Tuesday, July 23, 2024

லக்னாதிபதி பலவீன பாதிப்பு

🍁 லக்னாதிபதி பலவீனம் 🍁 #hazan 

சில மாதங்களுக்கு முன்பு பார்த்த ஓர் கோடீஸ்வரர் ஜாதகம்... நமது பதிவை படிக்கும் ஒருவர்தான். 

பல கோடிகளுக்கு பூர்வீக சொத்து கொண்டவர், பங்களா வீடு கார் எல்லாமே கொண்டவர். தொழில் மட்டும் சரியில்லை. சில கோடிகளை அதில் இழந்து விட்டார். ஆனால் பல கோடி சொத்தாக அவரை காப்பாற்றி வருகிறது. 

சுகாதிபதி ஆட்சி , பூர்வ புண்ய அதிபதி ஆட்சி , பாக்கியாதிபதி ஆட்சி , தொழில் ஸ்தான அதிபதி ஆட்சி , சுக்ர குரு சந்திர எல்லாமே சுப கிரகமாக சுப அமைப்பில் உள்ளது. 

லக்னாதிபதி மட்டும் கடுமையாக பாவ கிரகத்தால் பாதித்த ஜாதகம். லக்னாதிபதி மட்டும் கெட்டு போன ஜாதகம்.

சொன்ன பலன் , 

" பாட்டான் தாத்தா தந்தை உங்களுக்கு சொத்து சேர்த்து கொடுத்துடாங்க , உங்களால் அதை அதிகபடுத்த முடியாது , அனுபவிக்கலாம் , முழுதாக நஷ்டமும் ஆகிட மாட்டீங்க , உங்க பையன் பேரனுக்கு கொடுத்துட்டு போவீங்க " என்றேன். 

" தொழில் பண்ணமாட்டேங்க , இருப்பதை காப்பாற்றி கொள்கிறேன், மாத செலவுக்கு கூட பணம் சம்பாதிக்க தேவையில்லை ஆனால் சும்மாவே இருப்பது ஓர் மாதிரியா இருக்கு , அதுனால தொழில் பண்ணி சில கோடி நஷ்டம் ஆகிட்டு , இனிமே கவனமாக இருந்துகிறேன் " சொன்னார். 

இங்கேதான் லக்னாதிபதியை புரிந்து கொள்ள வேண்டும். 

#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851 

இந்த பதிவை அவர் கூட படிக்கலாம் , சம்பந்தப்பட்டவரது அனுமதி இல்லாமல் முழு ஜாதகத்தை எழுதுவது சரியாகாது.

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...