லக்னத்திற்கு நான்காம் வீட்டின் அதிபதி நீசம் பெறுவது , 6 8 மறைந்து ராகு கேது இணைவை பெறும் போது , நான்கில் சனி ராகு செவ்வாய் சூரியன் போன்ற பாவிகள் கூட்டு இணைவில் இருக்கும் போதும் , அர்தாஷ்டம கண்டக சனி காலத்திலும் ,
நிலையான வீடு வாகனம் அமையாது , வீடு மாற்றம் தரும் , வாடகை வீடு மாறுவார்கள்.
சொந்த வீடு அமைந்தாலும் வெளி நாடு தூர ஊர் வேலை தொழில் வருமானம் காரணமாக வெளியே தூரம் போக வைக்கும். வீட்டை கவனிக்க முடியாது.
நிலத்தில் தகராறு அல்லது பராமரிப்பு குறை தரும், வீட்டிலோ உடலிலோ சிறு பிரச்சனை வருவது தொடர்ச்சியாக இருக்கும்.
வாகனம் திருட்டு போவது , பழுதாகி நிற்பது , பயன்படுத்த ஆள் இன்றி ஓர் ஓரமாக கிடக்கும். #padmahazan
சிலர் விபத்து கண்டம் அல்லது எலும்பு முறிவை ஏற்படுத்தவும் தசா புத்தி மற்றும் கோட்சார சனி தரும்.
தவறான பழக்க வழக்கம் உடலை மனதை பலவீனப்படுத்தும், போதைக்கு எளிதாக அடிமைபடுவார்கள். சுகத்திற்கு வரம்பு மீறவும் அதனால் அவபெயர் அல்லது கௌரவம் பாதிக்கும்.
சுக ஸ்தானமோ சுகாதிபதி பலவீனமானவர்கள் மேலே சொன்னவற்றில் கவனமும் பொறுப்பும் தேவை.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment