ஓர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருப்பது ஜாதகரை ஓர் நல்ல வாழ்விற்கு கொண்டுதான் செல்லும். அதனால் உண்டாகும் நன்மைகள் ஏராளம்.
💥ஜாதகரின் தன்னை பற்றிய நினைப்பு ,
💥தன்னை பலமாக ஆளாக உணர்தல் ,
💥செயல் திறன் ,
💥குறிக்கோள் அடையும் நினைப்பு ,
💥திடமான உடல் ,
💥எண்ணங்களை செயலாக மாற்றுதல்,
💥வாழ்க்கையை தனக்கு ஏற்றபடி மாற்றும் வலிமை,
💥தன் சுய முடிவில் விடா பிடியாக இருப்பது ,
💥கௌரவமான நிலை ,
💥பிறருக்கு உதவும் அளவிற்கு தன்னை பொறுப்பான நபராக வைத்து இருப்பது #padmahazan
💥எல்லாமே லக்னாதிபதி வலுபெறும் போது ஜாதகருக்கு கிடைத்துவிடும். காரக ரீதியான கிரகங்கள் சூரிய சந் செவ்வாய் குரு கெட்டு போக கூடாது.
💥லக்னாதிபதி வலுபெற்றவர்கள் தன் வாழ்வில் அதிகபடியாக சுயமுடிவில் சுய முன்னேற்றம் சார்ந்து செயல்படுவார்கள்.
👉நான் யார்..?
👉எங்கே இருக்கனும்..?
👉வாழ்க்கை எவ்வளவு பொறுப்பாக இருக்கனும்..?
👉மற்றவர்கள் என்னை எப்படி மரியாதை தரனும்..?
👉எந்த அளவிற்கு பணமும் பொருளாதாரமும் இருக்க வேண்டும்..?
💥அப்படிங்கிற தன்னை பற்றிய எண்ணமும் செயல்பாடும் கௌரவமும் அதற்கு ஏற்ப நல்ல வாழ்க்கை சூழலும் ஏற்படுத்தி கொள்வார்கள். #padmahazan
💥கஷ்டமான தசா காலத்தில் கூட போராட்ட வாழ்விலும் தனக்கான வாய்ப்பை தேடி கொள்ளதான் பார்ப்பார்கள்.
⛔️லக்னாதிபதி பலம் பலவீனம் என்பது பகை நீசம் ஆட்சி உச்சம் மட்டும் கிடையாது. ⛔️
⛔️⛔️⛔️லக்னத்திற்கு லக்னாதிபதி எந்த பாவகத்தில் யாரோடு இணைந்து யார் பார்வை உள்ளார் என்பதை பொறுத்துதான் வலுவா பலவீனமா என்பது அமையும். ⛔️⛔️⛔️
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment