மிதுன லக்னத்திற்கு லக்னத்தில் ஆட்சி பெற்ற புதன் ஜாதகருக்கு நல்ல செல்வாக்கு அந்தஸ்து நிலை தரும். படிப்பு அறிவு புத்திசாதுர்ய நிலைகளில் ஜாதகர் சிறப்பு பெறுவார். #padmahazan
2ல் கடகத்தில் புதன் இருக்க தனம் குடும்ப நன்றாகவும் பேச்சில் வித்தகராகவும் இருப்பார். தாயார் மீது பாசமுண்டு ஆனால் சுமூகமான சூழல் குறைவு.
3ல் சிம்மத்தில் இருக்க சங்கீதம் கவிதை ஞானம் நன்றாகவும் இளைய சகோதர பாசம், தொடர் முயற்சி, புகழ் போன்றவற்றை தருவார். தந்தை வழி சொத்து அரசு தொடர்பு நன்மை
4ல் கன்னியில் தனித்து இருக்க கல்வியை கெடுத்து அதீத புத்திகூர்மையை தருவார். வியாபார தந்திரம் உண்டு. பாவர் தொடர்பில் கேந்திர தோசம் பெறாமல் இருப்பது சிறப்பு.
5ல் துலாத்தில் இருக்க யோகமான அமைப்பு. நல்ல மணவாழ்க்கை அதிர்ஷ்டம், பூர்வீக நன்மை, நல்ல பிள்ளைகள் அவர்கள் வழி சிறப்பை தருவார். #padmahazan
6ல் விருச்சிகத்தில் இருக்க சுபமற்ற அமைப்பு. கடன் நோய் எதிரி தொல்லை மிகுதியாக இருக்கும். செவ்வாயோடு சேர்க்கை பெற நிலத்தால் வாழ்க்கை சிக்கல்.
7ல் தனுசில் இருக்க வாழ்க்கை துணை வாடிக்கையாளர் மீது அன்பு அக்கறை அதிகம். இவர்களால் பாதகங்களை சந்திக்க வேண்டிய சூழல் புத தசாவில்.
8ல் மகரத்தில் இருக்க பாவ தொடர்பு இல்லாமல் இருந்தால் தூர தேச வாழ்க்கை உயில் திடீர் பணவரவு வீடு கட்டும் நிலை தரும். பாவ தொடர்பில் இருக்க ஆயுள் குறை அவமானம் உண்டு.
9ல் கும்பத்தில் பாவர் தொடர்பு இல்லாமல் இருக்க தந்தை வழி கடவுள் பக்தி பாக்கியம் வேலையாட்கள் வழி மேன்மை உயர்படிப்பு போன்றவற்றில் சிறப்பை தரும். நல்ல அமைப்பு. #padmahazan
10ல் மீனத்தில் நீசபங்கம் பெறாமல் இருக்க வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாத நிலை. தொழிலால் கீழ்நிலை அடைதல் சாதுர்யம் புத்திசாலி தனம் குறைவு போன்ற பலன். நீசபங்கம் பெற அதீத புத்தி கூர்மை பின்வாழ்க்கையில் சிறப்பு தரும்.
11ல் மேஷத்தில் இருக்க லாபம் முன்னேற்றம் மூத்த சகோதர நன்மை தரும். நில சேர்க்கை உண்டு. நல்ல அமைப்பு. #padmahazan
12ல் ரிஷபத்தில் இருக்க தூர தேச வாழ்க்கை விரையங்கள் தூக்கம் போக உணர்வு அதிகம் தரும். தன பண சேர்க்கை எண்ணம் இருந்தாலும் விரையமாகும். தூர இடங்களில் தன சேர்க்கை இருந்தால் சிறப்பு உண்டு.
பாவர் சேர்க்கை பார்வை இல்லாமல் இருந்து சுபர் பார்வை பெற்று இருப்பது மேன்மை.
6 8 12ல் பாவர்களால் பாதித்து புதன் இருப்பது கஷ்டபலனையே அதிகமாக தருவார்.
No comments:
Post a Comment