🍁 வாக்கை துணையை குறிக்கும் 7ம் அதிபதி எப்படி இருக்க வேண்டும்..? 6 8 12 ல் மறையலாமா..? மறைந்தால் பலன் என்ன..? 🍁 #hazan
💥மறைவு ஸ்தானங்களான 6 8 12 பாவகங்கள் எப்போதும் ஜாதகருக்கு ஒரு விதமான கசப்பான அனுபவத்தையோ , அல்லது ஒரு குறையையோ அல்லது பாதிப்பையோ கொடுக்கவே செய்யும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🦋ஆறாம் இடம் கடன் நோய் வம்பு பிரச்சனை பொருளாதார பிரச்சனை போன்றவற்றையும்,
🦋எட்டாமிடம் உறவுகளை பிரிப்பது, தூர இடங்களுக்கு நகர்த்தி வாழ வைப்பது அதனால் பண சேர்க்கை தருவது, கடுமையான மன நிம்மதியற்ற பாதிப்பை தருவது போன்ற பலனையும்
🦋12மிடம் இழப்புகளையும் பிரிவுகளையும் விரையங்களையும் கொடுக்கும்.
⛔இத்தகைய ஒரு சாதகமற்ற அமைப்பில் ஏழாம் அதிபதியான களத்திர ஸ்தான அதிபசி வாழ்க்கை துணையை குறிக்கும் கிரகம் 6 8 12ல் மறைவது நல்ல அமைப்பு கிடையாது. ⛔
🌿கடந்த வாரத்தில் United States ல் வசித்து வரும் ஒருவர் தனது மற்றும் மனைவி ஜாதகத்தை அனுப்பி பலன் கேட்டார்,
♦️♦️திருமணம் ஆனது முதல் பெரும்பாலான நாட்கள் நான் வெளிநாட்டில்தான் உள்ளேன், மனைவி தாய்நாட்டில் உள்ளார், நான் US வந்து விட்டேன், எப்போது தாய்நாடு திரும்புவேன், மனைவிக்கு விசா கிடைக்கவில்லை எப்போது கிடைக்கும் என்று கேட்டார்.
( அவரது தனிப்பட்ட கேள்விகளையும் அவருக்கு சொன்ன பதிலையும் இங்கே எழுத போவது இல்லை ) .
🌟கணவருக்கு கன்னி லக்னம், இரண்டில் ஏழாமதிபதி குரு துலாத்தில், தற்போது குரு தசா,
🌟கணவருக்கு மனைவியை குறிக்கும் லக்னத்திற்கு ஏழாமதிபதி குரு ஏழாம் வீட்டிற்கு 8ல் மறைந்து, 2ல் இருக்கும் நிலை,
🌟கணவருக்கு ராசி ரிஷப ராசி, ராசிக்கு ஏழாமதிபதி செவ்வாய் ராசிக்கு எட்டில் தனுசில் மறைவு,
🌟மனைவிக்கு துலா லக்னம், கணவரை குறிக்கும் ஏழாமதிபதி செவ்வாய் 6ல் மீனத்தில் உள்ளார். ஏழாம் வீட்டிற்கு 12ல் மறைந்து உள்ளார்,
🌟மனைவிக்கு கடக ராசி, ராசிக்கு ஏழாமதிபதி ராசிக்கு எட்டில் கும்பத்தில் மறைவு,
🌟கணவன் மனைவி இருவருக்கும் லக்னம் மற்றும் ராசிக்கு ஏழாம் அதிபதிகள் அந்த லக்ன ராசிக்கு 6 8 12ல் மறைவது, அல்லது 7ம் வீட்டிற்கு 6 8 12ல் மறைவது சிறப்பான அமைப்பு கிடையாது.
🌿🌿🌿அப்படி 6 8 12ல் மறைந்தாலும் சுப தொடர்போடு மறையும் போது🌿🌿🌿
🦋கணவன் மனைவி இடையான தொழில் வேலை காரணமாக சுப பிரிவு
🦋கணவன் அல்லது மனைவி பிரிந்து தூர இடங்கள் சென்று சம்பாதிப்பது,
🦋மாறுபட்ட குணங்களைக் கொண்ட துணையோடு பிரச்சனைகளோடு ஒன்றாக வாழ்வது,
🦋கணவன் அல்லது மனைவியின் சேமிப்பு பணம் உயில் பென்ஷன் போன்ற பணம் சார்ந்த அதிர்ஷ்டம் தரும். #padmahazan
(கணவன் வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பும் பெண்களுக்கு ஏழாம் அதிபதி மறைந்து குருவின் பார்வையில் இருக்கும், குரு பார்வை வலு மறைந்த ஏழாம் அதிபதி வலு ஏற்ப லட்சமா..? ஆயிரமா..? என்று பண மதிப்பை காணலாம். )
🌿🌿🌿அதே போல பாவ கிரக தொடர்போடு 6 8 12ல் 7ம் அதிபதி மறைய, 🌿🌿🌿
⛔கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக வம்பு வழக்கு பஞ்சாயத்து நடப்பது,
⛔கணவன் மனைவி இடையே வழக்கு உண்டாகி நிம்மதி இழப்பது
⛔கணவன் அல்லது மனைவிக்கு நோய் உண்டாகி செலவுகளில் பணம் கரைவது,
⛔கணவன் மனைவி இடையே விவாகரத்து,
⛔கணவன் மனைவி பிரிந்து வாழ்வது போன்ற அசுப பலனையும் தரும்.
🌈பொதுவாக 7ம் அதிபதி குரு சுக்ர புதன் பார்வை இணைவை பெற்று, பாவ கிரகங்களான சனி செவ்வாய் ஆக 7ம் அதிபதி இருக்க,
🌈3 11ல் நட்பு வீடுகளில் இருப்பது,
🌈4 10 ல் நட்பு சம வீடுகளில் இருப்பது,
🌈சுப கிரகங்களான குரு சுக்ரன் புதன் வளர்பிறை சந்திரனாக ஏழாம் அதிபதி இருக்க, ராகு கேது இணைவு தொடர்பு இன்றி சனி செவ்வாய் பார்வை இன்றி
🌈1 5 9 ல் இருப்பது,
🌈3 7 11ல் இருப்பது போன்றவை நல்லது
⛔ஏழாம் அதிபதி நீசம் பெற்றால் திக் பலம் பெற்று கூடுதலாக நீசபங்கராஜயோகம் பெற்று மிக அதிகபடியான வலுவில் இருக்கும் போது மணவாழ்க்கை சிறப்பை தரும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
(♦️♦️♦️இந்த பதிவை எழுத காரணம், உங்கள் வீட்டில் அல்லது தெரிந்தவர்களுக்கு 6 8 12ல் ஏழாம் அதிபதி மறைந்தால் அதற்கு ஏற்ப பொருந்தக்கூடிய ஜாதகத்தை தேர்தெடுத்து இணைப்பது,
கணவர் 20 வருடம் வெளிநாட்டில் வாழ்ந்தால் வர இருக்கும் மனைவியும் 20 வருடம் வெளிநாட்டில் வாழும் யோகம் உள்ளபடியான ஜாதகத்தை தேர்ந்தெடுக்கும் விதமான விழிப்புணர்வு பதிவாக இருக்கும் என்பதற்காக♦️♦️♦️)
No comments:
Post a Comment