நான்காம் பாவகம் வலுவாக இருக்கும் போது கல்வி நன்றாக அமைந்து கல்வி கற்க கூடிய சூழலும் நன்றாக இருக்கும். எத்தகைய நிலையிலும் நான்காம் பாவகம் ஒருவருக்கு ஓர் கல்வியை கற்க தூண்டும்.
15 முதல் 25 வயது வரை உள்ள தசா புத்தி மற்றும் நான்காம் பாவக வலு ஏற்பதான் ஒருவர் கல்வி நிலை இருக்கும்.
நான்காம் பாவகம் கடுமையாக பாதித்த நிலையிலும் ஒருவர் குறைந்தபட்ச கல்வி பெற்று இருப்பார்.
வண்டி ஓட்ட கற்று கொள்வது, மெஷின் ஓட்ட கற்று கொள்வது , கைவினை பொருட்கள் அல்லது சுய தொழில் செய்ய சிறு பயிற்சி சென்று சேர்வது கூட நான்காம் பாவகம் தரும் கல்விதான்.
நான்காம் அதிபதி & புதன் கேந்திர கோண பலத்தோடு நன்றாக குரு சந்திர பார்வை அமைந்தால் ஜாதகர் உயர் படிப்பில் நன்றாக இருப்பார். #padmahazan
சில வருடம் முன்பு பலன் சொல்லும் போது ஜாதகர் திடீரென ஓர் கேள்வி கேட்டார்...
" நான் எங்கே படிச்சி இருப்பேன் சொல்லுங்க..? " என்றார்.
சில நோடிகள் மௌனமாக இருந்தேன்.
" IIT இல்லன்னா NIT MIT " என்றேன்.
அசந்து போய்ட்டார்...
" ஆமாங்க IIT சென்னை படித்தேன் , எப்படி சொல்றீங்க..? " என்றார். #padmahazan
கல்வி ஸ்தான அதிபதி ஆட்சி பெற்று சந்திர கேந்திரத்தில் நிற்கும் அவருக்கு புதன் ஆட்சி.
நான்காம் பாவக வலுவே கற்கும் கல்வி மற்றும் கல்வி நிலைய மதிப்பை காட்டும்.
பின்குறிப்பு :
இருளாண்டி institute of technology படிச்சிட்டு கமெண்டில் ஜாதகத்தை போட்டு என்ன படிச்சார் எப்போது படிச்சார் கேட்காதீங்க...
நான்காம் பாவகாதிபதி நன்றாக இருந்தால் எங்கே படித்தாலும் உங்கள் கல்வி உங்களை காப்பாற்றும்.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment