Tuesday, July 30, 2024

சூரிய சந்திர பலவீன பலன்கள்

🍁 சூரிய சந்திரர்கள் பலவீனம் ஆகலாமா..? 🍁 #hazan 

👉எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும் சூரிய சந்திர கிரகங்கள் ஒருவர் ஜாதகத்தில் பாதிப்பு அடைந்து இருக்க கூடாது. 

👉சூரியன் ~ அதிகாரம் செய்யும் குணம் , ஆதிக்க குணம் , தன்னம்பிக்கை , நேர்மை குணம் , தலைமை தாங்குவது , தான் யார் என்கிற தன் மீதான எண்ணத்தை ஏற்படுத்தும் கிரகம். தந்தை வழி ஆதரவு குலபெருமை சொத்து அரச லாபம் பதவி தரும் காரகத்துவ கிரகம். 

👉சந்திரன் ~ தெளிவான மனநிலை , சந்தோசமான மனசு , ஆரோக்கியமான சாப்பாடு காய்கறி , நீர் சத்து , தேக ஆரோக்கியம், மனசை கட்டுபடுத்தி கொள்வது , முக பொழிவு , தாய் வழி ஆதரவு அந்தஸ்து , கொடுத்து உதவும் குணம் போன்றவற்றை காரகத்துவ பலனை தரும் கிரகம். #padmahazan 

⛔️இந்த இரண்டு கிரகமும் ராகு கேது இணைவு , குறிப்பாக கிரகண தோஷம் , சனி இணைவு பார்வை, நீசபங்கம் இல்லாத நீசம் நிலை , சுப கிரக தொடர்பு இன்றி பலவீனமாகி இருப்பது போன்ற நிலையில் சூரிய சந்திரர்கள் பாதிப்பை தருவார்கள். 

👉தன்னம்பிக்கை இல்லாமல் போவது , குழப்பமான மனநிலை , உடல் ஆரோக்கிய பாதிப்பு தாய் தந்தைக்கு பாதிப்பு , தாய் தந்தையால் நிம்மதி இழப்பு , ஏமாற்றும் குணம் , குறுகிய மனம் கொண்டவர் மாதிரியான பலனை தருவார்கள். 

⛔️சூரியனும் சந்திரனும் மாரகாதிபதி பாதகாதிபதி 6 8 அதிபதியாகவே வந்தாலும், முழுமையாக கெட்டால் மேலே சொன்ன காரகத்துவ ரீதியிலான பாதிப்பை தருவார்கள். 

💥💥ஆதிபத்திய பலவீனம் பெற்றாலும் , காரகத்துவ நன்மை தரும் நிலையில் சூரிய சந்திர கிரகங்கள் இருப்பது நல்லது. 💥💥

#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

குரு புதன் சேர்க்கை தொழில்கள்

🍁 குரு புதன் சேர்க்கை 🍁 #hazan

👉 தன காரகனும் புத்திகாரகனும் இணைவால் , பணம் தனம் ( assets & money ) புத்திசாலிதனம் கொண்டு பெறபடும் சூழலை ஏற்படுத்தும். 

👉பணத்தை திறன்பட நிர்வாகிப்பது , பணம் பற்றிய ஆலோசனை தருவது , கொடுக்கல் வாங்கல் பற்றிய கணக்குகளை சரியாக கையாளும் நிலை , வியாபார தன்மை தரும். 

👉Accountant ( CA ) , auditor , cashier, financial management advisor மாதிரியான பணமும் புத்திசாலிதனமும் கலந்த வகையில் வருமானம் அமைந்துவிடும். #padmahazan 

👉பேசி பணம் சம்பாதிப்பது , data கையாள்வது , புத்திசாலித்தை வைத்து பணம் சம்பாதிக்கும் பங்குசந்தை வியாபாரம் தரகு தொழில் இணையதளம் கணினி எழுத்துபணி சார்ந்த வருமானம் தரும்.  

