Thursday, September 1, 2022

துலாம் லக்னத்திற்கு லக்னாதிபதி எங்கே இருப்பது நல்லது

 🍁 துலாம் லக்னத்திற்கு லக்னாதிபதி எங்கே இருந்தால்..? என்ன பலன்..?🍁 #hazan 


ஒவ்வொரு லக்னத்திற்கும் லக்னாதிபதி நின்ற பலனில் தற்போது துலாம் லக்னத்திற்கு லக்னாதிபதி நின்ற பலன்களை தற்போது தெரிந்து கொள்ளுங்கள். 


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


லக்னாதிபதி சுக்ரன் லக்னத்தில் இருக்க ஜாதகர் வசீகரிக்கும், அழகான தோற்றத்தை கொண்டவர், சுற்றுபுற உடல் தூய்மை அதிகமாக பார்ப்பவர், வாசனை பொருட்கள், அழகு பொருட்கள் அதிகமாக பயன்படுத்துபவர், அதிக எதிர்பாலின வசீயம், கலைகளில் நாட்டம் கொண்டவர்.


2ல் விருச்சிகத்தில் சுக்ரன் வசீகரிக்கும் பேச்சை கொண்டவர், குடும்பத்தில் பெண்கள் அதிகம், தன சேர்க்கை உண்டு, அறுசுவை பிரியர். 


3ல் தனுசு சுக்ரன் இளைய உடன் பிறப்பு, தங்கை மீது பாசம் கொண்டவர், பெயர் புகழ் தைரியம் கொண்டவர், ஸ்நேகிதம் அதிகம், 3ல் மறைவது தாமத வாழ்க்கை துணை தரும்.


4ல் மகரத்தில் சுக் வீடு வண்டி வாகனம் தாயார் வழி ஆதரவு அனைத்தும் யோகமாக அமையும். நிறைவான சுக வாழ்விற்கு யோகம். இவற்றை விரும்பி அனுபவித்து வாழ்வார். லாபமும் ஏராளம். டிராவல்ஸ யோகம் தரும். 


5ல் கும்ப சுக்ரன் பெண் குழந்தை மீது அதிக பாசமுள்ளவர், பெண்களால் மேன்மை நிலை பெறுபவர், வீட்டு பெண்கள் வேலைக்கு போவார்கள். சனி ராகு தொடர்பு கூடாது. #padmahazan 


6ல் மீன சுக்ரன், அபரிவிதமான ஆடம்பர செலவு தருவார், கடன் தொல்லை உண்டு, சனி ராகு செவ் தொடர்பு பெற மர்ம நோயால் அவதி, அறுவை சிகிச்சை உண்டு. தனித்து இருக்க சுப கடனும், உயர் உத்தியோகமும் இருக்கும். உச்சமானாலும் வாழ்க்கை போராட்டமே.


7ல் மேஷ சுக்ரன் வாழ்க்கை துணை மேல் பாசம் உண்டு, பெண் வாடிக்கையாளர்கள் நண்பர்கள் அதிகம் உண்டு. ஆயினும் கணவன் மனைவி சிறு சிறு கருத்து வேறுபாட்டை தரும். நில சேர்க்கை உண்டு. செவ் சேர்க்கை கூடாது.


8ல் ரிஷப சுக் வெளிநாடு வெளியூர் வாழும் நிலை, திடீர் பணம் உண்டு, பெண்களால் மேன்மை நிலை, வெளி இடங்களில் மணவாழ்க்கை தரும் அல்லது வாழ்க்கை துணை சுப பிரிவை தரும். சனி ராகு தொடர்பு பெற இல்லறம் கசக்கும். போகம் குறைவு. 


9ல் மிதுன சுக் தந்தை வழி ஆதரவு, கடவுள் அனுகிரகம், இறைபக்தி, மனைவி வழி சிறப்பு அனைத்தும் பெறுவார். புதன் சேர்க்கை மாமன் வழி துணை தரும். 9ல் சுக்ரன் யோகம் #padmahazan .


10ல் கடக சுக்ரன் வியாபார தந்திரம் உண்டு, மாமியார் வழி ஆதரவு சிறப்பு, துணிக்கடை, பேன்சி ஸ்டோர் போன்ற பெண்கள் நிறைந்த தொழில் வாய்ப்பு உண்டு. 


11ல் சுக்ரன் பெண்களால் முன்னேற்றம் வளர்ச்சி உண்டு, எதையும் லாப நோக்கில் காண்பவர்.


12ல் சுக்ரன் நீசமானாலும் சனி ராகு தொடர்பு கூடாது புதன் சேர்க்கை யோகம். தூர இடங்களில் வாழ்க்கை தரும், அளவான இல்லறம் சுக போகம் இருக்கும். 


சுக்ரன் 1 4 5 9 யோகம், 2 6 10 11ல் சுப பலன் உண்டு, 3 7 8 12ல் சுப பலன் குறைவு. 


மேலே சொன்னவை பொதுவான பலன்களே, வீடு கொடுத்த கிரக வலு, நடப்பு தசா புத்தி ஏற்ப பலன் கொஞ்சம் அல்லது முழுமையாக மாறுபடும். பொதுபலன். 


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


#சுக்ரன் #புதன் #சனி #சூரியன் #சந்திரன் #செவ்வாய் #குரு #ராகு #கேது #துலாம் #ரிஷபம் 


🤩 #padmahazan 🤩

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...