PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
திருமணம் என்பது கணவன் மனைவி இல்லறம், குழந்தை பிறப்பு, குடும்ப வாழ்க்கை போன்ற மூன்று நிலைகளை அடுத்தடுத்து பெற போகும் நிலை.
கணவன் மனைவி அன்னோன்யம், குழந்தை பிறப்பு, குடும்ப வாழ்க்கை மூன்றில் ஒன்று பலவீனபடும் போது ஜாதகருக்கு மூன்றில் பாதிக்கபட்ட ஒன்று மட்டும் கிடைக்காமல் போகும்.
2 3 5 7 12 இடங்கள் பாதிக்கபடாமல் இருப்பது அவசியம்
கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதக அமைப்பை பாருங்கள்.
ஜாதகர் பிறந்தது, துலாம் லக்னம், மீன ராசி,
இவருக்கு லக்னாதிபதியும் ஏழாம் அதிபதியும் இணைந்து, ஏழில் இருப்பது கணவன் மனைவி இடையேயான நல்ல வாழ்க்கை இருப்பதை காட்டுகிறது. ஆனால் திருமணம் ஆகாத சூழல்...
என்ன காரணம்..? விளக்குகிறேன்.
புத்திர ஸ்தான அதிபதி சனி எட்டில் மறைந்து குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தை சனி பார்த்து, புத்திர ஸ்தானமான 5ம் இடத்தை சனி பார்த்து, நட்பு வலுபெற்ற நிலையோடு உள்ளார்.
லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதி சனி எட்டில் மறைந்து,
ராசிக்கு ஐந்தாம் அதிபதி அமாவசை சந்திரன் ஆக நீச புதனோடு இணைந்து, ராசிக்கு ஐந்தில் கேது அந்த கேதுவிற்கு சனி மற்றும் செவ்வாய் பார்வை....
லக்னம் ராசிக்கு ஐந்தாம் இடம் பலவீனபடுகிறது,
ராசிக்கு ஏழாமதிபதி நீச புதனாகி ராசியில் உள்ளார்.
கடுமையான புத்திர தோசமும் குடும்ப ஸ்தானமும் பாதித்த நிலையில் கிரகங்கள்.
போக சுகத்தை தரும் 12ம் அதிபதியும் நீசமாகி 6ல் இருப்பதும் சாதகமற்ற நிலை.
இவருக்கு இளம் வயதில் சுக்ர தசா வந்தது இருப்பினும் திருமணம் நடத்துவதற்கு பதிலாக சுக்ரன் மாரகாதிபதி செவ்வாயோடு இணைந்து ஆறாம் அதிபதி பார்வை பெற்று இருப்பதால் அடிவயிறு சார்ந்த அறுவை சிகிச்சைகளை கொடுத்து சென்றது.
6 இடத்தில் நீசபுதனோடு அமாவசை கிரக சூரிய சந்திர இணைவு
8 இடத்தில் பாவ கிரகமான சனி
மற்றும் 12 அதிபதி நீசமாகி அமாவசை சந்திரன் மற்றும் அரைபாவரான சூரியன் இணைவில் பாவத்துவமான நிலையில் உள்ளது.
6 8 12 இடங்கள் பாவத்துவமான நிலையில் அறுவை சிகிச்சை, மரண கண்டம், அடிக்கடி மருத்துவமனை செல்வது, உயிர் மீதான பயத்தை சம்மந்தப்பட்ட தசா புத்தியில் தரும்.
சுக்ர தசா பல அறுவை சிகிச்சை களை கொடுத்து, அதற்கு அடுத்த சூரிய சந்திர தசாவும் ஆறாம் இடத்தில் நீச புதன் இணைவில் உள்ளது.
சூரிய சந்திர தசாக்கள் சொந்த தொழிலை முடக்கி கடனை கொடுத்து தொழிலை விட வைத்தது. காரணம் பத்தாம் அதிபதி ஆறில் இருப்பது.
அதற்கு அடுத்த சந்திர தசாவும் தொழில் வேலை இரண்டும் தராதபடி உள்ளது.
ஏழாம் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று குரு பார்வை பெற்றும் ஏன் திருமணம் ஆகாமல் போனது என்ற கேள்வி உங்களுக்கு தோன்றும்..?
செவ்வாயும் சனியும் அடுத்தடுத்த ராசிகளில் இருந்தாலும் 10 டிகிரி உள்ளான நெருங்கிய இணைவில் இருப்பார்கள். அதுவும் ஒரு காரணம்.
கர்மாவின் அடிப்படையிலான பிறப்பில் நடப்பவை அனைத்தும் பூர்வ புண்ணிய பலனின் அடிப்படையிலேயே அனைவருக்கும் அமையும்.
முழு ஜாதகத்தை முழுமையாக சாரம் தசா புத்தி வரை விளக்கினால் பதிவு நீண்டு கொண்டே போகும்.
எளிமையாக பதிவிட்டு உள்ளேன்.
🤩 #padmahazan 🤩
No comments:
Post a Comment