🍁❄🌟 7 அதிபதி 6 8 12 ல் மறைவு பலன்கள் 🌟❄🍁 #hazan
வேத ஜோதிடத்தில் சொல்லபட்ட 7ம் அதிபதி கிரகம் ஒருவரது
💥 கணவன் / மனைவியின் அந்தஸ்து கௌரவம்
💥கணவன்/ மனைவியின் குணம்
💥கணவன்/ மனைவியால் உண்டாக கூடிய ஆதரவு
💥கணவன்/ மனைவி உடனான இல்லற வாழ்க்கையை குறிக்கும்.
❄மறைவு ஸ்தானங்கள் என்னும் 6 8 12 ல் அந்த 7ம் அதிபதி மறைவதால் உண்டாகும் பலன்களை இந்த பதிவில் காண்போம்.❄
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
⛔6ம் இடத்தில் 7ம் அதிபதி மறைவது ⛔
💥6ம் இடம் கடன் நோய் எதிரியை தரும் பாவகம்,
💥இங்கே ஏழாம் அதிபதி இருப்பது சிறப்பு கிடையாது,
💥ஏழாம் அதிபதி ஏழாம் வீட்டிற்கு 12ல் மறைவதாக அமையும்.
💥ஜாதகரது வாழ்க்கை துணையான கணவரோ மனைவியோ உடல்நல பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கும் நபராக இருப்பார்.
💥வாழ்க்கை துணையால் நோய் சார்ந்த கடன், அல்லது
💥அதிகமாக விரையம் செய்யும் கணவரால்/ மனைவியால் ஜாதகர் கடன் பெற வேண்டி இருக்கும்.
💥ஜாதகரது கணவன்/ மனைவி முற்றிலும் மாறுபட்ட ஜாதகருக்கு எதிராக சிந்தனை செயல்பாடு பேச்சுக்களை கொண்டவராக இருப்பார்கள்.
💥சில நிலைகளில் இத்தகைய அமைப்பு திருமணமான பின் ஜாதகருக்கு வேலை கிடைப்பது அல்லது உத்தியோக உயர்வு தரும்.
💥சில நிலைகளில் வாழ்க்கைத் துணை உடனான பெரும் பிரச்சனை வம்பு வழக்கு பஞ்சாயத்து போன்றவற்றை தரும், பிரிவு தருமா இல்லையா என்பது அந்த ஏழாமதிபதி பெறும் வலுவை பொறுத்தது
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
⛔7ம் அதிபதி 8ல் மறைவது ⛔
💥மறைவு வாழ்க்கை
💥 திடீர் அதிர்ஷ்டம்,
💥கண்டம்,
💥தூர இடங்களில் வசிப்பது, போன்றவற்றை குறிக்கும் இடமான 8ம் இடத்தில் ஏழாமதிபதி இருப்பது...
💥ஜாதகரது வாழ்க்கை துணை அதிகபடியான பணம் பொருள் மீதான ஆசை கொண்டவராக இருப்பார், #padmahazan
💥அதனை சம்பாதிக்கும் பொருட்டாக வெளிநாடு வெளி ஊர்களில் பிரிந்து வாழ்வது அல்லது
💥தூர இடங்களில் தினமும் அலைந்து திரிந்து சம்பாதிக்கும் விதமான கணவரோ மனைவியோ அமைவார்கள்.
💥அதே சமயம் வாழ்க்கை துணைக்கு திடீர் உடல்நல பாதிப்பு,
💥கண்டம்,
💥 தற்காலிக / நிரந்தர பிரிவினால் உண்டாக கூடிய அதிகபடியான மன அழுத்தம்,
💥வாழ்க்கை துணை பற்றி மாறுபட்ட சந்தேக குணம், போன்ற காரணத்தால்
💥ஜாதகரது மனம் அதிகபடியான கவலையை பெறும்.
💥சில நிலைகளில் வாழ்க்கை துணையின் இன்சூரன்ஸ்,
💥பங்கு வர்த்தக முதலீடு தொகை,
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥சேமிப்பு பணம்
💥ஜீவனாம்சம் ஜாதகருக்கு கிடைக்கும்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
⛔7ம் அதிபதி 12ல் மறைவது ⛔
🦋மூன்பு சொன்ன பலன்களின் கூட்டு பலன் இங்கே நடக்கும்...🦋 #padmahazan
💥வாழ்க்கை துணை நோய்வாய்பட்டவர்,
💥வாழ்க்கை துணை அதிகபடியான விரையம் அல்லது நஷ்டங்களை அடைந்து,
💥அதை ஜாதகர் அடைக்கும் விதமாக வாழ்க்கை துணை கடனை ஜாதகர் தலையில் கட்டி விடுவார்.
💥வாழ்க்கை துணை தூர இடங்களில் வசித்தாலும் அதனால் உண்டாகும் பணம் கடனில் கரைவது,
💥அதிகபடியான செலவால் செல்வ சேர்க்கை இல்லாமல் போவதும் நடக்கும்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🌟மேலே சொன்ன பலன் அனைவருக்கும் அப்படியே நடக்காது, அவரவர்கள் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி 6 8 12ல் பெறும் பகை,சம, நட்பு, ஆட்சி போன்ற வலு ஏற்ப,
பிற கிரகங்கள் பார்வை இணைவை பொறுத்து பலனில் மாற்றம் இருக்கும். 🌟
❄பொதுவாக ஏழாம் அதிபதி 6 8 12ல் மறைவது சிறப்பு கிடையாது, வாழ்க்கை துணை வழியான ஏதாவது ஒரு பாதிப்பை கண்டிப்பாக கொடுக்கும், அதற்கு ஈடுகட்டும் விதமாக பொருளோ பணமோ வேறு விதமான லாபத்தை தரும்.❄
🌟🌟🌟ஏழாம் அதிபதி 3 11 , 4 10, 5 9 , இடங்களில் சுப அமைப்பில் இருப்பது நல்லது. 🌟🌟🌟
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
#padmahazan
No comments:
Post a Comment