் எதை சுற்றி நடக்கிறது..? மனசு ( சந்திரன் ) 

⚡️ லக்னாதிபதி வலுவை போலவே சந்திரனின் வலுவும் கவனிக்க வேண்டிய ஒன்று. #padmahazan 

⚡️ ஜாதகத்தில் சந்திர நின்ற பாவகமும் சந்திர தொடர்பில் உள்ள கிரகங்களும் பொறுத்து சந்திர பலன் அமையும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...