ஜோதிட ரீதியான பல கட்டுரைகளை இங்கே உங்களுக்காக கொடுத்து உள்ளேன். அனைவரும் படித்து பயன் பெறுங்கள். திருமணம் வேலை தொழில் குழந்தை பாக்கியம் வாகன யோகம் வெளிநாட்டு வாழ்க்கை போன்ற உங்களது எதிர்கால பலன்களை அறிந்து கொள்ள 8300 - 620 - 851 என்ற What's App எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த பதிவை ஜோதிடம் அறிந்த உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு share செய்து மற்றவர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்... பதிவை தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் நன்றிகள்
Sunday, September 25, 2022
7ம் அதிபதி களத்திர ஸ்தான அதிபதி ஜாதகத்தில் எப்படி இருக்க வேண்டும்..? 6 8 12ல் மறையலாமா..? மறைந்தால் என்ன பலன்..?
Friday, September 23, 2022
லக்ன குரு & பாதகாதிபதி குரு
Saturday, September 10, 2022
திருமண யோகம் கணவரால் மேன்மை அடையும் ஜாதகம்
Friday, September 9, 2022
மிதுன லக்னம் _ லக்னாதிபதி நிலை
பங்கு சந்தை கோடி ரூபாய் கடன் ஆன ஜாதகம்
Saturday, September 3, 2022
வெளிநாட்டு யோகம் களத்திர தோசம்
Thursday, September 1, 2022
திருமணம் ஆகாத கிரக அமைப்பு
ராகு அனுகிரகத்தை பெற வைக்கும் உளுந்து பரிகாரம்
🍁 ராகுவின் அனுகிரகத்தை பெற வைக்கும் உளுந்து 🍁 #hazan
💥ராகு பகவானின் இயல்பான குணமே,
💥தனக்கு கிடைத்த பலனை அதிகபடுத்தி மிகைப்படுத்தி
💥ஜாதகருக்கு கொடுப்பது தான்.
❄❄❄பிற கிரகங்கள் ராகு வோடு தொடர்பு பெறும் போது அந்த கிரகங்கள் தர வேண்டிய பலனை அதிகபடியாக ராகு எடுத்து அந்த ஜாதகருக்கு தருவதை இயல்பில் பலரது வாழ்வில் காணலாம். ❄❄❄
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥அதே போல ராகுவிற்கு உகந்த தானியமாக வகைபடுத்தபட்டது, "கருப்பு உளுந்து ". #padmahazan
💥ராகு வை போலவே அவரது தானியமும் ஒரு கைப்பிடி ஊற வைத்து, அரைத்தால் மூன்று பிடி அளவில் உளுந்து மாவு வரும்.
💥பின்னர் புளிக்கும் போது அதை விட அதிகபடியான அளவில் தன்னை அதிகரித்து கொள்ளும்.
💥ஒரு பிடி உளுந்து ஊற வைத்து அரைத்தால் மூன்று பிடி உளுந்து மாவு ஆக வருவதை போலவே ராகுவும் தன் பலன்கள் எதையும் மிகைப்படுத்திதான் தருவார்.
சரி தற்போது விஷயத்திற்கு வருவோம்...
🌟ராகு தசா நடப்பவர்கள்
🌟ராகு பகவானின் அனுகிரகத்தை பெற விரும்புவோர்,
🌟ராகு பகவானின் கடுமையான கெடுபலனில் சிக்கி தவிப்போர்,
🌟ராகு யோக தசாவில் நல்லபலனை அனுபவித்து வருபவர்கள் மேலும் யோக பலனை அனுபவிக்கவும்,
🌟கோட்சார ராகு உங்களை படாய்படுத்தி
🌟 தொழில் தடை,
🌟 குடும்ப பிரச்சனை,
🌟திருமண தடை போன்ற பலனை தரும் நிலையில்,
🌟செவ்வாய் கிழமை அல்லது சனிகிழமை
🌟அருகில் உள்ள நவகிரக ஸ்தலத்தில் ராகு பகவானிற்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி, #padmahazan
🌟உளுந்தினால் செய்யபட்ட உணவு பண்டத்தை நைவேத்யம் செய்து
🌟ராகு காயத்ரி மந்திரத்தை சொல்லி,
🌟மற்றவர்களுடன் பகிந்து கொடுத்து சாப்பிடும் போது,
🌟வழிபாடு செய்ய சுப பலனை பெறலாம், பாதிப்பில் இருப்பவர்கள் விடுபடலாம்.
🌟 தொடர்ந்து 9 வாரங்கள் செய்து வர மாற்றத்தை உணரலாம்
⛔⛔ராசிக்கு 6 8 ல் ராகு இருப்பது, அல்லது 6 8 ம் அதிபதி பார்வை இணைவை பெற்ற ராகுவை பெற்றவர்கள் மேலே சொன்ன உளுந்து சம்மந்தப்பட்ட வழிபாட்டை தவிர்ப்பது நல்லது, துர்க்கை அம்மன் வழிபடுவது இதை விட மேலான நிலையில் நன்மை தரும்.⛔⛔
மற்ற அமைப்பில்,
🌟2 4 5 7 9 10 11 12 ல் ராகு இருந்து, 4 7 10 1 5 9 அதிபதி பார்வை இணைவை பெற்ற ராகு தசா புத்தி நடப்பவர்கள் தாராளமாக உளுந்து நைவேத்யம் செய்து வழிபடலாம். 🌟
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
#padmahazan
யோக ஜாதகம்
🍁 யோக ஜாதகம் 🍁 #hazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
நமது பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் மூத்த வழக்கறிஞர், நம்மிடம் ஒரு வருடத்திற்கு மேலாக மூன்று முறைக்கு மேல் appointment பெற்று பலன் கேட்டு வரும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தனது வாரிசு ஜாதகத்தை அனுப்பி வைத்தாங்க.
" உங்களுக்கு நேரம் இருக்கும் போது பார்த்து சொல்லுங்க அவசரம் இல்லை சொல்லிடாங்க " இன்றைக்கு நேரம் எடுத்து பார்த்து வைத்த ஜாதகத்தை பலன் சொன்னேன்.
( பதிவு நீளம் காரணமாக சுருக்கமாக எழுதி உள்ளேன் )
துலா லக்னம், மீன ராசி , உத்திரட்டாதி நட்சத்திரம்
லக்னாதிபதி நிலை :
லக்னாதிபதியான சுக்ரன் தனித்து லக்ன திரிகோண வீட்டில் எந்தவித பாவ கிரக பார்வை இணைவை இன்றி தனித்து பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது, கடவுள் அனுகிரகம், தந்தை வழி ஆதரவு, நினைத்ததை போராட்டம் இன்றி அடையும் வலுவோடு இருப்பதை காண முடிகிறது. லக்னாதிபதி புதனோடு பரிவர்த்தனை பெறுவதும் மறைமுகமான நீடித்த ஆயுளும் தூர இடங்களில் பண புழக்கம் மணவாழ்க்கை நன்றாக அமையும் என்பதை காட்டுகிறது.
ராசிநாதன் குரு உச்சம் பெற்று ராசியை பார்ப்பதும் யோகம்.
கல்வி நிலை :
படிப்பு காரகன் புதன் பரிவர்த்தனையாகி தற்போது தசா தொடங்கிதாலும்,
படிப்பு ஸ்தானமான இரண்டு நான்காம் இடத்தை உச்ச குரு பார்த்து, ஐந்தாம் அதிபதி சனியை உச்ச குரு பார்த்து, ஒன்பதாம் அதிபதியான புதன் தசா நடப்பதால் கல்வியில் நல்ல முன்னேற்றமும் உயர்நிலை படிப்பில் அதி உன்னத நிலையும் பெற உள்ளார்.
வருமானம் மற்றும் தன நிலை :
6 10 அதிபதி பரிவர்த்தனை யோகத்தில் குரு சந்திரர்கள் அமர்த்து 2 6 10 பாவகத்தை உச்ச குரு பார்ப்பதும் ஐந்தாம் அதிபதியை தன காரகன் உச்ச குரு பார்ப்பதும் , லாபாதிபதி சூரியன் உச்சமாகி இருப்பதும்,
உச்ச குரு பத்தாமிடத்தில் பங்கமின்றி இருந்து ஹம்ச யோகத்தை தருகிறார். #padmahazan
2 6 9 10 11 பாவகங்கள் வலுத்த கிரகநிலை நீடித்த வருமானமும் தனசேர்க்கையும் தரும்.
தொழில் :
லக்ன ராசிக்கு 2 10 ம் இடத்தோடு குரு சனி தொடர்பு கொள்வதால் உங்களை போலவே வழக்கறிஞர் தொழிலில் இருப்பார் என்றும்,
லக்னமும் லக்னாதிபதியும் பாவ கிரக தொடர்பு இன்றி , லக்னத்தை உச்ச சூரியன் பார்வை செய்வதாலும்,
ராசியை பாவ கிரக பார்வை இன்றி உச்ச குரு தொடர்பு கொள்வதால்,
நீதி துறையில் பிற்காலத்தில் ஜட்ஜ் போன்ற உயர்நிலையை பெற போகும் ஜாதகம். தொழில் வழியான கௌரவமும் நல்ல பொருளாதார மேன்மையையும் பெற இருக்கும் நிலை.
நீதி துறையில் உயர்நிலை பெற வேண்டும் என்றால் லக்னத்திற்கு யோக தசாக்கள் வர வேண்டும்,
தற்போது பாக்கியத்தோடு பரிவர்த்தனையாக உள்ள புதன் தசா,
அதனை அடுத்த உச்ச குரு மற்றும் ஜீவனாதிபதி சந்திரனோடு இணைந்த கேது தசா,
அதனை அடுத்து லக்னாதிபதி சுக்ர தசா, #padmahazan
என லக்ன யோக தசாக்கள் வருவது மேன்மையான அமைப்பு.
குரு தசா வந்தால் கடன் நோய் எதிரி பிரச்சனை தரும் இங்கே குரு தசா வராது, தசா வந்தால்தான் பிரச்சனை, கூடுதலாக குரு சாரம் பெற்ற தசாக்களும் வரவில்லை,
1 2 4 5 9 11 வலுப்பெறுவதால் போராட்டம் இன்றி வாழ்வில் முன்னேறும் ஜாதகம்.
இவற்றை எல்லாம் சொல்லிய பிறகு அவர் சொல்கிறார்,
பிரபலமான அந்த ஜோதிடரிடம் இந்த ஜாதகத்தை கொடுத்து பலன் கேட்டேன், " இந்த ஜாதகத்தில் என்ன கேட்க போகுறீங்க..? அதான் எல்லாம் நல்லா இருக்கே" என்று சொல்லி " யாரிடமும் பலன் கேட்காதீங்க, நல்ல ஜாதகம் " என்று சொன்னார் என்றார்.
இருந்தாலும் உங்கள் மீதான நம்பிக்கையில் ஜாதகத்தை கொடுத்து கேட்கிறேன் என்று சொன்னார்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
#padmahazan
ஆறில் குரு ஆட்சி பெற்றால் தொழில் செய்ய முடியுமா..?
கேள்வி : ஆறில் குரு பகவான் ஆட்சி பெற்று இருந்தால் வியாபாரம் தொழில் செய்ய முடியுமா..?
பதில் : லக்னத்திற்கு பத்தில் சூரியனோ அல்லது செவ்வாயோ அல்லது இருவரும் இணைந்து ஆறில் நின்ற குரு பார்வை பெற்று கூடுதலாக லக்னாதிபதி வலுத்து , ஆறில் நின்ற குரு தசா வராத வரை தொழில் வியாபாரம் செய்யும் நிலை உண்டு.
குரு ஆறில் ஆட்சி பெறும் லக்னங்கள் இரண்டு.
கடகத்தின் லக்னாதிபதி சந்திரன் ஒளி அமைப்போடு கேந்திர கோணத்தில் இருக்க, துலா லக்னத்திற்கு சுக்ரன் கேந்திர கோணத்தில் சுப பார்வை இணைவில் ராகு சனி பார்வை இணைவு இல்லாத லக்னாதிபதி வலுத்த நிலை வேண்டும்.
ஜோதிடத்தில் ஒரு விதியை மாற்றி கொடுக்கும் விதி விலக்குகள் ஏராளம் உள்ளன.
🤩 #padmahazan 🤩 #குரு #தொழில் #கடகம் #துலாம்
துலாம் லக்னத்திற்கு லக்னாதிபதி எங்கே இருப்பது நல்லது
🍁 துலாம் லக்னத்திற்கு லக்னாதிபதி எங்கே இருந்தால்..? என்ன பலன்..?🍁 #hazan
ஒவ்வொரு லக்னத்திற்கும் லக்னாதிபதி நின்ற பலனில் தற்போது துலாம் லக்னத்திற்கு லக்னாதிபதி நின்ற பலன்களை தற்போது தெரிந்து கொள்ளுங்கள்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
லக்னாதிபதி சுக்ரன் லக்னத்தில் இருக்க ஜாதகர் வசீகரிக்கும், அழகான தோற்றத்தை கொண்டவர், சுற்றுபுற உடல் தூய்மை அதிகமாக பார்ப்பவர், வாசனை பொருட்கள், அழகு பொருட்கள் அதிகமாக பயன்படுத்துபவர், அதிக எதிர்பாலின வசீயம், கலைகளில் நாட்டம் கொண்டவர்.
2ல் விருச்சிகத்தில் சுக்ரன் வசீகரிக்கும் பேச்சை கொண்டவர், குடும்பத்தில் பெண்கள் அதிகம், தன சேர்க்கை உண்டு, அறுசுவை பிரியர்.
3ல் தனுசு சுக்ரன் இளைய உடன் பிறப்பு, தங்கை மீது பாசம் கொண்டவர், பெயர் புகழ் தைரியம் கொண்டவர், ஸ்நேகிதம் அதிகம், 3ல் மறைவது தாமத வாழ்க்கை துணை தரும்.
4ல் மகரத்தில் சுக் வீடு வண்டி வாகனம் தாயார் வழி ஆதரவு அனைத்தும் யோகமாக அமையும். நிறைவான சுக வாழ்விற்கு யோகம். இவற்றை விரும்பி அனுபவித்து வாழ்வார். லாபமும் ஏராளம். டிராவல்ஸ யோகம் தரும்.
5ல் கும்ப சுக்ரன் பெண் குழந்தை மீது அதிக பாசமுள்ளவர், பெண்களால் மேன்மை நிலை பெறுபவர், வீட்டு பெண்கள் வேலைக்கு போவார்கள். சனி ராகு தொடர்பு கூடாது. #padmahazan
6ல் மீன சுக்ரன், அபரிவிதமான ஆடம்பர செலவு தருவார், கடன் தொல்லை உண்டு, சனி ராகு செவ் தொடர்பு பெற மர்ம நோயால் அவதி, அறுவை சிகிச்சை உண்டு. தனித்து இருக்க சுப கடனும், உயர் உத்தியோகமும் இருக்கும். உச்சமானாலும் வாழ்க்கை போராட்டமே.
7ல் மேஷ சுக்ரன் வாழ்க்கை துணை மேல் பாசம் உண்டு, பெண் வாடிக்கையாளர்கள் நண்பர்கள் அதிகம் உண்டு. ஆயினும் கணவன் மனைவி சிறு சிறு கருத்து வேறுபாட்டை தரும். நில சேர்க்கை உண்டு. செவ் சேர்க்கை கூடாது.
8ல் ரிஷப சுக் வெளிநாடு வெளியூர் வாழும் நிலை, திடீர் பணம் உண்டு, பெண்களால் மேன்மை நிலை, வெளி இடங்களில் மணவாழ்க்கை தரும் அல்லது வாழ்க்கை துணை சுப பிரிவை தரும். சனி ராகு தொடர்பு பெற இல்லறம் கசக்கும். போகம் குறைவு.
9ல் மிதுன சுக் தந்தை வழி ஆதரவு, கடவுள் அனுகிரகம், இறைபக்தி, மனைவி வழி சிறப்பு அனைத்தும் பெறுவார். புதன் சேர்க்கை மாமன் வழி துணை தரும். 9ல் சுக்ரன் யோகம் #padmahazan .
10ல் கடக சுக்ரன் வியாபார தந்திரம் உண்டு, மாமியார் வழி ஆதரவு சிறப்பு, துணிக்கடை, பேன்சி ஸ்டோர் போன்ற பெண்கள் நிறைந்த தொழில் வாய்ப்பு உண்டு.
11ல் சுக்ரன் பெண்களால் முன்னேற்றம் வளர்ச்சி உண்டு, எதையும் லாப நோக்கில் காண்பவர்.
12ல் சுக்ரன் நீசமானாலும் சனி ராகு தொடர்பு கூடாது புதன் சேர்க்கை யோகம். தூர இடங்களில் வாழ்க்கை தரும், அளவான இல்லறம் சுக போகம் இருக்கும்.
சுக்ரன் 1 4 5 9 யோகம், 2 6 10 11ல் சுப பலன் உண்டு, 3 7 8 12ல் சுப பலன் குறைவு.
மேலே சொன்னவை பொதுவான பலன்களே, வீடு கொடுத்த கிரக வலு, நடப்பு தசா புத்தி ஏற்ப பலன் கொஞ்சம் அல்லது முழுமையாக மாறுபடும். பொதுபலன்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
#சுக்ரன் #புதன் #சனி #சூரியன் #சந்திரன் #செவ்வாய் #குரு #ராகு #கேது #துலாம் #ரிஷபம்
🤩 #padmahazan 🤩
சுக்ரன் செவ்வாய் இணைவு
🍁 சுக்ரன் செவ்வாய் 🍁 #hazan
ஆணின் ஜாதகத்தில்
🌟சுக்ரன் செவ்வாயோடு ராசி கட்டத்தில் சேர்க்கை பெறும் போதும்,
🌟செவ்வாயின் 4 7 பார்வை சுக்ரன் மீது இருக்கும் போதும்,
🌟சுக்ரன் மேஷம் விருச்சிகத்தில் இருக்கும் போதும்,
இது போன்ற
💥விளையாட்டு வீராங்கனை,
💥மருத்துவம் பார்க்கும் பெண்,
💥நர்ஸ் டாக்டர்,
💥முரட்டு குணம் கொண்ட பெண்,
💥காவல் பெண்கள், வார்டன்,
💥தைரியமாக செயல்படும் பெண்கள்,
மீதான ஈர்ப்பை சுக்ரன் தருவார்,
" Cute ரா எலேய்..."
🌟அப்படிங்கிற அளவுக்கு தனிபட்ட கவனத்தை செவ்வாய் சம்மந்தப்பட்ட சுக்ரனை பெற்ற ஆண்களின் கவனத்தை இவர்கள் பெறுவார்கள்.
🌟கூடுதலாக ஏழாமிடமும் சம்பந்தபட்ட நிலையில் இவர்களுக்குள் திருமணமும் நடக்கும்.
கூடுதலாக ஆணின் ஜாதகத்தில் லக்னம் லக்னாதிபதி கெட்டால் அந்த மனைவி ஜாதகனை வழிநடத்தி கட்டுபடுத்த முயலுவார்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🤩#padmahazan 🤩
தொழில் மேன்மை தரும் சுக்ர ஓரை
🍁 தொழில் 🍁 #hazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
ரிஷபம் , மிதுனம், கன்னி, துலாம், மகரம் , கும்பம்
லக்னத்தில் பிறந்தவர்கள்
சனி கிழமை சுக்ர ஓரையில்,
வெள்ளி கிழமை சனி ஓரையில்,
தொழில் சார்ந்த முடிவுகளை எடுப்பது,
தொழில் சார்ந்த அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான செயல்களை எடுப்பது,
தொழில் சார்ந்த வருமானத்தை பெருக்கி கொள்ள வழிவகை செய்வது போன்ற நிகழ்வுகளை வைத்து கொள்ளலாம்.
இந்த பதிவிற்கு நீங்கள் தரும் வரவேற்பை பொறுத்து தனிப்பட்ட ஒவ்வொரு லக்னத்திற்கும் குறிப்பிட்ட ஓரை பற்றிய சூட்சமத்தை எழுதுவேன்.
இந்த பதிவு 200 likes தாண்டிட்டா 12 லக்னத்திற்கும் யோகமாக ஓரை குறிப்பை பதிவாக தருகிறேன்.
உங்களது வாழ்வில் சாதகமாக நேரத்தை நீங்களே அறிந்து கொள்ளும் திறவுகோலாக ஒரை இருக்கும்
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🤩#padmahazan 🤩
கன்னி லக்னம் ராசி குணம்
❄🌟🍁கன்னி ராசி அல்லது லக்னம் பொதுவான குணம் 🍁🌟❄ #hazan
💥12 ராசிகளுக்கும் தனித்தனியே ஒவ்வொரு குறிப்பிட்ட குணம் கொண்டு இருப்பார்கள்.
💥ஒரே ராசி அல்லது லக்னத்தில் பிறந்தவர்கள் தங்களுக்குள் உண்டாக புரிதல் அதிகபடியாக இருக்கும் காரணம் அவர்களது பொதுவான குணம் ஓரளவுக்கு ஒற்றுமையாக இருக்கும்.
💥அப்படியான கன்னி ராசி அல்லது லக்னத்தில் பிறந்தவர்களது பொதுவான குணத்தை இந்த பதிவில் காண்போம்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🌟புதனின் குணத்தை வெளிபடுத்தும் கன்னியில் பிறந்தவர்கள்
🌟இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்டவர்கள், புதிய நபர்களோடு பேசும் போது அவர்களை நம்புவதிலும் தனது சுய விபரங்களை தருவதிலும் கவனமாக இருப்பார்கள்.
🌟பேசும் போதே பிறரை எளிதாக எடை போட்டு கொண்டு அதற்கு ஏற்ப பேசி காரியத்தை முடிப்பவர்கள்,
🌟பேசும் போது சாதுர்யமாக பேசி எந்தவிதமான சிக்கலில் மாட்டி கொள்ளாமல் இருக்க பார்ப்பார்கள்.
🌟நண்பர்களுக்கு அதிகபடியான முக்கியத்துவம் தருவார்கள். நண்பர்களை தேர்வு செய்வதிலும் அவர்கள் மீதான நம்பக தன்மை ஏற்ப நட்பு கொள்வார்கள். #padmahazan
🌟உண்மையான நண்பர்களுக்காக உறுதுணையாக இருந்து கடைசி வரை நட்பை வளர்த்து கொள்வார்கள்.
🌟யாரையும் ஏமாற்றினால் இவர்களுக்கு பிடிக்காது, ஆனால் எதிரிகளை சாதுர்யமாக பேசி மறைமுகமாக கவிழ்க்கவும் செய்வார்கள்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🌟தன்னை சுற்றி நடக்கும் சகல நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து யார் யார் எப்படி என்று தெளிவாக மனதில் நிறுத்தி கொள்வார்கள்.
🌟வேலை தொழில் அனைத்திலும் இவர்களுக்கு என தனியென ஒரு நுட்பத்தை கண்டுபிடித்து அல்லது மற்றவர்களை விட வித்தியாசமான அனுகுமுறையில் முன்னேற்றத்தை உருவாக்கி கொள்வார்கள்.
🌟தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வு, சூழல், நபர்களுக்கு ஏற்ப பேசியும் நடந்தும் செயலினை தனக்கு சாதகமாக மாற்றி கொள்வார்கள். #padmahazan
🌟நேரடியாக வாக்குவாதம் அடிதடி சண்டை விஷயங்களில் ஈடுபடுவதை முடிந்தவரை தவிர்க்கவே பார்ப்பார்கள். உதவிக்கு நண்பர்களை வைத்து கொண்டு எப்போதும் பிறரோடு மோதுவார்கள்.
🌟எதிரிகளுக்கு இடையே கலகத்தை ஏற்படுத்தி அவர்களுக்குள் அடித்து கொள்ள வைத்து விடும் ஆளுமை பெற்றவர்கள்.
🌟செய்தி வாசிப்பது, புத்தக படிப்பு , செய்தி கேட்பது, தகவல் பரிமாற்றம் சார்ந்தவற்றில் ஆர்வம் அதிகமாக கொண்டு இருந்து, அன்றைய காலகட்ட நிகழ்வுகளை தெரிந்து கொள்வார்கள்.
🌟பிறர் பேசவிட்டு அதிலிருந்து நுணுக்கங்களை உன்னிப்பாக கவனித்து தெரிந்து கொள்வார்கள்.
🌟பொறுமையான பேச்சில் பிறரை கவரும் விதமாக வார்த்தை பயன்படுத்தி சுற்றி இருப்பவர்களை கவரும் திறமை அதிகபடியாக பெற்றவர்கள். #padmahazan
🌟கஷ்டபட்டு உழைப்பதை விட புத்தியை பயன்படுத்தி உட்கார்ந்த இடத்தில் இருந்தே சம்பாதிப்பதை அதிகபடியாக விரும்புவாங்க.
🌟படிப்பாலேயே சமுதாயம் முன்னேற்றம் பெரும் என்று படிப்பு சார்ந்த விழிப்புணர்வு, பிறருக்கு படிப்பால் உண்டாகும் மேன்மை எடுத்து சொல்லி படிக்க சொல்வார்கள்.
🌟தான் படிக்காவிட்டாலும் வரும் தலைமுறையாவது படிக்கனும் என்ற கொள்கை கொண்டவர்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
❄❄❄கன்னி லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு புதன் ஸ்தலம் சென்று வாழ்வில் மேன்மை நிலையை அடைய வழிபாட்டு செய்யலாம்.❄❄❄
⛔⛔⛔மேலே சொன்னவை பொதுவான குணம். அவரவர்கள் சுய ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசியோடு தொடர்பு கொண்ட பிற கிரகத்தின் இயல்பு ஏற்ப குணத்தில் சில மாற்றங்களை கொண்டு இருக்கும். ⛔ ⛔⛔
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
#padmahazan
ஏழாம் அதிபதி 6 8 12 ல் மறைவது
🍁❄🌟 7 அதிபதி 6 8 12 ல் மறைவு பலன்கள் 🌟❄🍁 #hazan
வேத ஜோதிடத்தில் சொல்லபட்ட 7ம் அதிபதி கிரகம் ஒருவரது
💥 கணவன் / மனைவியின் அந்தஸ்து கௌரவம்
💥கணவன்/ மனைவியின் குணம்
💥கணவன்/ மனைவியால் உண்டாக கூடிய ஆதரவு
💥கணவன்/ மனைவி உடனான இல்லற வாழ்க்கையை குறிக்கும்.
❄மறைவு ஸ்தானங்கள் என்னும் 6 8 12 ல் அந்த 7ம் அதிபதி மறைவதால் உண்டாகும் பலன்களை இந்த பதிவில் காண்போம்.❄
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
⛔6ம் இடத்தில் 7ம் அதிபதி மறைவது ⛔
💥6ம் இடம் கடன் நோய் எதிரியை தரும் பாவகம்,
💥இங்கே ஏழாம் அதிபதி இருப்பது சிறப்பு கிடையாது,
💥ஏழாம் அதிபதி ஏழாம் வீட்டிற்கு 12ல் மறைவதாக அமையும்.
💥ஜாதகரது வாழ்க்கை துணையான கணவரோ மனைவியோ உடல்நல பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கும் நபராக இருப்பார்.
💥வாழ்க்கை துணையால் நோய் சார்ந்த கடன், அல்லது
💥அதிகமாக விரையம் செய்யும் கணவரால்/ மனைவியால் ஜாதகர் கடன் பெற வேண்டி இருக்கும்.
💥ஜாதகரது கணவன்/ மனைவி முற்றிலும் மாறுபட்ட ஜாதகருக்கு எதிராக சிந்தனை செயல்பாடு பேச்சுக்களை கொண்டவராக இருப்பார்கள்.
💥சில நிலைகளில் இத்தகைய அமைப்பு திருமணமான பின் ஜாதகருக்கு வேலை கிடைப்பது அல்லது உத்தியோக உயர்வு தரும்.
💥சில நிலைகளில் வாழ்க்கைத் துணை உடனான பெரும் பிரச்சனை வம்பு வழக்கு பஞ்சாயத்து போன்றவற்றை தரும், பிரிவு தருமா இல்லையா என்பது அந்த ஏழாமதிபதி பெறும் வலுவை பொறுத்தது
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
⛔7ம் அதிபதி 8ல் மறைவது ⛔
💥மறைவு வாழ்க்கை
💥 திடீர் அதிர்ஷ்டம்,
💥கண்டம்,
💥தூர இடங்களில் வசிப்பது, போன்றவற்றை குறிக்கும் இடமான 8ம் இடத்தில் ஏழாமதிபதி இருப்பது...
💥ஜாதகரது வாழ்க்கை துணை அதிகபடியான பணம் பொருள் மீதான ஆசை கொண்டவராக இருப்பார், #padmahazan
💥அதனை சம்பாதிக்கும் பொருட்டாக வெளிநாடு வெளி ஊர்களில் பிரிந்து வாழ்வது அல்லது
💥தூர இடங்களில் தினமும் அலைந்து திரிந்து சம்பாதிக்கும் விதமான கணவரோ மனைவியோ அமைவார்கள்.
💥அதே சமயம் வாழ்க்கை துணைக்கு திடீர் உடல்நல பாதிப்பு,
💥கண்டம்,
💥 தற்காலிக / நிரந்தர பிரிவினால் உண்டாக கூடிய அதிகபடியான மன அழுத்தம்,
💥வாழ்க்கை துணை பற்றி மாறுபட்ட சந்தேக குணம், போன்ற காரணத்தால்
💥ஜாதகரது மனம் அதிகபடியான கவலையை பெறும்.
💥சில நிலைகளில் வாழ்க்கை துணையின் இன்சூரன்ஸ்,
💥பங்கு வர்த்தக முதலீடு தொகை,
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥சேமிப்பு பணம்
💥ஜீவனாம்சம் ஜாதகருக்கு கிடைக்கும்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
⛔7ம் அதிபதி 12ல் மறைவது ⛔
🦋மூன்பு சொன்ன பலன்களின் கூட்டு பலன் இங்கே நடக்கும்...🦋 #padmahazan
💥வாழ்க்கை துணை நோய்வாய்பட்டவர்,
💥வாழ்க்கை துணை அதிகபடியான விரையம் அல்லது நஷ்டங்களை அடைந்து,
💥அதை ஜாதகர் அடைக்கும் விதமாக வாழ்க்கை துணை கடனை ஜாதகர் தலையில் கட்டி விடுவார்.
💥வாழ்க்கை துணை தூர இடங்களில் வசித்தாலும் அதனால் உண்டாகும் பணம் கடனில் கரைவது,
💥அதிகபடியான செலவால் செல்வ சேர்க்கை இல்லாமல் போவதும் நடக்கும்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🌟மேலே சொன்ன பலன் அனைவருக்கும் அப்படியே நடக்காது, அவரவர்கள் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி 6 8 12ல் பெறும் பகை,சம, நட்பு, ஆட்சி போன்ற வலு ஏற்ப,
பிற கிரகங்கள் பார்வை இணைவை பொறுத்து பலனில் மாற்றம் இருக்கும். 🌟
❄பொதுவாக ஏழாம் அதிபதி 6 8 12ல் மறைவது சிறப்பு கிடையாது, வாழ்க்கை துணை வழியான ஏதாவது ஒரு பாதிப்பை கண்டிப்பாக கொடுக்கும், அதற்கு ஈடுகட்டும் விதமாக பொருளோ பணமோ வேறு விதமான லாபத்தை தரும்.❄
🌟🌟🌟ஏழாம் அதிபதி 3 11 , 4 10, 5 9 , இடங்களில் சுப அமைப்பில் இருப்பது நல்லது. 🌟🌟🌟
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
#padmahazan
பயணங்களும் பாவகங்களும்
🍁 பயணங்களும் பாவகங்களும் 🍁 #hazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
மூன்றாம் இடம்
🌞🌞🌞🌞🌞🌞
( local mini bus driver போன்ற நிலை)
நீங்கள் உங்கள் ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்து, அலைவது போன்ற பயணங்களை குறிப்பது மூன்றாம் இடம்.
சில நிமிடங்களில் நகரும் பயணம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒன்பதாம் இடம்
🌞🌞🌞🌞🌞🌞🌞
( Point to point bus driver போன்ற நிலை )
மாவட்டம் விட்டு மாவட்டம் மாநிலம் விட்டு மாநிலம் மாறி பயணம் செய்வது ஓன்பதாம் இடம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எட்டாம் இடம்
🌞🌞🌞🌞🌞
ஒரே பயணம், மிக நீண்ட தூர பயணம் , ஒரே ஊரை இலக்காக கொண்ட பயணம்,
சென்னை விமான நிலையத்தில் இருந்து அஸ்ஸாம் கவுகாத்தி செல்கிறார், மூன்று வருடம் இருந்து மீண்டும் வருகிறார்,
இதை எட்டாம் இடம் குறிக்கும். #padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பன்னிரண்டாம் இடம்
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
பல இலக்குகளை கொண்ட பயணம், ஊர் ஊராக நாடு நாடாக மாறி மாறி அமையும் தொடர் பயணம்,
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி டெல்லி செல்கிறார் அங்கு மூன்று நாள் தங்குகிறார், மீண்டும் அங்கிருந்து சிட்னி ஆஸ்திரேலியா கிளம்புகிறார், அங்கு ஒரு மூனு மாதம் தங்குகிறார், மீண்டும் லண்டன் போகிறார் அங்கு ஒரு மூன்று மாதம் தங்குகிறார்... அப்படியே உலகம் அல்லது மாநிலத்தை சுற்றுகிறார்,
இதை 12ம் இடம் குறிக்கும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
#padmahazan
ஜோதிடர் ஆக முடியுமா..? ஜோதிடம் பார்க்க முடியுமா..?
🍁 புதன் வலு பெற்ற அனைவருக்குமே ஜோதிடம் தெரிய வருமா..? ஜோதிடர் ஆக முடியுமா..? 🍁 #hazan
ஜோதிடத்தை குறிப்பவர் புதன். கணிதம், கணிப்பவன், கணிதன் என்று அழைக்கபடுபவர் புதன். அப்படி "புதன் வலு பெற்றால் அவரது காரகமான ஜோதிடத்தை அனைவருக்கும் தந்து விடுவாரா புதன்..?" அப்படினு கேள்வியை எழுப்பினால்.
"நிச்சயமாக இல்லை" என்றே பதில் இருக்கும்.
புதன் வலுத்தால் அவரது காரகம் கிடைக்கும் ஆனால் நடைமுறையில் இருக்கும் தசா புத்தி ஏற்பவே கிடைக்கும்.
புதன் முதன்மை வலுவோடு ஜாதகத்தில் இருந்து எட்டாமிடம் சம்மந்தப்பட்ட தசா நடக்க ஜோதிடம் astrology ஒருவருக்கு வரும். #padmahazan
ஐந்து, ஒன்பதாம் அதிபதி தசா நடந்தால் maths, physics, accounts, auditing படித்து வேலை அல்லது தொழில் அமையும்.
10 இடம் சம்மந்தப்பட்ட தசா நடந்தால் வியாபாரி, ஒரு வாங்கி விலை ஏற்றி விற்கும் தரகு தொழில் அமையும்.
3ம் இடம் சம்மந்தப்பட்ட தசா நடந்தால் post man, clerk, post office, news media, tele communication, browsing centre போன்ற வேலை தொழில் அமையும். இன்னும் நிறைய உண்டு. நடப்பு தசா பொறுத்து அமையும்.
மேலே சொன்னவை நடக்க ஜாதகத்தில் புதனே முதன்மை வலுவான கிரகமாக இருக்க வேண்டும், 10ம் அதிபதி இதற்கு துணை நிற்ப்பார்.
#புதன் #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம்
🤩 #padmahazan 🤩
சுக்ர ஓரை
🌟 🍁 திருமணம் தொழில் காதல் முன்னேற்றத்தை தரும் சுக்ர ஓரை 🍁🌟 #hazan
🌟🌟சுக்ர ஓரை என்பது சுப ஓரை. சுப ஓரையில் செய்யும் நிகழ்வுகள் எந்தவிதமான பிரச்சனைகளும், தடை , தாமதம் இன்றி சாதகமாக பாதிப்பு இன்றி முடியும்.🌟🌟
❄சுக்ர ஓரையில் ❄
🌟திருமண மண்டபம் புக் செய்வதற்கு, வீடு தேடி சென்று வரன் பார்க்க பெண் பார்ப்பது, திருமணத்திற்கான பட்டு துணி, புடவை போன்ற திருமணம் சார்ந்த சுப நிகழ்வுகளை செய்யலாம்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🌟திருமண வயதில் உள்ள 22 முதல் 32 வயதில் உள்ளவர்கள் சுக்ர வழிபாடு, மகா லெக்ஷ்மி வழிபாடு, வெள்ளீஷ்வரர் வழிபாடுகளை செய்யும் போது திருமணத் தடை விலகி, காரியம் கை கூடும்.
🌟திருமணமாகி கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு கொண்டவர்கள், அதனால் பிரிந்து இருப்பவர்கள், சண்டை சச்சரவு காரணமாக பேச்சு வார்த்தை இல்லாதவர்கள் சுக்ர ஓரையில் சமாதானம் பேசுவது, அனுசரித்து போகும் நிலையில் பிரச்சனை பிரிவு சுமூகமாக முடியும்.
🌟கணவரை மனைவியை பிரிந்தவர்கள் சுக்ர ஓரையில் தேடி சென்று பார்ப்பது போன்ற நிலையில் சேர்ந்து வாழ வழி கிடைக்கும்.
🌟காதல் விஷயத்தை காதலனிடமோ, காதலியிடமோ அல்லது வீட்டிலோ சொல்லும் சூழலில் இருப்பவர்கள் சுக்ர ஓரையில் வீட்டிலோ அந்த ஆணிடமோ பெண்ணிடமோ சொல்லும் போது அது சாதகமாக அல்லது பெரிய பிரச்சனையாக மாறாமல் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். #padmahazan
🌟காதல் பற்றி வீட்டில் பேச சுக்ர ஓரை ஏற்ற காலம்.
🌟காதலர்களிடையே உண்டான ஈகோ பிரச்சனை முடிவிற்கு கொண்டு வர சுக்ர ஓரையில் பேசும் பேசலாம்.
🌟வண்டி வாகனம் புதிதாக வாங்கும் போது அல்லது சர்வீஸ் விட்டு எடுக்கும் போது சுக்ர ஓரையில் வாங்கும் போது வாகன யோகம் வாகனம் வந்த பிறகு ஏற்றம் தரும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🌟புத்தாடைகள், வெள்ளி நகைகள், வாங்குவதற்கு ஏற்றது சுக்ர ஓரை.
🌟சினிமாவில் வாய்ப்பு கேட்பவர்கள், சினிமாவில் தனது திறமையை வெளிபடுத்தி தனக்கு என ஓரிடத்தை பெற ஆர்வம் கொண்டவர்கள் சுக்ர ஓரையில் முயற்சிக்கலாம்.
🌟பட்டு துணி தொழில், ஜவுளி தொழில், டிராவல்ஸ் வைத்து இருப்பவர்கள், டைலரிங் தொழில் செய்பவர்கள் தொழில் தொடங்க தங்களது தொழில் சார்ந்த முடிவுகளை எடுக்க வேலை கேட்க ஏற்றமான ஓரை. #padmahazan
🌟பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை வாங்கி வைத்து விற்கும் தொழில் தொடங்க நல்ல முன்னேற்றத்தை தரும்.
🌟சுக்ரன் பகை நீசம் பெற்று சனி செவ்வாய் ராகு கேது இணைவில் இருப்பவர்களும்
🌟சுக்ர தோசம் பெற்றவர்களும் இந்த ஓரையில் வழிபாடுகள் மேற்கொள்ள நன்மை.
⛔ஞாயிறு திங்கள் செவ்வாய் வியாழன் கிழமைகளில் வரும் சுக்ர ஓரையை விட புதன் வெள்ளி சனி கிழமைகளில் வரும் சுக்ர ஓரை கொஞ்சம் கூடுதலான நன்மை தரும்.⛔
காலண்டர், பஞ்சாங்கம் போன்றவற்றில் ஓரை அட்டவணை இருக்கும் அதை பயன்படுத்தி எப்போது எந்த ஓரை என்பதை அறியலாம். இருப்பினும் ஓரை சூரிய உதயத்தை வைத்து அறிவதால் கொஞ்சம் தோராயமாக அவற்றில் இருக்கும்.
ஜோதிட சாப்ட்வேர்களில் உங்களது ஊர் பதிவிட்டு ஓரை காணும் போது சரியான நேரத்தை காணலாம்.
அனைவரது ஜாதகத்தில் உள்ள சுக்ரன் இருக்கும் வலு பிற கிரக பார்வை இணைவை பொறுத்து உங்களுக்கான பலன் அமையும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
அவயோக ராகு தசா
🌟🍁 அவயோக ராகு தசா 🍁🌟 #hazan
( அனைவரும் படிக்க வேண்டிய பதிவு )
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
ராகுவை போல கொடுப்பார் இல்லை, கேதுவை போல கெடுப்பார் இல்லை என்று பழமொழி சொல்லபட்டாலும்,
அனைவருக்கும் ராகு கொடுப்பது இல்லை, அவரவர்கள் ஜாதகத்தில்
💥ராகு இருக்கும் ராசி ,
💥ராகு பெறும் லக்ன சுபர்/ அசுபர் பார்வை இணைவு ,
💥ராகு பெறும் இயற்கை சுபர் / பாவி பார்வை இணைவை பொறுத்தும்
💥ராகு இருக்கும் பாவகம் பொறுத்தும்
யோகத்தையோ அல்லது அவ யோக கெடுபலனையோ ராகு தருவார். #padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🌿ஸ்திர வீடான கும்பத்தில் ராகு இருப்பது அவ்வளவு சிறப்பாக சொல்லபடவில்லை, சனியின் ஸ்திர வீடான கும்பத்தில் ராகு இருக்கும் போது ஒருவரது உடல் உழைப்பை, அழுக்கு சூழ்ந்த இடத்தை, அதிகபடியான நிம்மதியற்ற இறுக்கமான மனநிலையை தரும் நிகழ்வுகளை தரும் பலனை அதிகபடியாக தருவார்.
🌿மேலே சொன்ன பலனை ராகு தர கூடாது என்னும் நிலை கும்ப ராகுவை குருவோ சுக்ரனோ இணைந்து பார்க்கும் போது அசுப பலனை ராகு தருவது இல்லை.
🌿⛔எப்போது ராகுவிற்கு 6 மற்றும் 8ம் அதிபதிகளின் பார்வை மற்றும் இணைவு கிடைக்க பெறுகிறதோ அப்போது அந்த ராகு தன் தசாவில், ⛔🌿
🌟கடன் பிரச்சனை,
🌟தீராத மன குழப்பம்,
🌟ஆயுள் கண்டம்,
🌟எதிரி தொல்லை,
🌟நோயால் உடல் பாதிப்பது,
🌟எப்போதும் தெளிவில்லாத மனம் தடுமாறுவது,
🌟தூர இடங்களில் கஷ்டபடுவது,
🌟அதிகபடியான உழைப்பில் குறைந்த ஊதியம் அல்லது வருமானம் பெறுவது
🌟பண புழக்க தடையை தருவது
🌟நிலம் சார்ந்த நஷ்டம் தருவது
போன்ற ஆகாத பலனை ராகு தருவார்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள்.
( பதிவின் நீளம் கருத்தில் கொண்டு சுருக்கமாக எழுதி உள்ளேன்.)
❄❄ஜாதகர் கடக லக்னம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.❄❄
🦋2005 முதல் ராகு தசா தற்போது ராகு தசாவில் செவ்வாய் புத்தி நடப்பில் உள்ளது.
🌈கடக லக்னத்திற்கு ஆகாத சனியின் 8 ம் வீட்டில் ராகு நின்று, தனக்கு ஆகாத செவ்வாயோடு இணைந்து 6ல் நின்ற 8ம் அதிபதி பார்வை பெற்று பாவத்துவ 6 8 ம் அதிபதிகளோடு தொடர்பு பெற்ற ராகு தசா...
🌈அதே அமைப்பு கடக ராசிக்கு 6ல் நின்ற ராகு 6ம் அதிபதி சனியின் மூன்றாம் பார்வை மற்றும் 8ம் அதிபதி செவ்வாய் இணைவில் உள்ளது.
🌈லக்னம் மற்றும் ராசி 2 அமைப்பிலும் ராகு 6 மற்றும் 8 மிட தொடர்பு பெற்று உள்ளது.
🌈ராகு தசா ஆரம்பித்தது முதலே நிறைய பண பிரச்சனை , விவசாய நிலம் சார்ந்த விரையம், வெளிநாட்டு வேலை சென்று பின்பு அதில் இருந்து வந்து சொந்த ஊரில் உழைப்பு வீணாகி பணம் விரையமாகி விவசாயம் லாபம் தராதபடியான கடனை கொடுத்தது ராகு.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🌈ராகு விற்கு அடுத்த குரு தசா இவருக்கு 10ம் இடத்தில் இருந்து லாபாதிபதி சுக்ரன் சாரம் பெற்று தன ஸ்தானமான 2மிடம் வீடு வண்டி நிலம் சார்ந்த 4ம் இடம் , உத்தியோகத்தை தரும் 6ம் இடங்களை பார்ப்பது நன்மை. #padmahazan
🌟தன காரகன் குரு பாவர்கள் இணைவு பார்வை இன்றி சுப நிலையில் பத்தில் இருப்பது வெளிநாடு போன்ற தூர இடங்களில் வேலையை கொடுத்து நல்ல குடும்ப வாழ்வை பொருளாதார முன்னேற்றத்தை தரும் நிலையில் உள்ளது.
🌟குரு தசா ஆறாம் வீட்டை பார்வை செய்வதால் குரு தசா தற்போது ராகு தசா கொடுத்த கடனை அடைத்து பிற்பகுதி குரு தசா நல்ல மேம்பட்ட பொருளாதார மேன்மை தரும்.
🌟ஆறாம் வீட்டோடு தொடர்பு பெற்ற குரு தசா வர கூடாது எனினும் நடப்பில் உள்ள ராகு தசாவிற்கு அந்த குரு தசா பரவாயில்லை என்ற விதத்தில் பலன் இருக்கும்.
🌟இதே ராகு விற்கு 6 8 தொடர்பு இருந்தாலும் அந்த 6 8 ம் அதிபதிகள் குரு சுக்ரன் புதன் வளர்பிறை சந்திரனாகி இருக்கும் போது கூட ஓரளவு நல்ல பலனை தரும்.
⛔⛔ராகு சனி மற்றும் செவ்வாய் தொடர்பு பெறுவது கூடாது, மேலும் 6 8 தொடர்பில் இருக்கவும் கூடாது. கெடுபலனை கூடுதலாக தன் தசாவில் தருவார். ⛔⛔
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
#padmahazan
நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?
🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...
-
🍁 விதியை மாற்ற முடியுமா..? 🍁 #hazan பலருக்கு இந்த பதிவு கசக்கும், கொஞ்சம் சர்க்கரையை வாயில் போட்டு கொண்டு படியுங்கள். விதியை யாராலும் மா...
-
🍁 8ல் குரு மறையலாமா..? பணத்தை தருவாரா..? ஆண் வாரிசை கெடுப்பாரா..? 🍁 #hazan கௌரவம் , அந்தஸ்து , சமுதாயத்தில் மதிப்பாக வைத்து இருப்பது, த...
-
❄🌟🍁கன்னி ராசி அல்லது லக்னம் பொதுவான குணம் 🍁🌟❄ #hazan 💥12 ராசிகளுக்கும் தனித்தனியே ஒவ்வொரு குறிப்பிட்ட குணம் கொண்டு இருப்பார்கள். 💥ஒ...