👉எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும் சூரிய சந்திர கிரகங்கள் ஒருவர் ஜாதகத்தில் பாதிப்பு அடைந்து இருக்க கூடாது.
👉சூரியன் ~ அதிகாரம் செய்யும் குணம் , ஆதிக்க குணம் , தன்னம்பிக்கை , நேர்மை குணம் , தலைமை தாங்குவது , தான் யார் என்கிற தன் மீதான எண்ணத்தை ஏற்படுத்தும் கிரகம். தந்தை வழி ஆதரவு குலபெருமை சொத்து அரச லாபம் பதவி தரும் காரகத்துவ கிரகம்.
👉சந்திரன் ~ தெளிவான மனநிலை , சந்தோசமான மனசு , ஆரோக்கியமான சாப்பாடு காய்கறி , நீர் சத்து , தேக ஆரோக்கியம், மனசை கட்டுபடுத்தி கொள்வது , முக பொழிவு , தாய் வழி ஆதரவு அந்தஸ்து , கொடுத்து உதவும் குணம் போன்றவற்றை காரகத்துவ பலனை தரும் கிரகம். #padmahazan
⛔️இந்த இரண்டு கிரகமும் ராகு கேது இணைவு , குறிப்பாக கிரகண தோஷம் , சனி இணைவு பார்வை, நீசபங்கம் இல்லாத நீசம் நிலை , சுப கிரக தொடர்பு இன்றி பலவீனமாகி இருப்பது போன்ற நிலையில் சூரிய சந்திரர்கள் பாதிப்பை தருவார்கள்.
👉தன்னம்பிக்கை இல்லாமல் போவது , குழப்பமான மனநிலை , உடல் ஆரோக்கிய பாதிப்பு தாய் தந்தைக்கு பாதிப்பு , தாய் தந்தையால் நிம்மதி இழப்பு , ஏமாற்றும் குணம் , குறுகிய மனம் கொண்டவர் மாதிரியான பலனை தருவார்கள்.
⛔️சூரியனும் சந்திரனும் மாரகாதிபதி பாதகாதிபதி 6 8 அதிபதியாகவே வந்தாலும், முழுமையாக கெட்டால் மேலே சொன்ன காரகத்துவ ரீதியிலான பாதிப்பை தருவார்கள்.
💥💥ஆதிபத்திய பலவீனம் பெற்றாலும் , காரகத்துவ நன்மை தரும் நிலையில் சூரிய சந்திர கிரகங்கள் இருப்பது நல்லது. 💥💥
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment