Tuesday, July 23, 2024

குரு கேது சேர்க்கை பலன்கள்

🍁 குரு கேது சேர்க்கை 🍁 #hazan 

குருபகவான் குடும்பம் தனம் கௌரவம் குழந்தைகள் புத்திரர்கள் போன்றவற்றை தரும் ஒரு முதன்மை சுபர்.

கேது எதையும் வெறுக்க வைக்கும், தடை உண்டாக்கும் , தாமதபடுத்தும் , துண்டித்துவிடுதல் மாதிரி ஒரு விஷயத்தை கொடுக்கும் நிழல் பகவான் கேது.

இவர்கள் இருவரும் நெருங்க நெருங்க குரு கொடுக்கும் தனம் குடும்பம் குழந்தை இவற்றை வெறுக்க வைக்கும் கிடைக்க தடை உண்டுபண்ணும் தாமதபடுத்தும்... அல்லது அவற்றை பெற்ற பிறகு தனக்கு தானே வெறுமை தன்மை உணர வைக்கும்.

கேளயோகம் என்று சொல்வார்கள்... குருவோடு கேது இணைவை.

இந்த யோகம் எப்படி வேலை பார்க்கும். கேது தசாவில் குரு கேதுவோடு இணையும் தூரத்தை பொருத்து கேது குருவினை கவர்ந்து குரு பலனை கேது தருவார். அதாவது கேது தசாவில் கேளயோகம் செயல்படும். 

மாறாக கேளயோகம் இருந்து குரு தசா நடக்க குருவின் குடும்பம் தன விஷயத்தில் கேது இணைவதால் குரு தன் பலனை தர தடுமாறுவார். குரு தசா பெரிய அளவில் பலன் தராது. கேது தசா புத்தி காலங்களில் அந்த பலன் வெளிபடும்.

கேளயோகம் இருந்து கேது சாரத்தில் கிரகங்கள் நின்று தசா நடத்துவதும் ஒரு யோகமான சாரநிலை தசாவாகவே அந்த தசா அமையும். #padmahazan 

பொதுவாக முதன்மை சுபரான குரு ராகு கேதுவோடு இணைவது சரியான அமைப்பு கிடையாது. 

அப்படி இணைவு இருக்கும் நிலையில் இணைந்த தூரம் மற்றும் நடக்க இருக்கும் தசா மிக முக்கியம்.

குரு கேது இணைவில் நின்ற ராசி குரு உச்ச நீச வக்ர நிலைக்கு ஏற்ப விதிவிலக்கு உண்டு 

🤩 #padmahazan🤩

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851 

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...