👉சிலர் சொந்தமாக பள்ளி கல்லூரி நடத்துவது , புத்தகம் அச்சு பதிப்பகம் , பிரிண்டிங் தொழில், புத்தக கடை ஜோதிடம் , பத்திர பதிவுதுறை , தங்க நகை வியாபாரம் மாதிரியான இடங்களை வருமானம் அமைந்து விடும். 

👉மிக குறிப்பாக குரு புதன் இணைவில் குருவோ புதனோ ஆட்சி உச்சமாகி இருக்கும் போது , மிதுனம் கன்னி தனுசு மீனம் கடகம் ஆகிய ராசிகளில் ஏற்படும் இந்த இணைவு வலுவாக செயல்படும். #padmahazan

👉இது அவரவர்கள் ஜாதக லக்னாதிபதி தொழில் ஸ்தானம் 2 10 இட தொடர்பு பணபர ஸ்தான தன யோக நிலை ஏற்ப கோடிகளிலோ லட்சத்திலோ ஆயிரங்களிலோ பணத்தை கொடுக்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

Thursday, July 25, 2024

குரு பார்வை தரும் பலன்கள்

🍁 குரு பார்வை தரும் பலன்கள் 🍁 #hazan

👉குரு பகவான் மட்டுமே நவகிரகங்களிலேயே முழுமையான சுபராக இருப்பவர்.

👉சுப விஷயம் பெரும்பாலானவை
எல்லாம் அவரின் காரகங்களே.

👉குரு நன்றாக இருக்கும் ஜாதகருக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும்.

👉எவ்வளவு மோசமான பிற பாவ கிரகங்களின்
தன்மை மற்றும் பாவ கிரகங்களின் பாவ செயல்களை தன் இணைவு மற்றும் பார்வை கொண்டு மாற்றும் தன்மை
கொண்ட ஒரு கிரகம் குரு பகவான்.

👉குருவின் இணைவு விட பார்வை வலு சிறப்பானது.

👉குரு பகவான் எந்த அளவிற்கு வலிமை பெற்று எந்தெந்த பாவகத்தை பார்கிறாரோ அந்த பாவகங்கள் எல்லாம்
வலு பெற்றே இருக்கும். #padmahazan



💥12 பாவகங்களை குரு பார்க்க பலன்கள் ~

💥லக்னத்தை குரு பார்க்க ஜாதகர் நல்ல குணவான் நல்ல அந்தஸ்து பெறுவார்

💥2ல் குரு பார்வை குடும்பம் தனம் பேச்சு சீரான பொருளாதார பணபுழக்கம்.

💥3ல் குரு பார்வை புகழ் முயற்சி நற்பெயர் சிறுதூர பயணத்தால் வரும் பணம்

💥4ல் குரு பார்வை  வீடு வண்டி தாயார் படிப்பு உடல் ஆரோக்கியம் நில சேர்க்கை

💥5ல் குரு பார்வைநல்ல குழந்தைகள் நற் சிந்தனை அதிர்ஷ்டம் யோகம்

💥6ல் குரு பார்வை நோய் பாதிப்பு எதிரி தொல்லை சுப கடன் வேலை அமைவது

💥7ல் குரு பார்வை நல்ல துணை , தொழில் கூட்டாளி, இல்லற வாழ்க்கை நண்பர்கள் ஆதரவு #padmahazan

💥8ல் குரு பார்வை ஆயுள்  மறைவாழ்வு தூர தேச வருமானம் திடீர் பணம் புத்திரர்களால் மன சோகம் தாமதமாக குழந்தை பிறப்பது

💥9ல் குரு பார்வை பாக்கியம் தந்தை ஆதரவு இறைபக்தி சுபகாரியம் எளிதாக கைகூடும் திருமணம் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும்.

💥10ல் குரு பார்வை நல்ல தொழில் பதவி ராஜாங்க தொடர்பு கௌரவமான உத்தியோகம்

💥11ல் குரு பார்வை வெற்றி முன்னேற்றம் லாபம் 2ம் வாழ்க்கை துணை மூத்த சகோதரம் வழி ஆதரவு தொழில் பெரிய லாபம்

💥12ல் குரு பார்வை சுப செலவுகள் சயன சுகம் வெளிஇடத்தில் பணம் சம்பாதிப்பது தூக்கம்  வெளிநாட்டில் சொத்து சேர்ப்பது.

👉மேற்கண்ட பாவகங்களில் பார்க்கும் குரு வலுவை பொறுத்து வளர்ச்சி அனுபவிக்கும் நிலை இருக்கும்.

⛔️⛔️குரு பார்வை ரிஷப மற்றும் துலா லக்ன ராசிக்கு முழுமையான நன்மைகள் தராது. அதில் ஓர் ஆதிபத்திய கெடுதலை தரும்.⛔️⛔️ #padmahazan

⛔️எந்தவொரு நிலையிலும் எந்த லக்னமாக இருந்தாலும் குரு பகவான் நீசம் பகை அல்லது சனி பார்வை
இணைவு மற்றும் ராகுவோடு கிரகணமடைதல் நல்லதல்ல. ⛔️

👉லக்னத்திற்கு ஆகாத கிரகமாக குரு வந்தாலும் நட்பு சம வீடுகளில் 5 9 3 11 பாவகங்களில் இருப்பது நல்லது.

👉லக்ன யோகர் ஆக குரு வரும் போது நட்பு ஆட்சி உச்சம் பெறுவது யோகம். பார்வை சிறப்பு தரும்.

👉 குரு நீசம் பெற்றாலும் வீடு கொடுத்த சனி உச்சம் பெறுவது , உச்ச செவ்வாய் இணைவில் குரு இருக்கும் போது பெரிய அளவிலான தனம் பணம் யோகத்தை ஏற்படுத்தும். இவர்கள் லக்ன யோகராக கேந்திர கோணத்தில் இருக்க வேண்டும்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851

#padmahazan

Tuesday, July 23, 2024

குரு சந்திர யோகம் பலன்கள்

🍁 குரு சந்திர யோகம் 🍁 #hazan 

சந்திரனோடு குரு இணைவது , சந்திரனுக்கு குரு பார்வை இருப்பது போன்றவை குரு சந்திர யோகம் என்பார்கள். 

உங்களது முகம் பிறர் நல்லவராக உங்களை நினைக்க வைக்கும். 

பூரிப்பான முகம் , தேஜஸ் ஆன முக பொழிவை தரும். 

உங்களது முகமே உங்களை நல்லவராக வெளி உலகிற்கு காட்டும் , 

போதுமான பணவரவு இருக்கும். பொருளாதார நிலையில் நன்றாக இருக்க வைக்கும். பிறருக்கு உதவும் மனபான்மை கொண்டவராக ஜாதகர் இருப்பார். 

பணம் நகை மீதான அக்கறை எப்போதும் உண்டு. இவற்றின் மீது தனி கவனம் வைப்பார்கள். தன பண ஆபர சேர்க்கை சுப பாவகங்களில் ஏற்படுத்தி தரும். #padmahazan

மனதில் புது புது ஆக்கபூர்வமான எண்ணமும் சந்தோசமும் ஏற்படும்.

தர்ம குணம் மேலோங்கும், பிறருக்கு உதவும் மனபான்மை இருக்கும்.

மனசும் முகமும் உடலும் பிறரை கவரும் சுப குணம் சுப சரீர உடல் வடிவத்தை கொடுக்கும். 

இங்கே குரு சந்திரனுக்கு வேறு சனி பார்வை இணைவு ராகு கேது இணைவு வர கூடாது. வந்தால் மொத்த சுப பலனும் கெடும்.

சந்திரனது வளர்பிறை தேய்பிறை திதி மற்றும் குரு பகவான் பெறும் நட்பு பகை நீச ஆட்சி உச்ச ஸ்தான பலம் வக்ர கதி ஏற்ப இந்த யோக பலனின் சுப பலன் மிகுதியாகவோ குறைவாகவோ இருக்கும். 

தமிழ்நாட்டை ஆண்ட இரு மறைந்த முதல்வர்களுக்கு இந்த குரு சந்திர யோகம் இருந்தது பல தேர்தலில் வெற்றியை தர காரணம். 

#padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

தொழில் பாதிப்பு கிரக நிலை

🍁 தொழில் பாதிப்பு 🍁 #hazan 

12 பாவகம் கூட்டு கிரக இணைவில் வலுபெறும் போது , சொந்த தொழில் செய்யதால் விரையமாகும் , நஷ்டம் உண்டாகும் , தொழில் நடத்த தொடர் சிக்கலை 12 மிடம் தரும். 

12 பாவக ஆதிபத்திய சம்மந்தப்பட்ட தொழில் நடத்தும் போதும் , 10 பாவகம் வலுவாக இருந்தால் மட்டும் தொழில் சிறப்படையும். 

12 ம் பாவகமும் தொழிலை தரும் அதற்கு 10 பாவகமும் துணை நிற்க வேண்டும். #padmahazan 


மேஷ லக்னம். 10 அதிபதி தொழில் தரும் சனி நீசம் , 12 அதிபதி விரைய குரு ஆட்சி பெற்று சூரி புத இணைவில் உள்ளார். 6 அதிபதி நீசபங்கம் பெற்று 6 வீட்டை பார்ப்பதும் நல்ல நிலை அல்ல... 

தொழில் நஷ்டம் இழப்பு அதனால் கடன் மாதிரியான கெடுபலனை தரும்.

சனி தசா புதன் தசா வந்தால் ஜாதகர், தலையல் துண்டை போட்டு கொள்வது உறுதி.  

#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

சுக ஸ்தான பாதிப்பு வீடு வாகனம்

🍁 சுக ஸ்தான பாதிப்பு 🍁 #hazan 

லக்னத்திற்கு நான்காம் வீட்டின் அதிபதி நீசம் பெறுவது , 6 8 மறைந்து ராகு கேது இணைவை பெறும் போது , நான்கில் சனி ராகு செவ்வாய் சூரியன் போன்ற பாவிகள் கூட்டு இணைவில் இருக்கும் போதும் , அர்தாஷ்டம கண்டக சனி காலத்திலும் , 

நிலையான வீடு வாகனம் அமையாது , வீடு மாற்றம் தரும் , வாடகை வீடு மாறுவார்கள். 

சொந்த வீடு அமைந்தாலும் வெளி நாடு தூர ஊர் வேலை தொழில் வருமானம் காரணமாக வெளியே தூரம் போக வைக்கும். வீட்டை கவனிக்க முடியாது. 

நிலத்தில் தகராறு அல்லது பராமரிப்பு குறை தரும், வீட்டிலோ உடலிலோ சிறு பிரச்சனை வருவது தொடர்ச்சியாக இருக்கும். 

வாகனம் திருட்டு போவது , பழுதாகி நிற்பது , பயன்படுத்த ஆள் இன்றி ஓர் ஓரமாக கிடக்கும். #padmahazan 

சிலர் விபத்து கண்டம் அல்லது எலும்பு முறிவை ஏற்படுத்தவும் தசா புத்தி மற்றும் கோட்சார சனி தரும்.

தவறான பழக்க வழக்கம் உடலை மனதை பலவீனப்படுத்தும், போதைக்கு எளிதாக அடிமைபடுவார்கள். சுகத்திற்கு வரம்பு மீறவும் அதனால் அவபெயர் அல்லது கௌரவம் பாதிக்கும். 

சுக ஸ்தானமோ சுகாதிபதி பலவீனமானவர்கள் மேலே சொன்னவற்றில் கவனமும் பொறுப்பும் தேவை. 

#padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

குரு கேது சேர்க்கை பலன்கள்

🍁 குரு கேது சேர்க்கை 🍁 #hazan 

குருபகவான் குடும்பம் தனம் கௌரவம் குழந்தைகள் புத்திரர்கள் போன்றவற்றை தரும் ஒரு முதன்மை சுபர்.

கேது எதையும் வெறுக்க வைக்கும், தடை உண்டாக்கும் , தாமதபடுத்தும் , துண்டித்துவிடுதல் மாதிரி ஒரு விஷயத்தை கொடுக்கும் நிழல் பகவான் கேது.

இவர்கள் இருவரும் நெருங்க நெருங்க குரு கொடுக்கும் தனம் குடும்பம் குழந்தை இவற்றை வெறுக்க வைக்கும் கிடைக்க தடை உண்டுபண்ணும் தாமதபடுத்தும்... அல்லது அவற்றை பெற்ற பிறகு தனக்கு தானே வெறுமை தன்மை உணர வைக்கும்.

கேளயோகம் என்று சொல்வார்கள்... குருவோடு கேது இணைவை.

இந்த யோகம் எப்படி வேலை பார்க்கும். கேது தசாவில் குரு கேதுவோடு இணையும் தூரத்தை பொருத்து கேது குருவினை கவர்ந்து குரு பலனை கேது தருவார். அதாவது கேது தசாவில் கேளயோகம் செயல்படும். 

மாறாக கேளயோகம் இருந்து குரு தசா நடக்க குருவின் குடும்பம் தன விஷயத்தில் கேது இணைவதால் குரு தன் பலனை தர தடுமாறுவார். குரு தசா பெரிய அளவில் பலன் தராது. கேது தசா புத்தி காலங்களில் அந்த பலன் வெளிபடும்.

கேளயோகம் இருந்து கேது சாரத்தில் கிரகங்கள் நின்று தசா நடத்துவதும் ஒரு யோகமான சாரநிலை தசாவாகவே அந்த தசா அமையும். #padmahazan 

பொதுவாக முதன்மை சுபரான குரு ராகு கேதுவோடு இணைவது சரியான அமைப்பு கிடையாது. 

அப்படி இணைவு இருக்கும் நிலையில் இணைந்த தூரம் மற்றும் நடக்க இருக்கும் தசா மிக முக்கியம்.

குரு கேது இணைவில் நின்ற ராசி குரு உச்ச நீச வக்ர நிலைக்கு ஏற்ப விதிவிலக்கு உண்டு 

🤩 #padmahazan🤩

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851 

கல்வி கற்கும் நிலை 4 பாவகம்

🍁 4 பாவகம் கல்வி ஸ்தானம் 🍁 #hazan 

நான்காம் பாவகம் வலுவாக இருக்கும் போது கல்வி நன்றாக அமைந்து கல்வி கற்க கூடிய சூழலும் நன்றாக இருக்கும். எத்தகைய நிலையிலும் நான்காம் பாவகம் ஒருவருக்கு ஓர் கல்வியை கற்க தூண்டும்.

15 முதல் 25 வயது வரை உள்ள தசா புத்தி மற்றும் நான்காம் பாவக வலு ஏற்பதான் ஒருவர் கல்வி நிலை இருக்கும். 

நான்காம் பாவகம் கடுமையாக பாதித்த நிலையிலும் ஒருவர் குறைந்தபட்ச கல்வி பெற்று இருப்பார். 

வண்டி ஓட்ட கற்று கொள்வது, மெஷின் ஓட்ட கற்று கொள்வது , கைவினை பொருட்கள் அல்லது சுய தொழில் செய்ய சிறு பயிற்சி சென்று சேர்வது கூட நான்காம் பாவகம் தரும் கல்விதான். 

நான்காம் அதிபதி & புதன் கேந்திர கோண பலத்தோடு நன்றாக குரு சந்திர பார்வை அமைந்தால் ஜாதகர் உயர் படிப்பில் நன்றாக இருப்பார். #padmahazan 

சில வருடம் முன்பு பலன் சொல்லும் போது ஜாதகர் திடீரென ஓர் கேள்வி கேட்டார்...

" நான் எங்கே படிச்சி இருப்பேன் சொல்லுங்க..? " என்றார்.

சில நோடிகள் மௌனமாக இருந்தேன்.

" IIT இல்லன்னா NIT MIT " என்றேன்.

அசந்து போய்ட்டார்... 

" ஆமாங்க IIT சென்னை படித்தேன் , எப்படி சொல்றீங்க..? " என்றார். #padmahazan 

கல்வி ஸ்தான அதிபதி ஆட்சி பெற்று சந்திர கேந்திரத்தில் நிற்கும் அவருக்கு புதன் ஆட்சி. 

நான்காம் பாவக வலுவே கற்கும் கல்வி மற்றும் கல்வி நிலைய மதிப்பை காட்டும். 

பின்குறிப்பு : 

இருளாண்டி institute of technology படிச்சிட்டு கமெண்டில் ஜாதகத்தை போட்டு என்ன படிச்சார் எப்போது படிச்சார் கேட்காதீங்க... 

நான்காம் பாவகாதிபதி நன்றாக இருந்தால் எங்கே படித்தாலும் உங்கள் கல்வி உங்களை காப்பாற்றும். 

#padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

ஒருவருக்கு எப்போது திருமணம் நடக்கும்..?

🍁 ஒருவருக்கு திருமணம் எப்போது நடக்கும்..? 🍁 #hazan 

1). வாழ்க்கை துணையால் ஜாதகரோ ஜாதகியோ நன்றாக இருக்க வேண்டும் மனைவி கணவன் அப்படிங்கிற ஒருவர் துணையோடு வாழ வேண்டும் அப்படிங்கிற கால கட்டம் வரும் போது கிரகம் திருமணத்தை தரும்.

2). இதை வேறு விதமாக யோசித்தால் , கணவன் மனைவி வழியாக சிக்கல் பிரிவு விவாகரத்து வர வேண்டும் என்கிற நிலையிலும் திருமணத்தை கிரகங்கள் தரும். ( ? ) இதுதான் ரொம்ப கடுமையான அமைப்பு. 

" இவரே bomb 💣 வைப்பாராம் இவரே எடுப்பாராம் " மாதிரியான நிலை. 

3). முறைப்படியான வாழ்க்கை துணையால் காமம் கிடைக்க வேண்டும் என்கிற கால கட்டத்தில் கிரகங்கள் திருமணத்தை தரும். #padmahazan 

4). குழந்தை பிறக்கும் காலம் வந்துவிட்டது அப்படிங்கிற காரணத்தால் உடனடியாக ஒருவரை அறிமுகபடுத்தி திருமணத்தை கிரகங்கள் தரும். 

மேலே சொன்ன 4 நிலையில் எந்த அமைப்பில் ஒருவருக்கு கிரகங்கள் திருமணத்தை தருகிறது என்று பார்த்தாலே மீதமுள்ள வாழ்க்கை எது எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்  

#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

அஷ்டம ஸ்தானம் எட்டாம் பாவகம் எதை தரும்..?

🍁 எட்டாமிடம் தரும் பலன்கள் 🍁 #hazan 

எட்டாம் பாவகம் மற்றும் பாவக அதிபதி எட்டில் நின்ற கிரகம் கீழே உள்ள பலன்களை தான் நின்ற நிலை ஏற்ப தருவார்கள். 

ஜோதிடம், 

சுரங்க பணி, 

ஆழ்கடல் ஆராய்ச்சி, 

ஞான தேடல், 

அமானுஷ்யம், 

இரவு நேர பணி, 

இருளில் நடக்கும்
வேலை அல்லது தொழில், 

கடத்தல் தொழில் , #padmahazan 

ஏமாற்றி பணம் பறிப்பது ,

ஏமாற்றம் அடைவது , 

திரையரங்கு ஊழியர், 

வெளிநாட்டு வாழ்க்கை, 

சிறைபடுதல், 

சிறை வாழ்க்கை, 

தீராத நோயோடு மருத்துவமனையில் நீண்ட வருடங்களாக வசித்தல், 

கோமா,

ஸ்டூடியோ இருட்டில் நடக்கும் பிரகாசமான
இரவு நிகழ்ச்சி தொகுப்பு, 

எடிட்டிங், 

பேய், பிசாசு,

மாயாஜால மந்திரங்கள் தந்திரங்கள், 

மேஜிக் மேன் , 

இறைவனை உணரும் நிலை
வெளிநாடு அல்லது தூர இடங்களில் வாழும் நிலை 

விண்வெளி சார்ந்த பயணங்கள், 

அகழ்வு ஆராய்ச்சி 

இருள் சூழ்ந்த பிரபஞ்ச எண்ணமும் தேடலும் ஆராய்ச்சியும், 

ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவுகளில் வசிப்பது போன்ற மனோநிலை, 

தனியறையில் யாரோடும் தயவும் இன்றி வசிப்பது,

மறைவாய் எதையும் செய்வது, 

மறைந்து மறைந்து காரியம் சாதிப்பது,

மறைவில் நடப்பதை உணர்வதை கொண் னடு பணம் சம்பாதிப்பது 

லாட்டரி

பங்கு வர்த்தகம்

வெளிநாடு,

மனநலம் பாதித்து பயபடுவது, 

ஆயுள் கண்டம், 

திடீர் லாபம், 

திடீர் யோகம், 

திடீர் பெரும் பணம், 

திடீர் முன்னேற்றம் #padmahazan 

அந்நிய நாட்டில் முதலீடு அல்லது சொத்து சேர்ப்பது 

ஆயுள் காப்பீடு பணம் 

இவை அனைத்துமே எட்டாமிடம் தரும் பலன்களே. 

அனைத்து பலனுமே அனைவருக்கும் நடந்துவிடாது.

உங்களது ஜாதக கிரக நிலை எட்டாமிட ராசி சுப பாவ தொடர்பு பொறுத்து மேலே சொன்ன பலன்களில் ஒரு சில பலன்கள் நடக்கும்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY 
WHATS APP 8300 620 851

#padmahazan

லக்னாதிபதி பலம் பெறுவதால் ஏற்படும் நன்மைகள்

🍁 லக்னாதிபதி பலம் 🍁 #hazan 

ஓர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருப்பது ஜாதகரை ஓர் நல்ல வாழ்விற்கு கொண்டுதான் செல்லும். அதனால் உண்டாகும் நன்மைகள் ஏராளம். 

💥ஜாதகரின் தன்னை பற்றிய நினைப்பு , 

💥தன்னை பலமாக ஆளாக உணர்தல் ,

💥செயல் திறன் , 

💥குறிக்கோள் அடையும் நினைப்பு ,

💥திடமான உடல் , 

💥எண்ணங்களை செயலாக மாற்றுதல், 

💥வாழ்க்கையை தனக்கு ஏற்றபடி மாற்றும் வலிமை, 

💥தன் சுய முடிவில் விடா பிடியாக இருப்பது , 

💥கௌரவமான நிலை , 

💥பிறருக்கு உதவும் அளவிற்கு தன்னை பொறுப்பான நபராக வைத்து இருப்பது #padmahazan 

💥எல்லாமே லக்னாதிபதி வலுபெறும் போது ஜாதகருக்கு கிடைத்துவிடும். காரக ரீதியான கிரகங்கள் சூரிய சந் செவ்வாய் குரு கெட்டு போக கூடாது. 

💥லக்னாதிபதி வலுபெற்றவர்கள் தன் வாழ்வில் அதிகபடியாக சுயமுடிவில் சுய முன்னேற்றம் சார்ந்து செயல்படுவார்கள்.

👉நான் யார்..? 

👉எங்கே இருக்கனும்..? 

👉வாழ்க்கை எவ்வளவு பொறுப்பாக இருக்கனும்..? 

👉மற்றவர்கள் என்னை எப்படி மரியாதை தரனும்..? 

👉எந்த அளவிற்கு பணமும் பொருளாதாரமும் இருக்க வேண்டும்..? 

💥அப்படிங்கிற தன்னை பற்றிய எண்ணமும் செயல்பாடும் கௌரவமும் அதற்கு ஏற்ப நல்ல வாழ்க்கை சூழலும் ஏற்படுத்தி கொள்வார்கள். #padmahazan 

💥கஷ்டமான தசா காலத்தில் கூட போராட்ட வாழ்விலும் தனக்கான வாய்ப்பை தேடி கொள்ளதான் பார்ப்பார்கள். 

⛔️லக்னாதிபதி பலம் பலவீனம் என்பது பகை நீசம் ஆட்சி உச்சம் மட்டும் கிடையாது. ⛔️

⛔️⛔️⛔️லக்னத்திற்கு லக்னாதிபதி எந்த பாவகத்தில் யாரோடு இணைந்து யார் பார்வை உள்ளார் என்பதை பொறுத்துதான் வலுவா பலவீனமா என்பது அமையும். ⛔️⛔️⛔️

#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

லக்னாதிபதி பலவீன பாதிப்பு

🍁 லக்னாதிபதி பலவீனம் 🍁 #hazan 

சில மாதங்களுக்கு முன்பு பார்த்த ஓர் கோடீஸ்வரர் ஜாதகம்... நமது பதிவை படிக்கும் ஒருவர்தான். 

பல கோடிகளுக்கு பூர்வீக சொத்து கொண்டவர், பங்களா வீடு கார் எல்லாமே கொண்டவர். தொழில் மட்டும் சரியில்லை. சில கோடிகளை அதில் இழந்து விட்டார். ஆனால் பல கோடி சொத்தாக அவரை காப்பாற்றி வருகிறது. 

சுகாதிபதி ஆட்சி , பூர்வ புண்ய அதிபதி ஆட்சி , பாக்கியாதிபதி ஆட்சி , தொழில் ஸ்தான அதிபதி ஆட்சி , சுக்ர குரு சந்திர எல்லாமே சுப கிரகமாக சுப அமைப்பில் உள்ளது. 

லக்னாதிபதி மட்டும் கடுமையாக பாவ கிரகத்தால் பாதித்த ஜாதகம். லக்னாதிபதி மட்டும் கெட்டு போன ஜாதகம்.

சொன்ன பலன் , 

" பாட்டான் தாத்தா தந்தை உங்களுக்கு சொத்து சேர்த்து கொடுத்துடாங்க , உங்களால் அதை அதிகபடுத்த முடியாது , அனுபவிக்கலாம் , முழுதாக நஷ்டமும் ஆகிட மாட்டீங்க , உங்க பையன் பேரனுக்கு கொடுத்துட்டு போவீங்க " என்றேன். 

" தொழில் பண்ணமாட்டேங்க , இருப்பதை காப்பாற்றி கொள்கிறேன், மாத செலவுக்கு கூட பணம் சம்பாதிக்க தேவையில்லை ஆனால் சும்மாவே இருப்பது ஓர் மாதிரியா இருக்கு , அதுனால தொழில் பண்ணி சில கோடி நஷ்டம் ஆகிட்டு , இனிமே கவனமாக இருந்துகிறேன் " சொன்னார். 

இங்கேதான் லக்னாதிபதியை புரிந்து கொள்ள வேண்டும். 

#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851 

இந்த பதிவை அவர் கூட படிக்கலாம் , சம்பந்தப்பட்டவரது அனுமதி இல்லாமல் முழு ஜாதகத்தை எழுதுவது சரியாகாது.

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...