Saturday, September 3, 2022

வெளிநாட்டு யோகம் களத்திர தோசம்

🍁 வெளிநாட்டு யோகம் &  சனி செவ்வாய் களத்திர தோசம் 🍁  #hazan 

இரண்டு நாட்களுக்கு முன்பாக நம்மிடம் பலன் கேட்ட ஒரு நபரின் ஜாதகம். இதற்கு முன்பு மூன்று நான்கு முறை பலன் கேட்டு உள்ளார்.

வெளிநாடுகளில் தூர இடங்களில் வாழ்க்கை அமையும் போக யோசிக்க வேண்டாம் என்று சொல்லி சில மாதங்களில் வெளிநாடு சென்று தற்போது ஒரு வளைகுடா நாட்டில்  உள்ளார். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

என் பதிவுகள் அனைத்தும் பெரும்பாலும் சுருக்கமாக எழுதுவதே வழக்கம்,  ( இந்த பதிவையும் சுருக்கமாக எழுதவும் முயற்சிக்கிறேன்.) முழுமையாக படியுங்கள் நண்பர்களே...

ஜாதகர் பிறந்தது, 

சிம்ம லக்னம் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம்.


சிம்ம லக்னத்தின் ஜாதகரை குறிக்கும் லக்ன நாயகன் சூரியன் எட்டில் மறைந்து பௌர்ணமி திதியை சற்றே கடந்த முழு ஒளி பொருந்திய பன்னிரண்டாம் அதிபதி பார்வையில் மறைந்து உள்ளார். 

லக்னாதிபதி 8ல் குருவின் வீட்டில் சந்திரன் பார்வையில் மறைந்து எந்தவிதமான பாவகிரக தொடர்பும் இன்றி, 

தன பாவகத்தை பார்வை செய்கிறார், பர தேச வாசத்தை குறிக்கும் 12ம் அதிபதி 2ல் இருப்பதும், தூர தேச வாழ்வில் ஜாதகர் தனம் பொருள் இட்டுவார் என்பதை கிரக அமைப்பு காட்டுகிறது. 

கிரக அமைப்பு உள்ளது அதற்கு ஏற்ற தசா புத்தி வந்து விட்டதா..?  என்றால் 

எப்போதும் இயங்கி கொண்டே இருக்கும் குணத்தை கொண்ட சர ராசியான துலாத்தில் சிம்ம லக்ன யோக கிரகமான குருவின் தசா நடப்பில் உள்ளது, குரு மற்றொரு தூர தேசம் அந்நிய நபர்களை குறிக்கும் ராகுவின் சுவாதி சாரத்தில் இருக்க, #padmahazan 

சார நாதன் உச்ச ராகுவிற்கு மேற்கு திசையை குறிக்கும் வலுத்த ஆட்சி பலத்தை விட மேலான மூலத்திரிகோண பலம் பெற்று கூடுதலாக திக் பலமும் பெற்ற சனியின் பார்வையில் உள்ளார். வளைகுடா நாட்டிற்கு இவர் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். 

தூர இடங்களில் இருக்கும் வரை நல்ல பண புழக்கமும் போதுமான மன நிம்மதியோடு வாழும் ஜாதக அமைப்பு.

வெளிநாட்டு யோகத்தை பற்றி பேசி விட்டோம் தோசத்தை அடுத்து காண்போம்...

பொதுவாக ஜோதிடத்தில் சனி மற்றும் செவ்வாய் இருவரும் ஒரே பாவகத்தில் இணைவதும், ஒரே பாவகத்தில் இருவரது பார்வையும் இருப்பதும் முழுக்க முழுக்க அந்த பாவகம் கெடும் அந்த பாவகம் வழியாக நாம் அனுபவிக்க வேண்டிய நல்ல கெட்ட பலன்களை அந்த சனி மற்றும் செவ்வாய் கெடுப்பார்கள். 

ஏழாம் இடமான கும்பத்தில் ஆட்சி பலத்தை விட மேலான மூலத்திரிகோண பலத்தோடு திக் பலத்தையும் பெற்று அதிகபடியான அசுர பலத்தோடு சனி பகவான் உள்ளார், இவரோடு தனக்கு ஆகாத செவ்வாய் பகவானும் 10° டிகிரிக்குள் இணைந்து ஏழாம் இடத்தில் கடுமையான தோசத்தை ஏற்படுத்துகின்றனர். 

இருப்பினும் இவர்களோடு இணைந்த புதனும், இந்த இணைவை குரு தனது ஒன்பதாம் பார்வையாக பார்வை செய்வதால் குரு பார்வை தோசத்தை நிவர்த்தி செய்கிறது. #padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

குரு பார்வை பகை பெற்ற ராசியில் உள்ளதால், அவ்வபோது கணவன் மனைவி பிரச்சனை, செவ்வாய் சனி இணைவிற்கே உரித்தான, நிலம் சார்ந்த  வம்பு வழக்கு, சகோதர வழியான மன அழுத்தம், போன்ற பலன்களும் உள்ளது. 

குரு பார்வையும் புதன் இணைவும் இங்கே இல்லாத நிலையில் முழுமையாக திருமண பந்தமே இல்லாத நிலையை கொடுத்து இருக்கும், ஆயினும் குரு பார்வை சுக்ரன் திரிகோண வீட்டில் வர்கோத்தமம் பெறுவதும்

பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான குரு பார்வையில் சனி செவ்வாய் இருப்பது பிரச்சனைகளோடு சில விஷயங்களை தருகிறது.

செவ்வாய் சனி இணைவு இருந்தாலும் இது போன்ற குரு பார்வை குரு இணைவை பெறும் போது குருவின் வலு ஏற்ப கெடுபலன் குறைக்கபடும், 

குரு தசா முழுவதும் நன்றாக தூர இடங்களில் தன பண சேர்க்கை பெற்று வாழும் கிரக அமைப்பு. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...