Tuesday, July 23, 2024

குரு சந்திர யோகம் பலன்கள்

🍁 குரு சந்திர யோகம் 🍁 #hazan 

சந்திரனோடு குரு இணைவது , சந்திரனுக்கு குரு பார்வை இருப்பது போன்றவை குரு சந்திர யோகம் என்பார்கள். 

உங்களது முகம் பிறர் நல்லவராக உங்களை நினைக்க வைக்கும். 

பூரிப்பான முகம் , தேஜஸ் ஆன முக பொழிவை தரும். 

உங்களது முகமே உங்களை நல்லவராக வெளி உலகிற்கு காட்டும் , 

போதுமான பணவரவு இருக்கும். பொருளாதார நிலையில் நன்றாக இருக்க வைக்கும். பிறருக்கு உதவும் மனபான்மை கொண்டவராக ஜாதகர் இருப்பார். 

பணம் நகை மீதான அக்கறை எப்போதும் உண்டு. இவற்றின் மீது தனி கவனம் வைப்பார்கள். தன பண ஆபர சேர்க்கை சுப பாவகங்களில் ஏற்படுத்தி தரும். #padmahazan

மனதில் புது புது ஆக்கபூர்வமான எண்ணமும் சந்தோசமும் ஏற்படும்.

தர்ம குணம் மேலோங்கும், பிறருக்கு உதவும் மனபான்மை இருக்கும்.

மனசும் முகமும் உடலும் பிறரை கவரும் சுப குணம் சுப சரீர உடல் வடிவத்தை கொடுக்கும். 

இங்கே குரு சந்திரனுக்கு வேறு சனி பார்வை இணைவு ராகு கேது இணைவு வர கூடாது. வந்தால் மொத்த சுப பலனும் கெடும்.

சந்திரனது வளர்பிறை தேய்பிறை திதி மற்றும் குரு பகவான் பெறும் நட்பு பகை நீச ஆட்சி உச்ச ஸ்தான பலம் வக்ர கதி ஏற்ப இந்த யோக பலனின் சுப பலன் மிகுதியாகவோ குறைவாகவோ இருக்கும். 

தமிழ்நாட்டை ஆண்ட இரு மறைந்த முதல்வர்களுக்கு இந்த குரு சந்திர யோகம் இருந்தது பல தேர்தலில் வெற்றியை தர காரணம். 

#padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...