Thursday, September 1, 2022

யோக ஜாதகம்

 🍁 யோக ஜாதகம் 🍁 #hazan 


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


நமது பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் மூத்த வழக்கறிஞர், நம்மிடம் ஒரு வருடத்திற்கு மேலாக மூன்று முறைக்கு மேல் appointment பெற்று பலன் கேட்டு வரும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தனது வாரிசு ஜாதகத்தை அனுப்பி வைத்தாங்க.


" உங்களுக்கு நேரம் இருக்கும் போது பார்த்து சொல்லுங்க அவசரம் இல்லை சொல்லிடாங்க " இன்றைக்கு நேரம் எடுத்து பார்த்து வைத்த ஜாதகத்தை பலன் சொன்னேன். 


( பதிவு நீளம் காரணமாக சுருக்கமாக எழுதி உள்ளேன் )




துலா லக்னம், மீன ராசி , உத்திரட்டாதி நட்சத்திரம்


லக்னாதிபதி நிலை : 


லக்னாதிபதியான சுக்ரன் தனித்து லக்ன திரிகோண வீட்டில் எந்தவித பாவ கிரக பார்வை இணைவை இன்றி தனித்து பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது, கடவுள் அனுகிரகம், தந்தை வழி ஆதரவு, நினைத்ததை போராட்டம் இன்றி அடையும் வலுவோடு இருப்பதை காண முடிகிறது. லக்னாதிபதி புதனோடு பரிவர்த்தனை பெறுவதும் மறைமுகமான நீடித்த ஆயுளும் தூர இடங்களில் பண புழக்கம் மணவாழ்க்கை நன்றாக அமையும் என்பதை காட்டுகிறது. 


ராசிநாதன் குரு உச்சம் பெற்று ராசியை பார்ப்பதும் யோகம்.


கல்வி நிலை : 


படிப்பு காரகன் புதன் பரிவர்த்தனையாகி தற்போது தசா தொடங்கிதாலும், 


படிப்பு ஸ்தானமான இரண்டு நான்காம் இடத்தை உச்ச குரு பார்த்து, ஐந்தாம் அதிபதி சனியை உச்ச குரு பார்த்து, ஒன்பதாம் அதிபதியான புதன் தசா நடப்பதால் கல்வியில் நல்ல முன்னேற்றமும் உயர்நிலை படிப்பில் அதி உன்னத நிலையும் பெற உள்ளார். 


வருமானம் மற்றும் தன நிலை : 


6 10 அதிபதி பரிவர்த்தனை யோகத்தில் குரு சந்திரர்கள் அமர்த்து 2 6 10 பாவகத்தை உச்ச குரு பார்ப்பதும் ஐந்தாம் அதிபதியை தன காரகன் உச்ச குரு பார்ப்பதும் , லாபாதிபதி சூரியன் உச்சமாகி இருப்பதும், 


உச்ச குரு பத்தாமிடத்தில் பங்கமின்றி இருந்து ஹம்ச யோகத்தை தருகிறார். #padmahazan 


2 6 9 10 11 பாவகங்கள் வலுத்த கிரகநிலை நீடித்த வருமானமும் தனசேர்க்கையும் தரும்.


தொழில் : 


லக்ன ராசிக்கு 2 10 ம் இடத்தோடு குரு சனி தொடர்பு கொள்வதால் உங்களை போலவே வழக்கறிஞர் தொழிலில் இருப்பார் என்றும், 


லக்னமும் லக்னாதிபதியும் பாவ கிரக தொடர்பு இன்றி , லக்னத்தை உச்ச சூரியன் பார்வை செய்வதாலும், 


ராசியை பாவ கிரக பார்வை இன்றி உச்ச குரு தொடர்பு கொள்வதால், 


நீதி துறையில் பிற்காலத்தில் ஜட்ஜ் போன்ற உயர்நிலையை பெற போகும் ஜாதகம். தொழில் வழியான கௌரவமும் நல்ல பொருளாதார மேன்மையையும் பெற இருக்கும் நிலை.


நீதி துறையில் உயர்நிலை பெற வேண்டும் என்றால் லக்னத்திற்கு யோக தசாக்கள் வர வேண்டும், 


தற்போது பாக்கியத்தோடு பரிவர்த்தனையாக உள்ள புதன் தசா, 


அதனை அடுத்த உச்ச குரு மற்றும் ஜீவனாதிபதி சந்திரனோடு இணைந்த கேது தசா, 


அதனை அடுத்து லக்னாதிபதி சுக்ர தசா, #padmahazan 


என லக்ன யோக தசாக்கள் வருவது மேன்மையான அமைப்பு. 


குரு தசா வந்தால் கடன் நோய் எதிரி பிரச்சனை தரும் இங்கே குரு தசா வராது, தசா வந்தால்தான் பிரச்சனை, கூடுதலாக குரு சாரம் பெற்ற தசாக்களும் வரவில்லை, 


1 2 4 5 9 11 வலுப்பெறுவதால் போராட்டம் இன்றி வாழ்வில் முன்னேறும் ஜாதகம். 


இவற்றை எல்லாம் சொல்லிய பிறகு அவர் சொல்கிறார், 


பிரபலமான அந்த ஜோதிடரிடம் இந்த ஜாதகத்தை கொடுத்து பலன் கேட்டேன், " இந்த ஜாதகத்தில் என்ன கேட்க போகுறீங்க..? அதான் எல்லாம் நல்லா இருக்கே" என்று சொல்லி " யாரிடமும் பலன் கேட்காதீங்க, நல்ல ஜாதகம் " என்று சொன்னார் என்றார்.


இருந்தாலும் உங்கள் மீதான நம்பிக்கையில் ஜாதகத்தை கொடுத்து கேட்கிறேன் என்று சொன்னார். 


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...